Published:Updated:

`இரண்டு மாநிலங்களில் கொடியேற்றியதைக் கூட விமர்சிக்கிறார்கள்!' - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்

`குடியரசு தினத்தில் ஆளுநர் கொடியேற்றுவது வழக்கம். இதில் விதிமீறல் எதுவுமில்லை. இரு மாநிலங்களின் மீதும் அன்பைத் தெரிவிக்கவே அப்படிச் செய்தேன். இரு மாநிலங்களும் எனது இரு குழந்தைகள்.' - தமிழிசை சௌந்தரராஜன்.

`இரண்டு மாநிலங்களில் கொடியேற்றியதைக் கூட விமர்சிக்கிறார்கள்!' - தமிழிசை சௌந்தரராஜன்

`குடியரசு தினத்தில் ஆளுநர் கொடியேற்றுவது வழக்கம். இதில் விதிமீறல் எதுவுமில்லை. இரு மாநிலங்களின் மீதும் அன்பைத் தெரிவிக்கவே அப்படிச் செய்தேன். இரு மாநிலங்களும் எனது இரு குழந்தைகள்.' - தமிழிசை சௌந்தரராஜன்.

Published:Updated:
தமிழிசை சௌந்தரராஜன்

புதுவை செயின்ட்தெரேஸ் வீதியிலுள்ள வண்ண அருவி ஓவியக் கூடத்தில் மறைந்த பத்திரிகையாளர்களுக்கு நிதி உதவி தருவதற்காக நடைபெற்றுவரும் புகைப்படக் கண்காட்சியை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``புதுச்சேரி, தெலங்கானா இரு மாநிலங்களில் குடியரசு தினவிழாவில் தேசியக்கொடியேற்றியதைச் சாதனையாக நினைக்கவில்லை. இரு மாநில மக்களையும் மதிக்கிறேன், அதனால்தான் இரு
மாநிலங்களிலும் கொடியேற்றினேன். இதில் விமர்சனம் செய்ய ஒன்றுமில்லை. முதல்வர் ரங்கசாமிமீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன். ஆளுநரும் முதல்வரும் இணைந்து நல்லது செய்கிறார்களே என்று பொறுத்துக்கொள்ள முடியாத சிலபேர்தான் கேள்வி எழுப்புகின்றனர்.

குடியரசு தினத்தில் ஆளுநர் கொடியேற்றுவது வழக்கம். இதில் விதிமீறல் எதுவுமில்லை. இரு மாநிலங்களின் மீதும் அன்பைத் தெரிவிக்கவே அப்படிச் செய்தேன். இரு மாநிலங்களும் எனது இரு குழந்தைகள். அந்தக் குழந்தைகளுக்கு நியாயமாக நடக்கவே சிரமத்தை மீறிப் பணிபுரிந்தேன். இதில் அரசியல் செய்யவேண்டிய அவசியமில்லை. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்கிறார்கள். தமிழர்கள் சரித்திரம் படைப்போமே... பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஒற்றர்களாக ஆளுநர்கள் செயல்படுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளதாகக் கேட்கிறீர்கள். அவர் என்ன செய்வார்? அவரால் ஆளுநருடன் ஒற்றுமையாகச் செயல்பட முடியவில்லை. அதனால் ஒற்றர்களாகச் செயல்படுவதாகக் கூறுகிறார். நாங்கள் உற்ற தோழர்கள், தோழிகளாகச் செயலாற்றுகிறோம். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சில பிரச்னைகள் இருக்கின்றன.

தமிழிசை  செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

ஆளுநர்களை வேறுவிதமாக அவர்கள் பார்க்கிறார்கள். அரசியல் செய்யப் பார்க்கிறார்கள், இதை நான் தெலங்கானாவில் உணர்ந்துள்ளேன். ஆளுநர்களாகிய நாங்கள் நடுநிலையாக மக்கள் தொண்டைச் செய்கிறோம். முதலில் ஆளுநர் என்பவர் அவருடைய வளாகத்தில் இருக்கவே நினைத்தார்கள். தற்போது ஆளுநர்கள் மக்கள் சேவையைச் செய்யும் நிலையை எடுத்துள்ளதை வரவேற்க வேண்டும். புதுச்சேரியிலும், தெலங்கானாவிலும் இங்கும் அங்கும் `அக்கா' என்றுதான் என்னை அழைக்கிறார்கள். புதுச்சேரியில் இட ஒதுக்கீட்டுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முயற்சிகள் நடக்கின்றன.
மத்திய அரசு பல நல்ல திட்டங்களை புதுச்சேரிக்கு கொடுத்துள்ளது. வரும் பட்ஜெட்டிலும் பல நல்ல திட்டங்கள் அறிவிக்கவும் வரவும் வாய்ப்பு இருக்கிறது. புதுச்சேரிக்கு மத்திய அரசு தோழமையுடன் திட்டங்களை தருகிறது. மழை நிவாரணம் உள்ளிட்ட சில நிவாரணங்கள் கேட்கும்போது வழிமுறைகள் இருக்கின்றன. பல உதவிகளை மத்திய அரசு செய்கிறது. புதுவை மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ அனைத்து உதவிகளையும் செய்யவே மத்திய மாநில அரசுகள் இருக்கின்றன" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள், `குடியரசுத் தலைவர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த தங்களைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறதே?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, கைகூப்பி சிரித்ததுடன் பதில் ஏதும் தராமல் அங்கிருந்து மௌனமாகப் புறப்பட்டார்.