Published:Updated:

ஒன் பை டூ

லஷ்மி ராமச்சந்திரன் - இராம.ஸ்ரீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
லஷ்மி ராமச்சந்திரன் - இராம.ஸ்ரீனிவாசன்

“மத்திய அரசின் அழுத்தத்தால், என்னைப் பின்தொடர்பவர்களைக் குறைத்துக்காட்டுகிறது ட்விட்டர்!” என்ற ராகுல் காந்தியின் குற்றாச்சாட்டு...

ஒன் பை டூ

“மத்திய அரசின் அழுத்தத்தால், என்னைப் பின்தொடர்பவர்களைக் குறைத்துக்காட்டுகிறது ட்விட்டர்!” என்ற ராகுல் காந்தியின் குற்றாச்சாட்டு...

Published:Updated:
லஷ்மி ராமச்சந்திரன் - இராம.ஸ்ரீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
லஷ்மி ராமச்சந்திரன் - இராம.ஸ்ரீனிவாசன்

லஷ்மி ராமச்சந்திரன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.

``இந்தக் குற்றச்சாட்டில் நூறு சதவிகிதம் உண்மை இருக்கிறது. காரணம், இந்த விவகாரம் குறித்து ட்விட்டர் நிறுவனத்துக்கு அவர் கடிதம் எழுதிய மறுநாளே, அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்தது. ட்விட்டர் மீதான இந்தக் குற்றச்சாட்டை, பர்கா தத் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்களே முன்வைத்திருக்கிறார்கள். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராகக் கருத்து சொல்பவர்கள் அனைவரின் சமூக வலைதளக் கணக்குகளையும் இந்த அரசு கட்டுப்படுத்த நினைக்கிறது. இது பேச்சு சுதந்திரம் எனும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைக்கே எதிரானது. ஐந்து மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு, ஏற்கெனவே மீடியாக்களைக் கட்டுப்படுத்தி தங்களுக்குச் சாதகமாகச் செய்திகளைப் போடவைத்தார்கள். சமூக வலைதளங்களில் அவர்களுக்கு எதிரான விமர்சனங்கள் தீவிரமாக, இப்போது அதையும் கட்டுப்படுத்த முயல்கிறார்கள். இது ஜனநாயகத்துக்கு எதிரான ஒரு நடவடிக்கை. ஆனால், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட நாட்டின் உண்மையான கள நிலவரத்தை ஒவ்வோர் இந்தியரும் அறிவார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் பாதிப்புக்குள்ளாகும்போது, அதற்கான பலனை ஆளும் பா.ஜ.க நிச்சயம் அனுபவிக்கும்!’’

லஷ்மி ராமச்சந்திரன்
லஷ்மி ராமச்சந்திரன்
இராம.ஸ்ரீனிவாசன்
இராம.ஸ்ரீனிவாசன்

இராம.ஸ்ரீனிவாசன், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க.

``ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்குக்கும் பா.ஜ.க-வுக்கும் என்ன சம்பந்தம்? தானாக அழிந்துகொண்டிருக்கிற ஒரு கட்சி காங்கிரஸ். அதன் தலைவரை மேலும் நாங்கள் தொந்தரவு செய்யவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? மலிவான விளம்பரத்துக்காக ராகுல் காந்தி இப்படி நடந்துகொள்கிறார். அப்படியே சொன்னாலும், ட்விட்டர் என்பது இன்டிபென்டெண்ட் குளோபல் ஆர்கனைசேஷன். அதன் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிட முடியாது. உலகின் சக்திவாய்ந்த தலைவராகப் பிரதமர் மோடியைப் பல அமைப்புகள் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கின்றன. அதைச் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மத்திய அரசின்மீது குற்றம் கண்டுபிடிக்க இயலாதவர்கள், இது போன்ற வெற்றுக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறார்கள். இது போன்ற விஷயங்கள் உ.பி தேர்தலில் தங்களுக்குக் கைகொடுக்கும் என சிம்பதி தேடுகிறார் ராகுல் காந்தி. கடந்த ஏழு ஆண்டுகளாக ட்விட்டரில்தான் ராகுல் காந்தி அரசியல் செய்துகொண்டிருக்கிறார். காங்கிரஸ் தொண்டர்கள் அவரைக் களத்துக்கு வரச்சொல்ல வேண்டும். ட்விட்டரில் அரசியல் செய்தெல்லாம் மோடியைச் ஜெயிக்க முடியாது என்கிற உண்மையை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism