Election bannerElection banner
Published:Updated:

`தமிழ் மொழி, கலாசாரத்துக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்!’ - ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண மதுரை வந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

னமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண இன்று மதுரை வந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, திரும்பிச் செல்லும்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

``தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டைக் காண்பதற்காக முதன்முறையாக தமிழகத்துக்கு வந்திருக்கிறேஎன். தமிழ்க் கலாசாரத்துக்கும், தமிழக மக்களுக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜல்லிக்கட்டு விழாவை ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விளையாட்டில் கலந்துகொண்ட காளைகளுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். காளைகள் விளையாடுவதைப் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

தமிழக மக்களின் பண்பாட்டை நேரடியாகப் பார்த்து அறிந்துகொள்ளவே இங்கு வந்திருக்கிறேன். அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்க் கலாசாரத்தைப் பரப்பும் செயல்களில் ஈடுபடுபவர்களை நான் பாராட்டுகிறேன். எப்போதும் தமிழக மக்களுடன் இருப்பதை கடமையாகக் கருதுகிறேன்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மனிதர்களால் காளைகளுக்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லை. இளைஞர்களுக்குத்தான் சிறு காயங்கள் ஏற்பட்டன. அது தவறில்லை.

இந்த கலாசாரம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்க் கலாசாரத்தை அழிப்பதற்கு மத்திய அரசு முயல்கிறது. தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலாசாரத்துக்கும் நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நேரில் கண்டு ரசித்த ராகுல் காந்தி #NowAtVikatan

தமிழர்களின் உணர்வுகளை எந்த ஒரு கட்சியும், எந்த ஓர் அமைப்பும் அழிக்க முடியாது. தமிழகத்தின் கலாசாரமான ஜல்லிக்கட்டு பற்றி என்னிடம் விளக்கிக் கூறினார்கள். அதன் மூலம் அதிகமாக அறிந்துகொண்டேன்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மத்திய அரசின் வேளாண்மைச் சட்டங்கள் விவசாயிகளை அழிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டன. பிரதமருடைய மூன்று நண்பர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்காக விவசாயிகளையும், விவசாய உற்பத்தியையும் அழிக்க நினைக்கிறார்.

விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. அவர்களை அழிப்பதற்கு மத்திய அரசு குறிவைத்திருக்கிறது. விவசாயிகளை பலவீனப்படுத்த நினைத்தால் இந்தியாதான் பலவீனப்படும். மத்திய அரசு நாட்டுக்கும் மக்களுக்கும் உதவியாக இல்லை. இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஊடுருவியபோது பிரதமர் மௌனமாக இருந்தார், அவர் குரல் கொடுக்கவில்லை" என்று ராகுல் காந்தி விமர்சித்தார். பின்னர் அவர் டெல்லிக்குக் கிளம்பிச் சென்றார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்

ராகுலை வழியனுப்ப வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே விடவில்லை. இதனால் மதுரை மாநகர மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்பு கே.எஸ்.அழகிரியை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு