Published:Updated:

புதுச்சேரி: `மதக்கலவரத்தை உருவாக்குவதுதான் பா.ஜ.க வேல் யாத்திரையின் நோக்கம்!’ - நாராயணசாமி

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

``மதக்கலவரத்தை உருவாக்குவதுதான் பா.ஜ.க வேல் யாத்திரையின் நோக்கம்” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சித்திருக்கிறார்.

புதுச்சேரி சுகாதாரத்துறை, தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த் தடுப்பு திட்டம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் டெங்கு நோய் உருவாக்கும் கொசுப்புழுக்களை அகற்றும் நிகழ்ச்சி லெனின் வீதியிலுள்ள மணிமேகலை அரசுப் பெண்கள் பள்ளி அருகே இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறுகையில், ``புதுச்சேரியில் மழைக்காலங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்குகிறது.

எல்.முருகன் கைது
எல்.முருகன் கைது

அதனால், ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகி மிகப்பெரிய அளவில் டெங்குக் காய்ச்சலை பரப்புவதால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவேதான், மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம். செப்டம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை டெங்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. சீதோஷ்ண நிலை, மழைப்பொழிவு, பள்ளமான பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பது போன்ற காரணங்களால் ஏடிஸ் கொசு உற்பத்தியாகி டெங்குக் காய்ச்சல் பரவுகிறது.

அன் அடிப்படையில்தான் இன்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் பேரிடர் மேலாண்மைத்துறை மூலமாக கடந்த 15 நாள்களுக்கு முன்பே பருவ மழையை எதிர்கொள்வது தொடர்பாக ஒரு கூட்டத்தை நடத்தி தெளிவான முடிவுகளை எடுத்திருக்கிறோம். புதுச்சேரி `எம்மதமும் சம்மதம்’ என்ற கோட்பாட்டில் இருக்கும் அமைதியான மாநிலம்.

`வெற்றிவேல்' யாத்திரையின் பின்புலம்: `யுத்தம்' செய்யப்போகிறதா பா.ஜ.க?

அனைத்து மதங்களுக்கும் இங்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மதக் கோட்பாட்டை கடைப்பிடிப்பதால் யாருக்கும் பிரச்னை கிடையாது. ஆனால், அது மதக் கலவரமாக மாறிவிடக் கூடாது. பா.ஜ.க-வின் வேல் யாத்திரையின் நோக்கமே மதக் கலவரத்தை உருவாக்குவதுதான். புதுச்சேரியைப் பொறுத்தவரை எந்தவிதமான மதக் கலவரத்துக்கும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு