Published:Updated:

``ஆவின் பொருள்களில் லேபில் ஒட்டி விற்கும் தனியார் நிறுவனங்கள்” - `விலையுயர்வு’ காரணம் சொல்லும் நாசர்

ஆவின்

தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்திய நிலையில், அரசின் ஆவின் நிறுவனம் பால் பொருள்களின் விலையை திடீரென உயர்த்தியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

``ஆவின் பொருள்களில் லேபில் ஒட்டி விற்கும் தனியார் நிறுவனங்கள்” - `விலையுயர்வு’ காரணம் சொல்லும் நாசர்

தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்திய நிலையில், அரசின் ஆவின் நிறுவனம் பால் பொருள்களின் விலையை திடீரென உயர்த்தியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

Published:Updated:
ஆவின்

ஹெரிடேஜ், டோட்லா, ஜெர்சி, திருமலா ஆகிய நான்கு தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாயை சமீபத்தில் உயர்த்தின. அந்த அதிர்ச்சியே விலகாத நிலையில், தற்போது அரசு பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பால் பொருள்கள் விலையைக் கடுமையாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில்தான் பால் பொருள்கள் விலை உயர்த்தப்பட்டிருந்தன.

ஆவின் பால் பொருள்கள்
ஆவின் பால் பொருள்கள்

விலையேற்றத்துக்குப் பிறகான புதிய விலைப்பட்டியலை ஆவின் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, நெய் 200 எம்.எல் 5 ரூபாய் உயர்த்தப்பட்டு 120 ரூபாயாகவும், 500 எம்.எல் 10 ரூபாய் உயர்த்தப்பட்டு 275 ரூபாயாகவும், ஒரு லிட்டர் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 535 ரூபாயாகவும் உள்ளது. அதே ஆவின் நெய் 5 லிட்டர் ஜார் 100 ரூபாய் உயர்த்தப்பட்டு 2,650 ரூபாயாகவும், 15 கிலோ டின் 330 ரூபாய் உயர்த்தப்பட்டு 8,680 ரூபாயாகவும் உள்ளது. ஸ்கிம்டு மில்க் பவுடர் எனப்படும் பால் பவுடர் அரை கிலோ 20 ரூபாயும், ஒரு கிலோ 40 ரூபாயும் உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நறுமண பால் 200 எம்.எல் இரண்டு ரூபாய் உயர்ந்து, 30 ரூபாயாக உள்ளது. குல்ஃபி பார் 60 எம்.எல் 25 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும், பாதாம் பவுடர் 200 கிராம் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும் விலையேற்றப்பட்டிருக்கிறது. தயிரைப் பொறுத்தவரை ஒரு ரூபாயிலிருந்து மூன்று ரூபாய் வரையிலும், வென்னிலா/சாக்லெட் ஐஸ்க்ரீம்கள் இரண்டு ரூபாயும் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன.

ஆவின் புதிய விலைப்பட்டியல்
ஆவின் புதிய விலைப்பட்டியல்

இந்தத் திடீர் விலை உயர்வுக்கு என்ன காரணம்... தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவர் பொன்னுசாமியிடம் கேட்டோம். “ஆவின் பால் கொள்முதலிலும், விற்பனையிலும் அரசுக்கோ, அரசு அதிகாரிகளுக்கோ, அமைச்சருக்கோ விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த தி.மு.க ஆட்சியின் இறுதியில் பால் கொள்முதல் 20 லட்சம் லிட்டராக இருந்தது.

அ.தி.மு.க அரசுப் பொறுப்பேற்றதும் கொள்முதலை உயர்த்த ஜெயலலிதா முயற்சி எடுத்தார். அப்போது அப்துல் கலாமின் அறிவியல் உதவியாளராக இருந்த பொன்ராஜ் கொடுத்த ஐடியாவின்படிதான் விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்பட்டன. அதன் மூலம் கொள்முதல் உயர்ந்தது.

பொன்னுசாமி
பொன்னுசாமி

படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு நாளைக்கு 39 லட்சம் லிட்டர் பால் ஆவினால் கொள்முதல் செய்யப்படுகிறது. மீண்டும் தி.மு.க அரசு வந்திருப்பதால், மேலும் கொள்முதலை உயர்த்தவோ, விற்பனையை அதிகரிக்கவோ எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, தனியாருக்குச் சாதகமாக ஆவின் அதிகாரிகள் நடந்துகொள்கிறார்கள்.

