Published:Updated:

`ராஜேந்திர பாலாஜி மட்டும்தான் மதிப்பதில்லை!'- கொடிக் கம்ப நிகழ்ச்சியில் கொந்தளித்த பிரேமலதா

பிரேமலதா

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் கூட்டத்தில், ``குட்டக் குட்ட குனிய மாட்டோம்'' எனக் கூட்டணி குறித்து பிரேமலதா பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததால் இந்தக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

`ராஜேந்திர பாலாஜி மட்டும்தான் மதிப்பதில்லை!'- கொடிக் கம்ப நிகழ்ச்சியில் கொந்தளித்த பிரேமலதா

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் கூட்டத்தில், ``குட்டக் குட்ட குனிய மாட்டோம்'' எனக் கூட்டணி குறித்து பிரேமலதா பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததால் இந்தக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

Published:Updated:
பிரேமலதா

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20-ம் ஆண்டு கொடி நாள் நிகழ்ச்சியையொட்டி, இன்று அக்கட்சியின் தலைமைக் கழகமான கோயம்பேடு அலுவலகத்தில் 118 அடி உயர கொடிக் கம்பம் திறப்புவிழா நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி அலுவலத்தில் இருக்கும் 150 அடி கொடிக் கம்பத்தை அடுத்து தமிழக அளவில் இரண்டாம் பெரிய கொடிக் கம்பமாக இது நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ், விஜயகாந்தின் மகன்கள் சண்முகபாண்டியன், விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

சில நாள்களுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் கூட்டத்தில், ``குட்டக் குட்ட குனிய மாட்டோம்'' எனக் கூட்டணி குறித்து பிரேமலதா பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததால் இந்தக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

`ராஜேந்திர பாலாஜி மட்டும்தான் மதிப்பதில்லை!'- கொடிக் கம்ப நிகழ்ச்சியில் கொந்தளித்த பிரேமலதா

விஜயகாந்த் வருவதற்கு முன்பாக தொண்டர்கள் சோர்ந்துபோய் விடக் கூடாது என்பதற்காக கிராமியக் குழுவின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் களைகட்டின. சரியாக 11 மணி அளவில் தனது குடும்பம் சகிதமாக விஜயகாந்த் கோயம்பேடு தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்தார். இன்னும் உடல்நிலை சரியாகவில்லை என்பதால் மெதுவாக நடந்துவந்தாலும் வழக்கத்துக்கு மாறான உற்சாகத்துடன் காணப்பட்ட விஜயகாந்த் முதலில் 118 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு, இரண்டு கைகளையும் தூக்கி வெற்றிக் குறியீடு காண்பிக்கவே, தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் கூட்டம் தொடங்கியது. முதலில் தே.மு.தி.க கொடி உருவான வரலாற்றை காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன் விளக்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது, 118 அடி உயர கம்பம் 2 டன் எடையைக் கொண்டது என்று சொல்வதற்குப் பதிலாக 20 டன் எடை எனக் கூறிவிட்டார். பின்னர் சுதாரித்துக்கொண்டு உண்மையைச் சொல்ல முற்படுகையில், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

இதன்பின் பேசிய பிரேமலதா, ``இதுபோன்ற ஒரு கொடிக் கம்பத்தை அமைக்க மற்ற கட்சிகள் கடை கடையாகச் சென்று வசூல் செய்து இதைச் செய்து முடித்திருப்பார்கள். ஆனால், தே.மு.தி.க அப்படிச் செய்யவில்லை. இப்போது எத்தனையோ மாநிலங்களில் யார் யாரோ முதல்வராக வருகிறார்கள். அப்படி வருகிறவர்கள் யாருடைய பாலிஸியைப் ஃபாலோ செய்கிறார்கள் என்றால், அது விஜயகாந்த் பாலிஸிதான்.

`ராஜேந்திர பாலாஜி மட்டும்தான் மதிப்பதில்லை!'- கொடிக் கம்ப நிகழ்ச்சியில் கொந்தளித்த பிரேமலதா

முதல் தேர்தல் அறிக்கையிலேயே வீடு தேடி ரேஷன் அரிசி கொண்டுவரும் திட்டத்தைக் கொண்டுவந்தது தே.மு.தி.க-தான். இதைத்தான் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் செயல்படுத்தி நல்ல முதல்வர் என்று பெயர் எடுத்து வருகிறார். லஞ்சம், ஊழலை ஒழிப்போம் என விஜயகாந்த் கூறியதைத்தான் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி ஆட்சியைப் பிடித்துள்ளார். அவருடைய பாலிஸியை எடுத்து மற்ற மாநிலங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதை நாம் இங்கிருந்து சூப்பர் என்று பேசிக் கொண்டிருக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல் விஜயகாந்துக்கு ஒரே ஒரு வாய்ப்பை தந்திருந்தால் இதுபோன்ற ஒரு லட்சம் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பார். ஆனால், மக்கள் தவறிவிட்டனர். மக்கள் புரிந்துகொண்டு மாற்றத்தைத் தர வேண்டும். தே.மு.தி.க-வின் கொள்கை என்ன எனக் கேட்பவர்களுக்கு தே.மு.தி.க-வின் கொள்கை கட்சியின் கொடியிலேயே உள்ளது. இன்னைக்கு தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவையே மதம், சாதியைச் சொல்லி துண்டாடிக்கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகள்தான் நாடு முழுவதும் இருக்கின்றன. சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு நாம் உள்ளோம் என்பதைக் காண்பிக்கும் வகையில் தே.மு.தி.க கட்சியின் கொடி உள்ளது" என்றவர்,

`ராஜேந்திர பாலாஜி மட்டும்தான் மதிப்பதில்லை!'- கொடிக் கம்ப நிகழ்ச்சியில் கொந்தளித்த பிரேமலதா

கடந்த கூட்டத்தில் பேசியது தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார். அதில், ``நான் எவ்வளோ நல்லது சொல்லியிருக்கிறேன். ஆனால், நான் அன்றைக்குச் சொன்னது சர்ச்சையாகியிருக்கிறது. குட்டக் குட்ட குனிய மாட்டோம் என சொல்லியவுடன் உடனே கூட்டணியில் விரிசலா என்று கேட்கிறீர்கள். கூட்டணி தர்மத்தை என்றைக்கும் மதிக்கும் கட்சி தே.மு.தி.க-தான். துளசி வாசம் மாறினாலும் மாறும், ஆனால் தவசியின் வாசம் மாறியதில்லை என்பதற்கு உதாரணம் விஜயகாந்த்.

என்னுடைய பேச்சின் உள்ளர்த்தம் கூட்டணி தர்மத்தைக் கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே அப்படிச் சொன்னேன். கூட்டணி என்றால் எல்லாரும் தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் அது கூடா அணியாக ஆகி, கூட்டணியில் பிளவு ஏற்பட்டு எதிர் அணி வெற்றி பெற்றுவிடும். தே.மு.தி.க தொண்டர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு உழைக்க வேண்டும். தே.மு.தி.க-வைச் சுற்றி சூழ்ச்சிகளும் துரோகங்களும் நடக்கின்றன. இதை வென்றெடுக்க விஜயகாந்த் மீண்டும் வந்துவிட்டார்" என்றவர் குட்டிக் கதை ஒன்றைச் சொல்லி அமர்ந்தார்.

பின்னர் பேசிய விஜயகாந்த், ``சவுண்டு கேக்குதா'' என்றுகூறிவிட்டு தொண்டர்களுக்கு கொடி நாள் வாழ்த்து சொன்னார். அதன்பின் அவரால் நீண்ட நேரம் பேச முடியவில்லை.

`ராஜேந்திர பாலாஜி மட்டும்தான் மதிப்பதில்லை!'- கொடிக் கம்ப நிகழ்ச்சியில் கொந்தளித்த பிரேமலதா

கவனம் ஈர்த்த சிறுமி!

கூட்டம் தொடங்கிய சிறிதுநேரத்திலேயே காஞ்சிபுரம் தே.மு.தி.க தொண்டர் ஒருவரின் மகள் அனுஷ்கா என்ற சிறுமி பேசவந்தார். விஜயகாந்த் குறித்து பேசிய அவரின் பேச்சை அங்கிருந்தவர்கள் ரசித்துக் கேட்டனர். விஜயகாந்த்தும் அவரது குடும்பமும் சிறுமியின் பேச்சால் நெகிழ, பின்னர் சிறுமியை அழைத்து அவர்கள் பாராட்டியதுடன், சிறுமிக்கு கைகொடுத்து மடியில் அமர வைத்து பாராட்டு தெரிவித்தார், விஜயகாந்த்.

உட்கட்சி பூசலால் சலசலப்பு!

கூட்டம் முடிந்தபின் தலைமைக் கழக அலுவலகத்துக்குள் சென்ற விஜயகாந்த் சிறிதுநேர ஓய்வுக்குப் பின் வீட்டுக்குச் சென்றார். சிறிதுநேரத்தில் பிரேமலதாவுடன் புறப்படத் தயாரானார். அப்போது அவரைச் சூழ்ந்துகொண்டு விருதுநகர் மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகள், மாவட்டத்தில் நிலவும் உட்கட்சிப் பூசல் குறித்தும் மாவட்டச் செயலாளர் செய்யது காஜாசெரீப் குறித்தும் புகார்களை அடுக்கடுக்காக தெரிவித்தனர். கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் சிலர், ``மாவட்டச் செயலாளர் காஜாசெரீப் நிர்வாகிகளை மதிப்பதில்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் சேர்ந்துகொண்டு உள்ளாட்சித் தேர்தலில் நமது கட்சி நிர்வாகிகளுக்கே சீட் கொடுக்க மறுத்துவிட்டார்.

காஜாசெரீப்
காஜாசெரீப்

அவரால் ஒவ்வொரு நாளும் விருதுநகர் மாவட்ட கட்சியில் பிரச்னைகள்தான். இப்போது சென்னையில் நடக்கும் விழாவுக்குக்கூட நாங்கள் வரும்போது எங்களைத் தடுக்கப் பார்த்தார். சென்னை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறவர்கள் யாருக்கும் நகர்ப்புறத் தேர்தலில் சீட் கொடுக்க மாட்டேன் என்று வெளிப்படையாக கூறுகிறார்" என்று புகார்களை அள்ளிவீச டென்ஷனாகிப் போனார் பிரேமலதா.

``உங்களுக்கு எத்தனை தடவைதான் பஞ்சாயத்து பண்ணுறது. ஒரு மாவட்டத்தில் எத்தனை குழுக்களாக பிரிந்து அரசியல் பண்ணுவீங்க. உள்ளாட்சித் தேர்தல்ல அங்க என்ன நடந்துச்சுன்னு எங்களுக்கும் தெரியும்.

மற்ற மாவட்டங்களில் கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்கறாங்க. மற்ற மாவட்ட அமைச்சர்களிடம் நாங்கள் பேசிக்கொண்டுதான் இருந்தோம். ஆனால், ராஜேந்திர பாலாஜி மட்டும்தான் எங்களை மதிப்பதில்லை. அவர்கிட்ட நாங்க பேச முயற்சி பண்ணியபோதும் அவரு எங்களை மதிக்கவில்லை. செரீப் மாதிரி நூறுபேரை பார்த்திருக்கிறோம்.

யாரை மாவட்டச் செயலாளராகப் போட்டாலும் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கெல்லாம் யார் காரணம், மாவட்டத்தில் யார் பிரச்னை ஏற்படுத்துகிறார்கள் என்பதை கேப்டன் கண்டுபிடித்துவிட்டார். உறுதியாக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை எடுக்கும் முடிவுக்கு நீங்கள் கட்டுப்பட்டு வேலை பாருங்கள். உட்கட்சி பூசல் செய்யாமல் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைத்து வேலை பாருங்கள்" என்று அட்வைஸ் சொல்லி அனுப்பினார். இதனால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism