Published:Updated:

"மக்கள் நலனைவிட கொள்கை முக்கியமில்லை!" - கமல் சிறப்புப் பேட்டி

கமல்
கமல்

பாதிப்பு என்பது ரத்தம் சொட்டச்சொட்ட ஏற்படும் பாதிப்பு அல்ல. உங்களை மாற்றியமைக்கும் விஷயங்கள்கூட பாதிப்புதான்.

"விஜய் சமீபகாலமாக அதிகம் அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார். 'நான் முதலமைச்சரானால் இதையெல்லாம் செய்வேன்' என்றுகூட விளையாட்டாகச் சொல்லியிருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்தால், உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? விஷால், சூர்யா எனப் பல நடிகர்களும் அரசியல் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் ஒரு குடைக்குள் கொண்டுவந்தால் உங்களுடைய இலக்கை அடைய இலகுவாக இருக்கும் என நினைக்கிறீர்களா?'' - கார்க்கிபவா முழுமையாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2NJIRKY

"நீங்கள் கேட்கும்போதே 'விளையாட்டாக' என்று ஒரு முன்பதிவைச் செய்துவிட்டீர்கள். அவர் விளையாட்டாக அதைப்பேசியிருக்கக்கூடாது என்பதுதான் என் விருப்பம். யாருக்கு வேண்டுமானாலும் அந்த ஆசை இருக்கலாம். அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான உத்வேகத்தைக் காண்பிக்க வேன்டும். அவரை நான் அரசியலுக்கு வரவேற்று ரொம்ப நாள் ஆகிவிட்டது. இளம் நடிகர்கள் குறித்த கேள்விக்கு என்னுடைய பதில் என்பது, அவர்கள் என்ன சித்தாந்தத்துடன் வருகிறார்கள், எத்திசை நோக்கிச் செல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். நாங்கள் செல்ல நினைக்கும் திசையும், அவர்கள் செல்ல நினைக்கும் திசையும், தமிழகம் எப்பாதையில் செல்லவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருந்துவிடக்கூடாது.

"மக்கள் நலனைவிட கொள்கை முக்கியமில்லை!" - கமல் சிறப்புப் பேட்டி

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

'நீட்லாம் இருந்துட்டுப்போதுங்க... நல்லது' எனச் சொல்லிவிட்டு வந்தார்கள் என்றால் அது விவாதிக்க வேண்டிய விஷயம். அவசரத்துக்கு வேண்டுமானால் கைகுலுக்கிக்கொள்ளலாமே தவிர அந்த விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும்.''

"சினிமாவில் முன்வைக்கப்பட்ட மீ டூ குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் கருத்து என்ன. அந்தக் குற்றச்சாட்டுகள் தமிழ் சினிமாவில் எழுப்பப்பட்டபோது சரியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லையே?'' - ஐஷ்வர்யா

"ஒவ்வொரு கலாசாரத்திலும் ஒவ்வொரு மாதிரியான தாக்கம் இருக்கும். அமெரிக்காவில் தொடங்கிய ஹிப்பி மூவ்மென்ட் இங்கே வேர் பிடிக்கவில்லை. அதையும் இதையும் ஒன்றாகச் சொல்கிறீர்களா எனச் சொல்லக்கூடாது. ஹிப்பி மூவ்மென்ட்டினால் ஏற்பட்ட நல்ல தத்துவங்கள் எவையும் இங்கே வந்தடையவில்லை. ஆனால், நல்ல இசை கிடைத்தது. விஷயத்தைப் பொறுத்து ஒவ்வொரு கலாசாரத்திலும் அது வெவ்வேறுவிதமாக ஏற்றுக்கொள்ளப்படும். இந்தியாவில் எல்லாத் தவறுகளையும் கடவுள் வந்து மாற்றுவார் என்கிற நம்பிக்கை உண்டு. அதனால் 'மீ டூ' இயக்கம் உடனடி நீதி கேட்டதால் பழைமைவாதிகள் அதைக் கண்டுகொள்ளாமல் போயிருக்கலாம். ஆனால், நியாயம், நேர்மையை நம்புபவர்கள், தாயை, தமக்கையை மதிப்பவர்கள் குரல்கொடுத்தார்கள். அதில் நானும் ஒருவன்.''

"உங்களை மிகவும் பாதித்த நூல் பூணூல் என்று ஒருமுறை ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தீர்கள். பூணூலால் நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டீர்கள் என்று சொல்ல முடியுமா?'' - வைதேகி

"பாதிப்பு என்பது ரத்தம் சொட்டச்சொட்ட ஏற்படும் பாதிப்பு அல்ல. உங்களை மாற்றியமைக்கும் விஷயங்கள்கூட பாதிப்புதான். 11 வயதில் எனக்குப் பூணூல் அணியவேண்டும் என்று முடிவெடுத்தபோது, அதை நான் மறுத்தேன். அப்போது என்னை வற்புறுத்தாமல் என்னுடன் விவாதித்த என் தகப்பனாருக்கு நன்றி செலுத்த வேண்டும். 'சரி வேண்டாம்' என என்னை என்போக்கில் விட்டுவிடுவது என என் தந்தையார் எடுத்த முடிவு என்னை பாதித்தது. போடாத பூணூலும் என்னை மிகவும் பாதித்திருக்கிறது. இதை ஏதோ பார்ப்பனர்களைத் திட்டுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. என் தந்தை பூணூல் போட்டவர்தான். ஆனால் இனி பூணூல் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.''

"மக்கள் நலனைவிட கொள்கை முக்கியமில்லை!" - கமல் சிறப்புப் பேட்டி

" 'மெர்சல்' ரிலீஸான நேரத்தில் அட்லி உங்களைப் பார்க்கவந்தபோது பின்னால் 'அபூர்வ சகோதரர்கள்' படம் இருந்தது. கல்வி தொடர்பான வீடியோக்களில் காமராஜரின் படம், வேறொன்றில் கலாம் படம் என வெவ்வேறு சமயங்களில் ஆளுமைகளைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். உங்களின் ஆதர்சம் யார் என்னும் குழப்பம் மக்களுக்கு வராதா?'' - கார்க்கிபவா

"நீங்கள் சொன்னதில் அந்த 'அபூர்வ சகோதரர்கள்' படம் மட்டும் விபத்து. தலைவர்களின் படங்களை நான் பயன்படுத்துவதில் மக்களுக்குக் குழப்பம் வராது என நினைக்கிறேன். எல்லோரும் படிக்க வேண்டும் என காமராஜர் சொன்ன விஷயம் எனக்குப் பிடித்திருக்கிறது. எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என அம்பேத்கர் சொன்னதும் எனக்குப் பிடித்திருக்கிறது. யாரையும் களையவேண்டிய அவசியமில்லை என எண்ணுகிறேன். மய்யத்தின் நிலைப்பாடும் அதுவே. மக்கள் நலனைவிட கொள்கை முக்கியமில்லை என நினைப்பது தான் மய்யம்."

- விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது. முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > விகடன் பிரஸ்மீட்: "சிவாஜியின் சாதனைகளை நான் முறியடிக்கவில்லை!" https://www.vikatan.com/government-and-politics/cinema/vikatan-press-meet-kamalhaasan-about-sivaji-ganesan

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அடுத்த கட்டுரைக்கு