Published:Updated:

இங்கிலாந்து எம்.பி-யைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ராகுல் -காங்., பாஜக இடையே வெடித்த மோதல்

சாம் பிடரோடா - ஜெர்மி கார்பின் - ராகுல் காந்தி ( ட்விட்டர் )

சாம் பிடரோடா, சர்ச்சைக்குறிய கருத்துகளைக் கூறும் இங்கிலாந்து எம்.பி ஜெர்மி கார்பினுடன் ராகுல் காந்தி இருக்கும்படியான புகைப்படத்தை இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் வெளியிட்டிருக்கிறது.

இங்கிலாந்து எம்.பி-யைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ராகுல் -காங்., பாஜக இடையே வெடித்த மோதல்

சாம் பிடரோடா, சர்ச்சைக்குறிய கருத்துகளைக் கூறும் இங்கிலாந்து எம்.பி ஜெர்மி கார்பினுடன் ராகுல் காந்தி இருக்கும்படியான புகைப்படத்தை இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் வெளியிட்டிருக்கிறது.

Published:Updated:
சாம் பிடரோடா - ஜெர்மி கார்பின் - ராகுல் காந்தி ( ட்விட்டர் )

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நிகழ்வில் கலந்துகொள்ள இங்கிலாந்து சென்றிருக்கிறார். இந்த நிலையில் சாம் பிடரோடா, சர்ச்சைக்குறிய கருத்துகளைக் கூறும் இங்கிலாந்து எம்.பி ஜெர்மி கார்பின் ஆகியோருடன் ராகுல் காந்தி இருக்கும்படியான புகைப்படத்தை இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் வெளியிட்டிருக்கிறது. இந்தப் புகைப்படம் பா.ஜ.க தலைவர்களால் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டுவருகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இங்கிலாந்து எம்.பி ஜெர்மி கார்பின் ஜம்மு காஷ்மீர் நிலைமை குறித்தும், பா.ஜ.க-வின் மாட்டிறைச்சி அரசியல் குறித்தும் பல சர்ச்சைக்குறிய கருத்துகளை அவ்வப்போது தெரிவித்துவந்தார். இதற்கு இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனப் பலமுறை இந்திய அரசால் கண்டனத்துக்கு ஆளானார்.

இந்த நிலையில், ஜெர்மி கார்பினுடன் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படத்தை பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா தனது ட்விட்டரில் பகிர்ந்து, ``காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் பரப்புரையை எதிரொலிக்கும் ஜெர்மி கார்பின் போன்ற இந்திய விரோத சக்திகளைச் சந்தித்தாலும் சரி, அல்லது சீனர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, சீனப் பணத்தை ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு எடுத்துக்கொண்டாலும் சரி, டோக்லாம் சமயத்தில் சீனர்களைச் சந்தித்தாலும் சரி, ராகுல் காந்தி இந்தியப் படைகளையும், பிரதமர் மோடியையும் எதிர்க்கும் முயற்சியில் உறுதியாக இருக்கிறார். ஆனால் அவர் ஏன் இந்திய நாட்டை எதிர்க்க வேண்டும்?" எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கிலாந்து எம்.பி ஜெர்மி கார்பினுடன் பிரதாமர் மோடி
இங்கிலாந்து எம்.பி ஜெர்மி கார்பினுடன் பிரதாமர் மோடி
ட்விட்டர்

அதே போல, பா.ஜ.க-வின் ஐ.டி தலைவர் அமித் மாள்வியாவும் தனது ட்விட்டரில், ``இங்கிலாந்து எம்.பி-யும் தொழிலாளர் தலைவருமான ஜெர்மி கார்பின் இந்தியாவின் மீதான தனது வெறுப்பை வெளிப்படுத்துபவர் என்றே அறியப்படுபவர். அவர் காஷ்மீர் பிரிவினையை ஆதரிக்கிறார். அவர் சந்தேகத்துக்கு இடமின்றி ஓர் இந்து விரோதி.

ஒருவழியாக ராகுல் காந்தி தனக்கு ஒத்துழைக்கும் வெளிநாட்டு நண்பரைக் கண்டுபிடித்துவிட்டார். அவரைப் போலவே இந்தியாவை இழிவுபடுத்துகிறார்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸுடன் பிரதமர் மோடி
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸுடன் பிரதமர் மோடி

பா.ஜ.க-வின் இந்த விமர்சனங்களுக்கு, பல ஆண்டுகளாக ராகுல் காந்தி குடும்பத்தின் நெருங்கிய உதவியாளரான சாம் பிடரோடா, தனியார் செய்தி தொலைக்காட்சியில், ``ஜெர்மி கார்பின் என்னுடைய தனிப்பட்ட நண்பர், ஹோட்டலில் ஒரு கோப்பை தேநீர் அருந்த வந்தார். இதில் அரசியல் எதுவும் இல்லை. வாழ்க்கையில் எல்லாமே அரசியலைப் பற்றியது அல்ல. மேலும், எல்லாவற்றிலும் உங்களுடன் உடன்படாத நண்பர்களையும் அறிந்து கொள்வது நல்லது. அதுதான் பன்முகத்தன்மை. எந்த நிபந்தனையும் இல்லாமல் மக்களைக் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துங்கள்" என்று பேசினார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்வுடன் பிரதமர் மோடி
சீன அதிபர் ஜி ஜின்பிங்வுடன் பிரதமர் மோடி

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, இங்கிலாந்து எம்.பி ஜெர்மி கார்பின் பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, ``இந்தப் புகைப்படத்தில் இருக்கும் இவரையும் அதே கேள்விகளைக் கேட்குமாறு நான் எங்கள் நண்பர்களிடம் கேட்கலாமா? இந்தப் புகைப்படத்தை வைத்து இந்தியா குறித்த ஜெர்மி கார்பினின் கருத்துகளைப் பிரதமர் மோடி ஆமோதித்திருக்கிறார் என்று அர்த்தமாகுமா?

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பே, பிரதமர் மோடி டாவோஸில் நீரவ் மோடியுடன் ஏன் போஸ் கொடுத்தார். நமது நிலப்பரப்பைச் சீனா ஆக்கிரமித்திருக்கும் நிலையில், பிரதமர் ஏன் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்? அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்கப் பிரதமர் ஏன் பாகிஸ்தான் சென்றார்? எங்களிடமிருந்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட எவரையும் ஒருபோதும் சந்திக்க மாட்டோம் என்று அரசாங்கம் உறுதியளிக்குமா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism