Published:Updated:

``ரஜினிக்காக 30 வருஷமா ஓட்டுப்போடல..!” - முதல் வாக்கினை பதிவு செய்த ரஜினி ரசிகர்

ரஜினி ரசிகர்

"ஏற்கெனவே கிராமத்தில் நாங்க இருந்தப்ப, நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு என்னோட மனைவி நின்னாங்க. அப்ப கூட நான் மனைவிக்கு ஓட்டு போடல" - ரஜினி ரசிகர் மகேந்திரன்

``ரஜினிக்காக 30 வருஷமா ஓட்டுப்போடல..!” - முதல் வாக்கினை பதிவு செய்த ரஜினி ரசிகர்

"ஏற்கெனவே கிராமத்தில் நாங்க இருந்தப்ப, நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு என்னோட மனைவி நின்னாங்க. அப்ப கூட நான் மனைவிக்கு ஓட்டு போடல" - ரஜினி ரசிகர் மகேந்திரன்

Published:Updated:
ரஜினி ரசிகர்

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். ரஜினியின் தீவிர ரசிகராக இருக்கும் மகேந்திரன், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார். ரஜினி அரசியலுக்கு வருவார், அவருக்குத் தான் தனது முதல் வாக்கினை செலுத்த வேண்டும் என்று 30 ஆண்டுகளாக எதிர்பார்ப்புடன் காத்திருந்துள்ளார். ரஜினி இனி அரசியலுக்கு வரமாட்டார் என்று தெரிந்ததால், தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது முதல் வாக்கினை பதிவு செய்திருக்கிறார்.

ரஜினி
ரஜினி

வாக்கு செலுத்திய உற்சாகத்திலிருந்த மகேந்திரனிடம் பேசியபோது, "சின்னவயசுலயிருந்தே ரஜினியோட தீவிர ரசிகனா இருக்கேன். ரஜினி மன்றத்தின் மூலமா அவ்வப்போது மக்கள் பணி செஞ்சிக்கிட்டு இருக்கோம். ரஜினி அரசியலுக்கு வரணும், வந்து அவரோட சேர்ந்து ரசிகர்கள் நாங்க எல்லாம் மக்கள் பணி செய்யலாம்னு காத்துக்கிட்டு இருந்தோம். அவர் எப்படியும் அரசியலுக்கு வந்துடுவாரு. அவருக்குத் தான் என்னோட முதல் ஓட்டைப் போடணும்னு வைராக்கியத்தோட தான் இவ்வளவு வருஷமா இருந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரஜினி ரசிகர் மகேந்திரன்
ரஜினி ரசிகர் மகேந்திரன்

ஏற்கெனவே கிராமத்தில் நாங்க இருந்தப்ப, நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு என்னோட மனைவி நின்னாங்க. அப்ப கூட நான் மனைவிக்கு ஓட்டு போடல.

எனக்கும் இப்போ 48 வயசு. 18 வயசுல ஓட்டர் ஐடி வாங்குனுதலயிருந்தே தலைவருக்காகத் தான் முதல் ஓட்டுன்னு, 30 வருஷமாவே ஓட்டே போடல. ஆனா, இப்போ தலைவர் அரசியலுக்கே இனி வரமாட்டேன்னு சொல்லி அதிர்ச்சியைக் கொடுத்துட்டாரு. அதனால, இந்த முறை ஓட்டுப்போட முடிவு பண்ணி முதல் முறையா ஓட்டு போட்டுருக்கேன். ஜனநாயகக் கடமை செய்ததில் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism