Published:Updated:

``நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” - உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு

ஆளுநர் கோஷாரியா

சட்டமன்றத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார்.

``நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” - உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு

சட்டமன்றத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார்.

Published:Updated:
ஆளுநர் கோஷாரியா

மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி, முடிவை நெருங்கியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக தலைவர்கள் மாநில ஆளுநர் பகத்சிங் கோஷாரியாவை நேற்று சந்தித்து சட்டமன்றத்தில் உத்தவ் தாக்கரே அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டும்படி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷாரியா இன்று உத்தரவிட்டிருக்கிறார்.

இதற்காக நாளை காலை 11 மணிக்கு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று ஆளுநர் முதல்வருக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் தன்னைச் சந்தித்து, தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து எடுத்துக் கூறியதாகவும், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கடிதம் கொடுத்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

அதோடு ஏழு சுயேச்சை எம்.எம்.ஏ-க்களும் அரசு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கடிதம் கொடுத்துள்ளனர். சட்டமன்றத்தில் நாளை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அவை நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லிக்குச் சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து இரண்டு மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான சட்டப் பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

சட்டமன்றத்தில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டிருப்பதால் அஸ்ஸாமில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பிரம்மபுத்ரா ஆற்றங்கரையில் இருக்கும் காமாக்யா கோயிலில் சென்று வழிபட்டார். அதோடு அனைத்து எம்.எல்.ஏ-க்களும் மும்பைக்கு கிளம்பத் தயாராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நாளை அதிகாலையில் கிளம்பி நேராக சட்டமன்றத்துக்கு வரவிருக்கின்றனர். இன்று வந்தால் அவர்களின் மனதை சிவசேனா குழப்பிவிடக்கூடும் என்று பாஜக அச்சமடைந்திருக்கிறது. நாளை மும்பைக்குத் திரும்பவிருப்பதை ஏக்நாத் ஷிண்டேயும் உறுதிபடுத்தியிருக்கிறார்.

இதற்கிடையே மகாராஷ்டிரா அரசைக் கவிழ்க்க பாஜக பல கோடி ரூபாய் செலவு செய்வதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட சிவசேனா முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!