Published:Updated:

நுங்கு, மரவள்ளிக்கிழங்கு; சப்பாத்தி - 118 பேருக்கு சமைக்க புது டீம்; ராகுலின் மெனு இதுதான்

ராகுல் காந்தி நடை பயணம்

அகிம்சையை வலியுறுத்தும் மகாத்மா காந்தியைப் போன்று பாதயாத்திரை மேற்கொள்வதால் நடை பயணம் முடியும் வரை சைவ உணவையே சாப்பிட தீர்மானித்திருக்கிறாராம் ராகுல் காந்தி.

நுங்கு, மரவள்ளிக்கிழங்கு; சப்பாத்தி - 118 பேருக்கு சமைக்க புது டீம்; ராகுலின் மெனு இதுதான்

அகிம்சையை வலியுறுத்தும் மகாத்மா காந்தியைப் போன்று பாதயாத்திரை மேற்கொள்வதால் நடை பயணம் முடியும் வரை சைவ உணவையே சாப்பிட தீர்மானித்திருக்கிறாராம் ராகுல் காந்தி.

Published:Updated:
ராகுல் காந்தி நடை பயணம்
கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடோ யாத்ரா நடை பயணத்தை நேற்று முன்தினம் மாலை தொடங்கியிருக்கிறார் ராகுல் காந்தி. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து தேசிய கொடியை பெற்றுக்கொண்டு மேடைக்கு சுமார் அரை மணி கிலோ மீட்டர் நடந்து சென்று பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இரண்டாவது நாளாக அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய கொடியை எற்றி காலை நடை பயணத்தைத் தொடங்கினார். நேற்றிரவு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் ஓய்வெடுத்த ராகுல் காந்தி, மூன்றாவது நாளான இன்று முளகுமூடு வரை நடை பயணம் செல்கிறார். தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும். மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் 3500 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி ஓய்வெடுப்பதற்காக சகல வசதிகளுடன் கூடிய கேரவன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாரத் ஜோடோ யாத்ரா
பாரத் ஜோடோ யாத்ரா

ராகுலுடன் காஷ்மீர் வரை நடக்கும் சுமார் 118 பேர் தங்குவதற்கும் கேரவன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ராகுலும், அவருடன் நடப்பவர்களும் தங்குவதற்கு என மொத்தம் 60 கேரவன்கள் உள்ளன. ராகுல் காந்தி, தேசிய தலைவர்கள், நடைபயணம் மேற்கொள்பவர்கள் தங்குவதற்கு என வெவ்வேறு தரத்திலான கேரவன்கள் உள்ளன. அதுபோல ராகுல் காந்திக்கு சமைப்பதற்கு என தொழிலாளர்களும், ராகுலுடன் காஷ்மீர் வரை நடக்கும் 118 பேருக்கும் உணவு தயாரிக்கவும், அவர்களுக்கு உதவுவதற்காகவும் வந்துள்ள பணியாளர்கள் தங்குவதற்கும் ஏசி அல்லாத கேரவன்கள் உள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தினமும் சுமார் 20 முதல் 25 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு உணவு தயாரிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அமைக்கப்படுள்ள உணவு குழுவுக்கு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார் தலைவராகவும், காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் முரளிதரன் உணவுக்குழு செயலாளரவும் உள்ளனர். ராகுல் காந்திக்கு புரோட்டீன் மிகுந்த உணவுகள் வழங்கப்படுகின்றன. காலையில் முளைக்க வைக்கப்பட்ட பயிறு வகைகள் வழங்கப்படுகின்றன.

ராகுல் காந்தி தங்கும் முகாமில் நடக்கும் சமையல்
ராகுல் காந்தி தங்கும் முகாமில் நடக்கும் சமையல்

ஒவ்வொரு முகாமிலும் அங்கேயே உணவு தயாரிக்கப்படுகின்றன. உணவுக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு நாளுக்குமான மெனு-வை ராகுல் காந்தியின் நடை பயணத்தை கவனிக்கும் டெல்லி டீமுக்கு அனுப்பி அனுமதி வாங்கிக்கொள்கின்றனர். ராகுல் காந்திக்கு உணவு வழங்க தனி டீம் இருக்கிறது. தினமும் உணவில், சப்பாத்தி, சாதம் இருக்கும். தர்ப்பூசணி போன்ற நீர்ச்சத்து மிகுந்த பழங்கள், வாழைப்பழம் உள்ளிட்டவையும் தினசரி உணவு பட்டியலில் உள்ளது. ராகுல் காந்திக்கு உணவு சமைப்பதற்கான அனைத்து பொருட்களும் சென்னையில் இருந்தே கொண்டுவரப்பட்டுவிட்டன. ராகுலுக்கும், ராகுலுடன் நடப்பவர்களுக்கும் பயணத்தின்போதே தண்ணீர், பழச்சாறு தேவைக்கு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களில் பிரபலமான உணவுகளை ராகுல்காந்தி கேட்டு வாங்கி சாப்பிடுகிறார். குமரி மாவட்டத்யில் மூன்று நாட்களாக நடக்கும் ராகுல் காந்தி முதல் நாள் நுங்கு சாப்பிட்டுள்ளார். இரண்டாம் நாள் கூழ் மற்றும் அவித்த மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டுள்ளார். புரோட்டீன் மிகுந்த ஹைஜீனிக் உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறார் ராகுல் காந்தி. அகிம்சையை வலியுறுத்தும் மகாத்மா காந்தி-யைப் போன்று பாதயாத்திரை மேற்கொள்வதால் நடை பயணம் முடியும் வரை சைவ உணவையே சாப்பிட தீர்மானித்திருக்கிறாராம் ராகுல் காந்தி. அதனால்தான் அவர் தங்கும் முகாம்களில் சைவ உணவுகள் மட்டுமே அனைவருக்கும் பரிமாறப்படுகின்றன.