Published:Updated:

பஞ்சாப் எம்.பி-யின் 'தமிழ் முழக்கம்' - அதிரும் நாடாளுமன்றம்! யார் இவர்?

முழக்கமிடும் எம்.பி-க்கள்
முழக்கமிடும் எம்.பி-க்கள்

வழக்கமாக எந்த ஒரு பிரச்னைக்கு குரல் கொடுக்கும்போதும் ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் எம்.பி-க்கள் முழக்கமிடுவார்கள். இந்தமுறை தமிழிலும் முழக்கங்கள் கேட்கிறது, அதுவும் ஒரு பஞ்சாப் எம்.பி -யின் குரல்களில்...

17-வது மக்களவைக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே ‘பெகாசஸ்’ விவகாரம் புயலைக் கிளப்பி வருகிறது.

"we want justice.. we want justice.. "

"நஹி சலோ.. நஹி சலோ.. டானா சாஹி நஹி சலோ.."

ஆகிய இரண்டு வசனங்கள்தான் பொதுவாக நாடாளுமன்றத்தில் முழக்கங்களாக எழுப்படுவது வழக்கம். ஆனால், இந்தமுறை

"வேண்டும்.. வேண்டும்.. நீதி வேண்டும்."

என தமிழிலும் முழக்கங்களை நாடாளுமன்றத்தில் கேட்க முடிகிறது. கடந்த 7 நாட்களாக அவையின் மையப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் ஒன்றுகூடி முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள். அதில் தமிழில் முழக்கத்தை எழுப்புபவர் தமிழக எம்.பி இல்லை என்பதுதான் இதிலிருக்கும் சுவாரஸ்யமே! பஞ்சாபைச் சேர்ந்த எம்.பி ஜஸ்பீர் சிங்-தான் தமிழில் மத்திய அரசுக்கு எதிரான முழக்கத்தை முழங்குகிறார்.

சு.வெங்கடேசன் எம்.பி
சு.வெங்கடேசன் எம்.பி

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “CAA துவங்கி பெகாசஸ் வரை மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஆங்கிலம் & ஹிந்தியில் முழக்கம் எழுப்பப்படும்.தமிழிலும் எழுப்புவோம். ஆனால் #Pegasus பிரச்சனையில் தமிழ் முழக்கத்தை முன்னெடுப்பவர் பஞ்சாப் எம்.பி ஜஸ்பிர் சிங். சர்தார்ஜியின் தமிழ் கர்ஜனை மக்களவையை உலுக்குகிறது” என்று கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு