Published:Updated:

``நாராயணசாமியை கட்சியைவிட்டு தள்ளி வையுங்கள்!" - ராகுலுக்குக் கடிதம் எழுதிய புதுச்சேரி காங்கிரஸார்

நாராயணசாமி

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரை மாற்றும்படி அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், ராகுல்காந்திக்கு கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

``நாராயணசாமியை கட்சியைவிட்டு தள்ளி வையுங்கள்!" - ராகுலுக்குக் கடிதம் எழுதிய புதுச்சேரி காங்கிரஸார்

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரை மாற்றும்படி அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், ராகுல்காந்திக்கு கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
நாராயணசாமி

புதுச்சேரி மாநிலத்தில் அமைச்சர்களையும், எம்.எல்.ஏ-க்களையும் வளைத்து கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தது பா.ஜ.க. அதையடுத்து வந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியுடன் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நிலையில், வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது காங்கிரஸ். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் கட்சியையும், நிர்வாகிகளையும் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று தொண்டர்களிடம் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியிலிருக்கும் 42 நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றனர். அந்தக் கடிதத்தில், ``புதுச்சேரி காங்கிரஸ் மண். ஆனால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் இரண்டு இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளது.

ராகுல் காந்தி | காங்கிரஸ்
ராகுல் காந்தி | காங்கிரஸ்

காங்கிரஸ் தோல்விக்குப் பிறகு நம் கட்சித் தலைமை தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய குழுவை அனுப்பியது. அந்தக் குழுவிடம் தற்போது காங்கிரஸ் மாநில தலைவராக இருக்கும் ஏ.வி.சுப்பிரமணியனை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் ஓராண்டாகியும் காங்கிரஸ் தலைவர் மாற்றப்படவில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டுமென்றால் கட்சித் தலைவரை மாற்ற வேண்டும். மேலும் மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் நம்பிக்கை இழந்துள்ள முன்னாள் முதல்வர் நாராயணசாமியையும் புதுச்சேரி அரசியலிலிருந்து தள்ளி வைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கின்றனர். அந்த புகார் கடிதத்தில் புதுச்சேரி காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மற்றும் செயலாளர்கள் நிர்வாகிகள் என 42 பேர் கையெழுத்திட்டிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!