Published:Updated:

``ஒருமுறை பாட்டி, உங்களைப் பற்றி இப்படிச் சொன்னார்...” - சோனியாவுக்கு ராகுல் உருக்கமான பதிவு

சோனியா காந்தி, ராகுல் காந்தி

"உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் அம்மா. யார் என்ன சொன்னாலும், நீங்கள் அப்படி இல்லை. இவற்றையெல்லாம் நீங்கள் அன்பால் தான் செய்தீர்கள்",

``ஒருமுறை பாட்டி, உங்களைப் பற்றி இப்படிச் சொன்னார்...” - சோனியாவுக்கு ராகுல் உருக்கமான பதிவு

"உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் அம்மா. யார் என்ன சொன்னாலும், நீங்கள் அப்படி இல்லை. இவற்றையெல்லாம் நீங்கள் அன்பால் தான் செய்தீர்கள்",

Published:Updated:
சோனியா காந்தி, ராகுல் காந்தி

அகில இந்தியக் காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்ததில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கட்சியின் பொறுப்புகளைச் சோனியா காந்தி அவரிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 26-10-22 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில், தன் தாய் சோனியா காந்தி மற்றும் மறைந்த அவரின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியும் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். "பாட்டி இந்திரா காந்தி, ஒருமுறை தாயார் சோனியா காந்தியை பற்றி கூறிகையில், எனக்கு அவர் மகள் என்பார். அது உண்மை தான். உங்கள் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன்" என்றும் அந்த புகைப்படத்தில் பகிர்ந்துள்ளார். ராஜீவ் காந்தி இந்த பதிவைக் கட்சியின் பொறுப்புகளைச் சோனியா காந்தி மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஒப்படைத்ததைத் தொடர்ந்து பதிவிட்டுள்ளார்.

அதுபோல பிரியங்கா காந்தி வதோராவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோனியா காந்தியும் ராஜீவ் காந்தியும் கைகள் கோர்த்தபடி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ,"உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் அம்மா. யார் என்ன சொன்னாலும், நீங்கள் அப்படி இல்லை. இவற்றையெல்லாம் நீங்கள் அன்பால் தான் செய்தீர்கள்"என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நடந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வில் போட்டியிட்ட சசி தரூரைப் பின்னுக்குத்தள்ளி, மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக வெற்றிபெற்று நேற்று பதவியேற்றார் . கடந்த 24 ஆண்டுக் காலத்தில் காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பை ஏற்பது இதுவே முதல்முறையாகும்.

``ஒருமுறை பாட்டி, உங்களைப் பற்றி இப்படிச் சொன்னார்...” - சோனியாவுக்கு ராகுல் உருக்கமான பதிவு

``இன்றுதான் நிம்மதியாக இருக்கிறேன். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்பதையும் விளக்குகிறேன். என் கடைசி மூச்சு வரை நான் பெற்ற அன்பையும் மரியாதையையும் நினைவு கூர்வேன். ஆனால் இந்த மரியாதை ஒரு பெரிய பொறுப்பாகவும் இருந்தது. என்னால் சுமக்க முடியும் அளவுக்குப் பொறுப்பை ஏற்றிருந்தேன். இன்று பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன். அதனால் இயல்பாகவே, நான் நிம்மதியாக உணர்கிறேன்” என்று கார்கேவிடம் பொறுப்பை ஒப்படைத்தபோது சோனியா காந்தி கூறினார்.

மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.