Published:Updated:

`மூன்று மாதங்களில் சீனா என்ற பெயரைக்கூட உச்சரிக்கவில்லை!’ - மோடியை விமர்சித்த ராகுல் காந்தி

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

`56 இஞ்ச் மார்புடைய மனிதர், சீன ஆக்கிரமிப்பை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடந்த மூன்று மாதங்களில் அவர் சீனா என்ற பெயரைக்கூட உச்சரிக்கவில்லை. அவரது 56 இஞ்ச் மார்பு எங்கே போனது?" என்று கேள்வி எழுப்பினார் ராகுல்.

கொங்கு மண்டலத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. சுற்றுப்பயணத்தின் நிறைவாக தாராபுரம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுப் பேசினார். ராகுல்காந்தி ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையை காங்கிரஸ் மூத்த தலைவரும், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான பீட்டர் அல்போன்ஸ் தமிழில் மொழிபெயர்த்தார்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

"விவசாயம்தான் இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம். அடித்தளமும் சுவரும் இல்லாமல் கூரை எழுப்ப முடியாது என்பது சிறு குழந்தைக்கூட தெரியும். ஆனால் நம் பிரதமர், விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மூலம் அடித்தளத்தையும் சுவரையையும் இடித்து விட்டு கூரை எழுப்ப முயற்சி செய்கிறார். அவரது அறியாமையை சுட்டிக்காட்ட அவரை சுற்றியுள்ளவர்கள் பயப்படுகிறார்கள். `மேக் இன் இந்தியா’ என பேசும் பிரதமருக்கு தற்சார்பு உற்பத்தியின் மேல் நம்பிக்கையில்லை.

ஆகவேதான், விவசாயிகள் மற்றும் எழை மக்களுக்கு பாதகம் விளைவிக்கும் பணமதிப்பிழப்பு, ஜி.ஸ்.டி போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு செவிசாய்க்கவில்லை. விவசாயிகளை நீதிமன்றத்துக்கு செல்வதைக்கூட அனுமதிக்கவில்லை" என்றார். வேற்றுமையில் ஒற்றுமை என்கிற இந்தியாவின் பன்மைத்துவத்துக்கு எதிராக ஒருமைக்கலாசாரத்தை மோடி அரசு திணிப்பதாக குற்றம் சாட்டினார்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

"மோடிக்கு தமிழ் ஒரு மொழியில்லையா? வடகிழக்கு மாநில மொழிகளெல்லாம் மொழிகள் இல்லையா? இந்த மொழிகளுக்கென ஒரு வரலாறு இல்லையா? பிறகு எப்படி ஒரே நாடு ஒரே மொழி என்று பேசுகிறார்" என கேள்வியெழுப்பினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்திய பொருளாதாரத்தை செழுமைப்படுத்தி, பல கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டதாகவும், பணமதிப்பிழப்பு மூலம் ஏழைகளின் முதுகெழும்பை உடைத்து விட்டதாகவும் சாடினார்.

``56 இஞ்ச் மார்புடைய மனிதர், சீன ஆக்கிரமிப்பை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடந்த மூன்று மாதங்களில் அவர் சீனா என்ற பெயரைக்கூட உச்சரிக்கவில்லை. அவரது 56 இஞ்ச் மார்பு எங்கே போனது? இந்திய மண்ணுக்குள் சீனா நுழைவது இந்தியா பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது.

ராகுல்காந்தி சுற்றுப்பயணம்
ராகுல்காந்தி சுற்றுப்பயணம்

5 தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்து அவர்களுக்காக ஆட்சி நடத்தும் மோடி ஆட்சியின் பலவீனமே இதற்குக் காரணம். "பா.ஜ.க தமிழக அரசை பிளாக் மெயில் செய்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. தமிழகத்தின் எதிர்காலத்தை முடிவு செய்வது எடப்பாடி அரசல்ல. மக்கள்தான்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு