Published:Updated:

`ரஜினிகாந்த் அந்த அதிசயத்தை வேடிக்கை பார்ப்பார்!' - `பெங்களூரு' புகழேந்தி

`ரஜினிகாந்தை ஒரு திருப்புமுனையாக நினைத்தீர்கள் என்றால் ஏமாந்து விடுவீர்கள். அவர் ஏற்கெனவே பல வருடங்களாக ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.'

புகழேந்தி
புகழேந்தி

அ.ம.மு.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணையவிருக்கிறார் பெங்களூரு புகழேந்தி. அதற்கு முன்பாக, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அ.ம.மு.க-வுக்குப் போட்டியாக ஆதரவாளர்களைத் திரட்டி கூட்டம் நடத்தி வருகிறார்.

`சசிகலாவும் அ.தி.மு.க-வில் இணைவார்'- பெங்களூரு புகழேந்தி!

அதன் ஒருபகுதியாக அ.ம.மு.க போட்டி கூட்டம் இன்று திண்டுக்கல்லில் நடந்தது. திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய 3 மாவட்ட நிர்வாகிகளுக்கான கூட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய புகழேந்தி, ``நடத்துநர் சிவாஜிராவாக சென்னைக்கு வந்த ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறியது ஆச்சர்யம் இல்லையா? ரஜினிகாந்த்தை ஒரு திருப்புமுனையாக நினைத்தீர்களென்றால் ஏமாந்துவிடுவீர்கள். அவர் ஏற்கெனவே பல வருடங்களாக ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.

Rajini
Rajini

2021-ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்பார். வழக்கம்போல நடிகர் ரஜினிகாந்த் கட்சியைத் தொடங்காமல் இந்த அதிசயத்தை வேடிக்கை பார்ப்பார். பா.ஜ.க ரஜினிகாந்த்தின் வருகையை எதிர்பார்த்து ஏமாந்து, தற்போது வாசன் தலைமையில் கட்சியை ஒப்படைக்க இருக்கிறது. அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் ஆத்திரத்தில் உளறுகிறார் ரஜினிகாந்த். எம்.எல்.ஏ-வாக, எம்.பி-யாக, அமைச்சராக 45 ஆண்டுக்காலம் அரசியல் அனுபவம் கொண்ட எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவது எந்த விதத்தில் ஆச்சர்யம்" என்று அவர் பேசினார்.