ஆவின் ஃபுல் க்ரீம் (ஆரஞ்சு) பால் விலை ஒரு லிட்டர் 48 ரூபாய். அதுவே, தனியாரிடம் 66 ரூபாய். 18 ரூபாய் விலை அதிகமாகியும் ஆவின் விற்பனை உயர்ந்தபாடில்லை. அதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. பால் முகவர்களுக்கு கமிஷன் தொகை குறைவாகக் கொடுப்பதும், நேரடித் தொடர்பு இல்லாததும் இதற்கான காரணங்களுள் அடங்கும்.

ஆவின் நெய், தயிர் உள்ளிட்டவை
ஆவின் நெய், தயிர் உள்ளிட்டவை

தனியார் பால் நிறுவனங்களிடம் `பலன் பெறும்’ சில அதிகாரிகள், தனியார் பாலும், பால் பொருள்களும் அதிகம் விற்பனையாக வேண்டும் என்பதற்காக சில வேலைகளைச் செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் இந்தப் பால் பொருள்கள் விலையேற்றம். ஆவினில் விலை அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் தனியாரை நோக்கிச் செல்வார்கள்.

அதன் மூலம், தனியாருக்கு லாபம் பெருகும், தங்களுக்கும் பலன் கிடைக்கும் என்பதே அதிகாரிகளின் நோக்கம். ஆட்சி அமைந்ததும் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து முதல்வர் முதல் கையெழுத்திட்டார். அந்த இழப்பை ஈடுசெய்ய நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், சரியாக எல்லா தேர்தலும் முடிந்த பின்னர் விலை ஏற்றிவிட்டனர்” என்றார்.

பால் பொருள்கள்
பால் பொருள்கள்

பால்வளத்துறை அமைச்சர் நாசரிடம் விளக்கம் கேட்கத் தொடர்புகொண்டோம். ``515 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் நெய் விலை 535-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், தனியார் நெய் பார்த்தீர்களானால், ஒரு நிறுவனத்தில் ஒரு லிட்டர் நெய் 695 ரூபாய், மற்றொரு பிரபல நிறுவனத்தில் நெய் 650 ரூபாய் என எல்லாமே ஆவினைவிட இப்போதும் விலை உயர்வுதான். நைக் ஷூ, லக்ஸ் சோப், யமஹா, ஹுண்டாய் என எப்படி இவற்றுக்கெல்லாம் உலகளாவிய மார்கெட் இருக்கிறதோ, அதேபோல ஆவினுக்கும் உலகளாவிய மார்கெட் உள்ளது. எந்தவித வியாபார நோக்கமுமின்றி மக்கள் சேவையாக அரசு செய்கிறது.

சில தனியார் நிறுவனங்கள் 515 ரூபாய்க்கு ஆவின் நெய்யை வாங்கி, ரீபேக் செய்து, கெமிக்கல் மிக்ஸ் செய்து, அவர்களுடைய லேபிளை ஒட்டி மார்கெட் செய்கிறார்கள். இதன் மூலம், 50 முதல் 100 ரூபாய் வரை தனியார் நிறுவனங்கள் சந்தையில் லாபம் பார்க்கின்றன. ஆவினை மொத்தமாக எடுத்துச் சென்றுவிடுகிறார்கள் என்பதால் மக்கள் கேட்கும்போது ஆவின் கிடைப்பதில்லை. அதனால், 20 ரூபாய் கூட்டவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

நாசர், பால்வளத்துறை அமைச்சர்
நாசர், பால்வளத்துறை அமைச்சர்

நறுமண பால் என்று ஒரு வகையான பால் உள்ளது. அதை 28 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம். ஏனெனில், முன்பு அதற்கான ஜி.எஸ்.டி 5 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. தற்போது மத்திய அரசு 12 சதவிகிதமாக ஜி.எஸ்.டி-யை உயர்த்தியிருக்கிறது. அதனால், நாங்களும் விலையேற்றவேண்டிய தேவை ஏற்பட்டது. தயிர் அரை லிட்டர் இரண்டு ரூபாய்தான் ஏறியிருக்கிறது. இதுவே தனியார் நிறுவனங்களில் விலை அதிகமாகத்தான் உள்ளது. குல்ஃபி ஐஸ் விலையையும் இரண்டு ரூபாய்தான் கூட்டியிருக்கிறோம். இதுவும் தனியார் நிறுவனங்களில் 40 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மார்கெட்டில் இன்றும் ஆவின் விலைதான் கீழே உள்ளது! விலையேற்றத்துக்கான கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம்” என்கிறார்.