Published:Updated:

``யாரையும் நம்பி அ.தி.மு.க இல்லை", ``பா.ஜ.க தலையீடு" - புகழேந்தி Vs கே.சி.பழனிசாமி

கே.சி.பழனிசாமி - புகழேந்தி

கே.சி.பழனிசாமி: "என்னால் அப்படி உணர முடியவில்லை. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்து, நாவலரைப்போல இரண்டாம் இடத்துக்கு மட்டுமே தகுதியானவர் என நிறுத்தப்பட்டிருக்கிறார்.

``யாரையும் நம்பி அ.தி.மு.க இல்லை", ``பா.ஜ.க தலையீடு" - புகழேந்தி Vs கே.சி.பழனிசாமி

கே.சி.பழனிசாமி: "என்னால் அப்படி உணர முடியவில்லை. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்து, நாவலரைப்போல இரண்டாம் இடத்துக்கு மட்டுமே தகுதியானவர் என நிறுத்தப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கே.சி.பழனிசாமி - புகழேந்தி

"எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தங்களை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துக்கொண்டதே இல்லை. ஆனால், தற்போது பெரும் மோதலுக்குப் பிறகு, முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஏன் இந்தப் பதவிச் சண்டை?"

புகழேந்தி: "இது பதவிச் சண்டை அல்ல. அண்ணன் பன்னீர் எங்கேயாவது, 'நான்தான் முதல்வர் வேட்பாளர்' என்று சொல்லியிருக்கிறாரா, இல்லையே... சிலர் வேண்டுமென்றே பிரச்னையைக் கிளப்பி, குழப்பத்தில் லாபம் சம்பாதிக்க நினைத்தார்கள். அதை முறியடிக்கவே முதல்வர் வேட்பாளரை அறிவித்தோம்."

"முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின்னால் பா.ஜ.க இருக்கிறதா?"

புகழேந்தி: "நிச்சயம் இல்லை. யாரையும் நம்பி அ.தி.மு.க இல்லை."

'என்னைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்க முடியாது' என்று சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறதே... மீண்டும் அவர் அ.தி.மு.க-வைக் கைப்பற்ற மாட்டார் என்பது என்ன நிச்சயம்?"

புகழேந்தி
புகழேந்தி

புகழேந்தி: "அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். பிறகு எதைவைத்து அவர் கட்சியைக் கைப்பற்ற முடியும்? வாய்ப்பே இல்லை."

- அ.ம.மு.க-விலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் எடப்பாடி முகாமுக்கு 'ஜம்ப்' ஆனவர் புகழேந்தி. அவரை நேரில் சந்தித்து, சில கேள்விகளை முன்வைத்தோம். முதல்வர் வேட்பாளர் விவகாரம், வழிகாட்டுதல்குழு பஞ்சாயத்து, சசிகலா விடுதலை, தினகரன் மூவ் என அனைத்துக் கேள்விகளுக்கும் கூலாக பதிலளிக்கிறார் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தி. முழுமையான பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3lOE21n > "தினகரன் ஒரு தலைவலி!" - புகழேந்தி பொளேர்... https://bit.ly/3lOE21n

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளாசும் கே.சி.பழனிசாமி!

"அ.தி.மு.க-வில் பிரச்னைகள் ஒருவழியாக முடிந்துவிட்டது தானே..?"

கே.சி.பழனிசாமி: "என்னால் அப்படி உணர முடியவில்லை. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்து, நாவலரைப்போல இரண்டாம் இடத்துக்கு மட்டுமே தகுதியானவர் என நிறுத்தப்பட்டிருக்கிறார். நான்கு பேர் போட்டியிட்டு, அதிலிருந்து இ.பி.எஸ் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால் அது சரியாக இருந்திருக்கும். ஆனால், யாருமே போட்டியிடவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களில், அடிப்படைத் தொண்டன் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுத்து, அவர் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்காவிட்டால், இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இருவரும் இல்லாமல், ஒரு புதிய தலைமையைத் தொண்டர்கள் உருவாக்குவார்கள்."

"7-ம் தேதி அதிகாலை வரை பேச்சுவார்த்தை நடந்தது என்கிறார்கள். முடிவு எப்படி எடுக்கப்பட்டது, என்னதான் நடந்தது?"

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

கே.சி.பழனிசாமி: "பா.ஜ.க தலையீடுதான். இந்தக் காலகட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் யதேச்சையாகத்தான் இருந்தார் என நான் நம்பவில்லை. தமிழகத்தில் `திராவிடம் Vs இந்துத்வா' என்ற நிலையை உருவாக்கத்தான் பா.ஜ.க, காய்நகர்த்திவருகிறது. அதற்காக, அது சில குழப்பங்களை ஏற்படுத்தி, பேரமும் நடத்தியிருக்கிறது."

- கட்சிக்குள் சாதியை முன்னிலைப்படுத்துவது, குறிப்பிட்ட அமைச்சர்களின் ஆதிக்கம், தலைமையின் கொள்கையற்ற, உறுதியற்ற நிலை எனப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துப் பேசிவருகிறார் அ.தி.மு.க தலைமையால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் கே.சி.பழனிசாமி. அவரைச் சந்தித்துப் பேசினோம்... > முழுமையான பேட்டியை ஜூ.வி-யில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/33THKAD > ஓ.பி.எஸ் 180 டிகிரி வளைவார்... இ.பி.எஸ் 150 டிகிரி வளைவார்! - விளாசும் கே.சி.பழனிசாமி https://bit.ly/33THKAD

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV