Published:Updated:

``செந்தில் பாலாஜி இன்னும் இணையாத கட்சி, தேமுதிக மட்டும்தான்!" - கரூரில் பிரேமலதா காட்டம்

பிரேமலதா

`தி.மு.க-வினர் வேட்பாளர்களை மிரட்டி வெற்றிபெற்றுவிடலாம் என நினைக்கின்றனர். அது என்றைக்கும் நடக்காது. தே.மு.தி.க தலைவரைப்போல நேர்மையாக உள்ளவர்களுக்கு மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.' - பிரேமலதா.

``செந்தில் பாலாஜி இன்னும் இணையாத கட்சி, தேமுதிக மட்டும்தான்!" - கரூரில் பிரேமலதா காட்டம்

`தி.மு.க-வினர் வேட்பாளர்களை மிரட்டி வெற்றிபெற்றுவிடலாம் என நினைக்கின்றனர். அது என்றைக்கும் நடக்காது. தே.மு.தி.க தலைவரைப்போல நேர்மையாக உள்ளவர்களுக்கு மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.' - பிரேமலதா.

Published:Updated:
பிரேமலதா

கரூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர்களை ஆதரித்து, பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,

``தி.மு.க-வினர் வேட்பாளர்களை மிரட்டி வெற்றிபெற்றுவிடலாம் என நினைக்கின்றனர். அது என்றைக்கும் நடக்காது. தே.மு.தி.க தலைவரைப்போல நேர்மையாக உள்ளவர்களுக்கு மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க பனங்காட்டு நரி, எந்தச் சலசலப்புக்கும் அஞ்சாது. தி.மு.க-வினர் கட்சியும், ஆட்சியும் நடத்த வேறு கட்சியிலிருந்து மிரட்டி தங்கள் கட்சியில் இணைத்துப் போட்டியிடவைத்து, கவுன்சிலராக அமரவைக்கப் பார்க்கின்றனர். தி.மு.க-வினர் கட்சி நடத்த அவர்கள் கட்சியில் ஆட்களே இல்லையா? 50 வருடங்களாக தி.மு.க கட்சி நடத்துகிறோம் என்று கூறுவதில் வெட்கமாக இல்லையா? கரூர் மாவட்டத்திலுள்ள அமைச்சர் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் சென்றுவிட்டு, தற்போது தி.மு.க-வில் ஐக்கியமாகியுள்ளார். இன்னும் அவர் இணையாத கட்சி தே.மு.தி.க மட்டும்தான். அதிலும் ஒருநாள் இணைவார் என்று நினைக்கிறேன்.

பிரசாரத்தில் பிரேமலதா
பிரசாரத்தில் பிரேமலதா

கரூரில் பிரசாரம் மேற்கொள்வதற்கு போலீஸார் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது, கொடிகள் கட்டக் கூடாது எனப் பல்வேறு இடையூறுகளை தே.மு.தி.க மாவட்டச் செயலாளருக்கு ஏற்படுத்துகின்றனர். ஆனால், இன்று கரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு இடங்களில் ஒலிபெருக்கிகள், கொடிகள் கட்டப்பட்டு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. போலீஸாருக்கு அதெல்லாம் கண்ணில் தென்படவில்லையா? கரூர் நகரத்தில் நிரந்தரமாக 25 ஆண்டுகளாக சிறிய பேருந்து நிலையம் மட்டுமே செயல்பட்டுவருகிறது. புதிய பேருந்து நிலையம் அமைப்பதாக உறுதியளித்து பூமி பூஜை மட்டுமே தொடங்குவதை இங்குள்ள அமைச்சர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். வெறும் அடிக்கல்லைவைத்து என்ன செய்வது? கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கரூர் நகரத்துக்குப் புதிய பேருந்து நிலையம் அமைத்துத் தர தே.மு.தி.க குரல்கொடுக்கும் என வாக்குறுதி அளிக்கிறேன்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல, தி.மு.க தலைவர் கலைஞர் போட்டியிட்ட முதல் தொகுதி குளித்தலை என்று கூறுகின்றனர். ஆனால், குளித்தலை நகராட்சியிலும் பேருந்து நிலையத்துக்கு நிரந்தர இடமின்றி கோயில் நிலத்தில் வாடகைக்கு இயங்கிவருகிறது. தி.மு.க கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே கரூர் மாவட்டத்தில் முக்கியக் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கீடு வழங்கிவிட்டு, அங்கு சுயேச்சையாக தி.மு.க பொறுப்பாளர்களை நிறுத்தி கூட்டணி தர்மத்தை மீறிவருகிறது. அந்தவகையில், தே.மு.தி.க யாரிடமும் கூட்டணி வைக்காமல் தனியாகத் தேர்தலைச் சந்திக்கிறது. வெற்றியோ, தோல்வியோ தே.மு.தி.க தன்மானத்தோடு தேர்தல் களத்தில் நிற்கிறது. இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பணக்காரர்கள் இல்லை. அதிகாரத்தில் உள்ளவர்கள் இல்லை. சாதாரணமான ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு நீங்கள் நிச்சயம் இந்தத் தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும்.

பிரசாரத்தில் பிரேமலதா
பிரசாரத்தில் பிரேமலதா

கரூர் மாவட்டத்தில் தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைந்ததும், ஐந்து நிமிடங்களில் உள்ளூர் தேவைக்கு மணல் வண்டிகள் ஆற்றில் மணல் அள்ளலாம் என்று கூறினர். ஆனால், இன்றுவரை அது நடக்கவில்லை. ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தி.மு.க தலைவர் கூறினார். இதுவரை வழங்கவில்லை. அதேபோல், நகைக்கடன் தள்ளுபடி, பொங்கல் தினத்தில் ஆயிரம் ரூபாய் வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க-வினர், மக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், தே.மு.தி.க சார்பில் உள்ளதைச் சொல்லி மக்களிடம் ஓட்டுக் கேட்கிறோம். எனவே, உங்களுக்காக உண்மையாக உழைக்கக் காத்திருக்கிற தே.மு.தி.க வேட்பாளர்களை நீங்கள் பெற்றிபெற வைக்க வேண்டும்" என்றார்.