Published:Updated:

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர்கள் வீட்டில் ரெய்டு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வேலுமணியின் ஆதரவாளர்கள் வீட்டில் ரெய்டு
வேலுமணியின் ஆதரவாளர்கள் வீட்டில் ரெய்டு ( 342242449056101 )

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புதுக்கோட்டை சார்லஸ் நகரிலுள்ள முருகானந்தத்தின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்துவந்தவர், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரிந்துவருகிறார். இவருடைய மனைவி காந்திமதி முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். அரசு ஊழியரான முருகானந்தமும், இவரின் மனைவி காந்திமதி வருமானத்துக்கு அதிகமாக 100 சதவிகிதம், அதாவது ரூ.15 கோடி வரையிலும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புதுக்கோட்டை சார்லஸ் நகரிலுள்ள முருகானந்தத்தின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

`சந்தை விலை ரூ.105; வேலுமணி டிரஸ்ட்டுக்கு வெறும் 5 ரூபாய்' கோவை மாநகராட்சியில் அறப்போர் இயக்கம் மனு!
முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர்கள் வீட்டில் ரெய்டு!

புதிய பேருந்து நிலையத்தின் அருகேயுள்ள காம்ப்ளக்ஸ், திருமண மண்டபத்திலும் சோதனை நடைபெற்றது. அதோடு, புதுக்கோட்டை, கடுக்காக்காட்டிலுள்ள முருகானந்தத்தின் சகோதரர்களான பழனிவேல், ரவிச்சந்திரன் இருவரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்திவருகின்றனர். புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி இமயவர்மன் தலைமையில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூரைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆறு குழுக்களாகப் பிரிந்து இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் சகோதரர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம், கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு ஊழியரான முருகானந்தம் அவர்களின் சகோதரர்களின் வளர்ச்சி அபரிமிதமானது என்கின்றனர். முருகானந்தம், அவருடைய சகோதரர்கள் அதிமுக ஆட்சிக்காலத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணியின் ஆதரவாளர்களாகவும், அவருக்கு நெருக்கமாகவும் இருந்துள்ளனர். இந்தநிலையில்தான் இவர்கள் பெயரில் அரசு ஒப்பந்தங்களை முறைகேடாக எடுத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கான எல்இடி லைட் பொருத்துதல், சாலையில் ஒளிரும் வண்ண விளக்குகள் பொருத்துதல், கொரோனா காலகட்டத்தில் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை சப்ளை செய்வது உள்ளிட்ட அரசு ஒப்பந்தங்களையும் இவர்கள் முறைகேடாகப் பெற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர்கள் வீட்டில் ரெய்டு!

இந்தநிலையில்தான் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் மூன்று பேரின் வீடுகளிலும் தொடர் சோதனை நடத்திவருகின்றனர். சோதனையில், இதுவரையிலும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்ப்பு தொடர்பான சில ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்த நிலையில், தற்போது அவரின் ஆதரவாளர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. இதனால், வேலுமணியின் ஆதரவாளர்கள் பலரும் கலக்கமடைந்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு