Published:Updated:

``பிரதமர் மோடி, சர்வாதிகாரி ஹிட்லரைப் பின்பற்றுகிறார்” - சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் காட்டம்

பிரதமர் மோடி, சஞ்சய் ராவத்

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரைப் பின்பற்றுவதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

``பிரதமர் மோடி, சர்வாதிகாரி ஹிட்லரைப் பின்பற்றுகிறார்” - சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் காட்டம்

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரைப் பின்பற்றுவதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
பிரதமர் மோடி, சஞ்சய் ராவத்

சிவசேனா, பாஜக இடையே கடுமையான மோதல் இருந்துவருகிறது. சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் அடிக்கடி பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். இதனால் அவரைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொந்தரவு செய்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது சஞ்சய் ராவத் மீண்டும் பிரதமர் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். இது தொடர்பாக சஞ்சய் ராவத் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், ``பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை நேசிக்கிறார். ஹிட்லர் செய்த பல காரியங்களை மோடி செய்கிறார். ஹிட்லரைப் பின்பற்றுகிறார். இப்போது ஹிட்லரை யாராவது புகழ்ந்து பேசினால் அது தேசத்துரோகம் கிடையாது. பிரபலமான தலைவர் என்ற முறையில் மறைந்த பால்தாக்கரேகூட ஹிட்லரைப் பாராட்டியிருக்கிறார். தற்போது மோடி செய்யக்கூடிய பலவற்றை ஹிட்லர் செய்திருக்கிறார்.

ஹிட்லர்
ஹிட்லர்

ஹிட்லர் என்ன செய்தாரோ அதைத்தான் மோடியும் அவரது கட்சியினரும் செய்கின்றனர். நான் பிரதமர் மோடியை விமர்சிக்கவில்லை. மோடி உண்மையில் ஹிட்லரை நேசிக்கிறார். ஹிட்லர் 1936-ம் ஆண்டு ஜெர்மனியில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தினார். ஹிட்லர் புகழ்பெற்ற தலைவராக இருந்து பின்னர் தோற்கடிக்கப்பட்டார்” என்று தெரிவித்தார்.

சஞ்சய் ராவத் உறவினர்களின் இல்லங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சமீபத்தில் ரெய்டு நடத்தினார்கள். அதோடு சஞ்சய் ராவத் மனைவி பெயரில் இருந்த வீடு ஒன்றையும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடக்கினர். சஞ்சய் ராவத் மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மைத்துனர் அலுவலகத்தில் ரெய்டு நடத்தி அவரின் பல வீடுகளையும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் பாஜக, சிவசேனா இடையே இருந்த உறவில் விரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism