Published:Updated:

`மகாராஷ்டிராவின் ஒவைசி’ என்ற சஞ்சய் ராவத்... ராஜ் தாக்கரே தரப்பினரின் எச்சரிக்கை!

தாதரில் வைக்கப்பட்டுள்ள பேனர்

`மகாராஷ்டிராவின் ஒவைசி ராஜ் தாக்கரே’ என்று சொன்ன சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`மகாராஷ்டிராவின் ஒவைசி’ என்ற சஞ்சய் ராவத்... ராஜ் தாக்கரே தரப்பினரின் எச்சரிக்கை!

`மகாராஷ்டிராவின் ஒவைசி ராஜ் தாக்கரே’ என்று சொன்ன சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தாதரில் வைக்கப்பட்டுள்ள பேனர்

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே, கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதச் சத்தமும் இல்லாமல் கிடந்த தனது கட்சிக்குப் புத்துயிர் கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதற்காக, மசூதிகளில் வைக்கப்படும் ஒலிபெருக்கி விவகாரத்தைக் கையில் எடுத்துப் பேச ஆரம்பித்துள்ளார். வரும் மே 3-ம் தேதிக்குள் மகாராஷ்டிரா மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்குப் பல்வேறு தரப்பிலுருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே மகன் ஆதித்தய தாக்கரே, ``ஒலிபெருக்கியை அகற்றுவதைவிட, அதை அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்துப் பேசப் பயன்படுத்தலாம்” என்று தெரிவித்திருந்தார். சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், ``உத்தரப்பிரதேச தேர்தலில் ஒவைசி பாஜக-வுக்கு என்ன செய்தாரோ அதைத்தான் மகாராராஷ்டிராவில் ராஜ் தாக்கரே செய்கிறார். பாஜக-வுக்கு மகாராஷ்டிராவின் ஒவைசியாக ராஜ் தாக்கரே இருக்கிறார்” என்று தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

இதற்கு ராஜ் தாக்கரே தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, சஞ்சய் ராவத்துக்கு மிரட்டல் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மும்பை தாதரிலுள்ள சிவசேனா தலைமை அலுவலகம் எதிரில் பிரமாண்ட பேனர் ஒன்று ராஜ் தாக்கரே சார்பாக வைக்கப்பட்டிருக்கிறது. அதில், ``யாரை ஒவைசி என்று அழைக்கிறாய் சஞ்சய் ராவத்? உங்கள் ஒலிபெருக்கியை (வாயை) மூடுங்கள். ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் ஒலிபெருக்கியால் பாதிக்கப்பட்டுள்ளது. வாயை மூடாவிட்டால் நாங்கள் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா பாணியில் வாயை மூடவைப்போம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பேனர் மும்பை முழுக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா இடையில் மோதலை உருவாக்கியிருக்கிறது. ``ஒலிபெருக்கி தொடர்பான ராஜ் தாக்கரே கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை” என்று துணை முதல்வர் அஜித் பவார் குறிப்பிட்டுள்ளார். விரைவில் மாநகராட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே, பாஜக ராஜ் தாக்கரே மூலம் ஒலிபெருக்கி அரசியலில் ஈடுபட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism