Published:Updated:

புதுச்சேரி: துக்கம் விசாரிக்கப்போன கல்வி அமைச்சர்! - திருப்பி அனுப்பிய காரைக்கால் மக்கள்!

புதுச்சேரி கல்வி அமைச்சர்  கமலக்கண்ணன்
புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன்

காரைக்காலில் அமைச்சர் கமலக்கண்ணனை பொதுமக்களே திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தின் கல்வி, வேளாண் மற்றும் மின்துறை அமைச்சராக காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் செயல்பட்டுவருகிறார். இவர் தனது சொந்தத் தொகுதியான திருநள்ளாறு, மேலசுப்ராயபுரம் மாதாக் கோயில் தெரு பகுதியில் இறந்துபோன மரியதாஸ் என்பவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொளவதற்காகச் சென்றார். அங்கு அமைச்சர் கமலக்கண்ணனை அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சூழ்ந்துகொண்டு உள்ளே விடாமல் திருப்பி அனுப்பினர்.

புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன்
புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன்

``பதவிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் எங்க பகுதிக்கு என்ன செய்தீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பி கமலக்கண்ணனைத் திணறடித்தனர் இளைஞர்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கமலக்கண்ணன் நிற்க, ``கொரோனா நோய்த் தொற்று தீவிரமடைந்து பொதுமக்கள் வீடுகளில் முடங்கிக்கிடந்த சமயங்களில் எங்களை வந்து பார்த்து எந்தவித உதவியும் செய்யாமலல், தற்போது தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் ஊருக்குள் எதற்கு வந்தீர்கள்?" என்று கேள்விகள் எழுப்பினர்,

தொடர்ந்து, தங்கள் பகுதிகளில் மரணமடைபவர்களின் உடல்களைச் சுடுகாட்டுப் பகுதிகளில் அடக்கம் செய்யச் செல்வதற்குக்கூட சரியான பாதை வசதியில்லை என்று பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவில்லை எனக் கூறியும் அடுக்கடுக்கான கேள்விகளை சூழ்ந்துகொண்டவர்கள் எழுப்பவும், எதற்கும் பதிலளிக்காத அமைச்சர் கமலக்கண்ணன் தனது வாகனத்தில் ஏறி திரும்பிச் சென்றார்.

இந்த நிலையில் அமைச்சர் கமலக்கண்ணனைக் கேள்வி கேட்ட இளைஞர்கள் ஐன்ஸ்டின் ராஜ், லெனின் ராஜ், இயேசு ராஜ் ஆகிய மூவர் மீதும் காவல்துறை, வழிமறித்து ஆபாசமாகத் திட்டுதல் 294, 341 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

புதுச்சேரி கல்வி அமைச்சர்  கமலக்கண்ணன்
புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன்
காரைக்கால்: `கொரோனா காலத்திலும் செயல்படாத ஜிப்மர் கிளை!’ - நடவடிக்கை எடுக்குமா அரசு?

`அமைச்சராகப் பொறுப்பேற்ற நாள்முதல் இன்றுவரை கமலக்கண்ணன் தனது தொகுதிக்கு எந்த ஓர் ஆக்கபூர்வமான செயலையும் செய்யவில்லை’ என்று கூறி, காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கமலகக்ண்ணனை பொதுமக்களே திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு