Published:Updated:

அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலும் பாஜக-வை வீழ்த்த முடியாது! - புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்
News
புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

``ஒருகாலத்தில் உணவு, மருந்து உள்ளிட்ட பொருள்களுக்குக்கூட நாம் பிற நாடுகளிடம் கையேந்தி நின்றோம். ஆனால், பா.ஜ.க ஆட்சியிலோ பிற நாடுகளுக்கு உதவிகள் செய்துவருகிறோம்." - நமச்சிவாயம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் பா.ஜ.க சார்பில் டாக்டர் சரவணன் தலைமையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

இதில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ``புதுச்சேரியைப்போலவே தமிழகத்திலும் பா.ஜ.க ஆட்சி அமைய பாடுபட வேண்டும். இந்தியா ஒரே சீராக வளர்ச்சி பெற மோடி பணியாற்றிவருகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மக்கள் முதல் எல்லை வரை நாட்டைப் பாதுகாப்பதே நல்லாட்சி. அதைத்தான் பா.ஜ.க செய்துவருகிறது, வாஜ்பாய் கொண்டுவந்த திட்டங்களை மோடி செயல்படுத்திவருகிறார். ஒருகாலத்தில் உணவு, மருந்து உள்ளிட்ட பொருள்களுக்குக்கூட நாம் பிற நாடுகளிடம் கையேந்தி நின்றோம். ஆனால், பா.ஜ.க ஆட்சியிலோ பிற நாடுகளுக்கு உதவிகள் செய்துவருகிறோம்.

பா.ஜ.க கருத்தரங்கு
பா.ஜ.க கருத்தரங்கு

மக்களுக்குத் தடுப்பூசி வழங்கிய பெருமை பா.ஜ.க தலைமையிலான அரசையே சாரும். இந்திய மக்களுக்காக பிரதமர் மோடி 196 திட்டங்களை வழங்கியிருக்கிறார். அனைத்துத் தரப்பு மக்களுக்கான திட்டங்களை பா.ஜ.க செயல்படுத்திவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2026-ம் ஆண்டில் புதுச்சேரியில் பா.ஜ.க தனித்து ஆட்சியைப் பிடிக்கும். அதற்காக புதுச்சேரி பா.ஜ.க-வினர் 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக பிரதமர் மோடி கவனம் செலுத்திவருகிறார். புதுச்சேரி வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை வழங்கவிருக்கிறார். இடைவிடாத உழைப்பால் ஒவ்வொரு மாநிலத்திலும்ம் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துவருகிறது" என்றார்.

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, ``தமிழகத்தில் பா.ஜ.க நல்ல வளர்ச்சி பெற்றுவருகிறது. பா.ஜ.க-வை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனச் சொல்கிறார்கள். அனைத்துக் கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் பா.ஜ.க-வை வீழ்த்த முடியாது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடத் தடையில்லை. மதுக்கடைகளை திறக்க மட்டுமே நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற முதல்வர் உள்ளிட்ட அனைவரும் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்துவோம். இந்தியாவில் பிற மாநிலங்களைவிட புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக குறைக்கப்பட்டிருக்கிறது" என்றார்.