Published:Updated:

``எடப்பாடியாரை அழைக்க ஓ.பி.எஸ்-ஸுக்கு எந்தத் தகுதியும் கிடையாது!" - ராஜன் செல்லப்பா காட்டம்

ராஜன் செல்லப்பா

``ஒ.பி.எஸ்-ஸை இதுவரை யாரும் ஆதரிக்கிறோம் என்று சொல்லவில்லை. இன்றைக்கு எடப்பாடியார் பின்னால் ஆடாமல், அசையாமல், வலுவோடு இந்த இயக்கம் இருக்கிறது. மிகச்சிறந்த தலைமையாக எடப்பாடியார் இருக்கிறார்." - ராஜன் செல்லப்பா

``எடப்பாடியாரை அழைக்க ஓ.பி.எஸ்-ஸுக்கு எந்தத் தகுதியும் கிடையாது!" - ராஜன் செல்லப்பா காட்டம்

``ஒ.பி.எஸ்-ஸை இதுவரை யாரும் ஆதரிக்கிறோம் என்று சொல்லவில்லை. இன்றைக்கு எடப்பாடியார் பின்னால் ஆடாமல், அசையாமல், வலுவோடு இந்த இயக்கம் இருக்கிறது. மிகச்சிறந்த தலைமையாக எடப்பாடியார் இருக்கிறார்." - ராஜன் செல்லப்பா

Published:Updated:
ராஜன் செல்லப்பா

பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சாதகமாக உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியால் அமைப்புச் செயலாளராக அறிவிக்கப்பட்ட மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வுமான ராஜன் செல்லப்பா ஓ.பி.எஸ்-ஸை விமர்சித்து கடுமையாகப் பேசியிருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில்...
செய்தியாளர் சந்திப்பில்...

மதுரையில் இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``எடப்பாடியாருக்கு வலிமைமிக்க தீர்ப்பினை கழகத் தொண்டர்கள் ஏற்கெனவே வழங்கிவிட்டனர். எடப்பாடியாருக்குப் பின்னால் 63 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதிக மெஜாரிட்டியாக 2,663 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடியாரை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வுசெய்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சிலர் இடைக்காலத் தீர்ப்பைப் பெற்று சில அறிக்கைகளை விடுகின்றனர். இன்னும் இறுதித் தீர்ப்பு வரவில்லை. அதில் மேல்முறையீடு இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், அந்தத் தீர்ப்பில் பொதுக்குழுதான் உயர்ந்தது என்று நீதிமன்றம் ஒப்புக்கொண்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`கசப்பை மறக்க வேண்டும்’ என்று ஓ.பி.எஸ் கூறுகிறார். ஆனால், தி.மு.க-வுடன் தொடர்புவைத்தவர்களை எப்படி மறக்க முடியும்... `இனி வசந்த காலம்’ என்கிறார். தி.மு.க-வுடன் தொடர்பிலிருப்பவர்களை எப்படி வசந்த காலம் என்று ஏற்க முடியும்?

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

ஒ.பி.எஸ்-ஸை இதுவரை யாரும் ஆதரிக்கிறோம் என்று சொல்லவில்லை. இன்றைக்கு எடப்பாடியார் பின்னால் ஆடாமல், அசையாமல், வலுவோடு இந்த இயக்கம் இருக்கிறது. மிகச்சிறந்த தலைமையாக எடப்பாடியார் இருக்கிறார். தி.மு.க-வை எதிர்க்கக்கூடிய தலைமையாக எடப்பாடியார் இருக்கிறார்.

எடப்படியார், புரட்சித்தலைவி அம்மாவால் அடையாளம் கண்டு 1989-ம் ஆண்டு சேவல் சின்னத்தில் போட்டியிட வைக்கப்பட்டார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் எனப் பல பதவிகளைப் பெற்று தன் உழைப்பால் உயர்ந்தார். எந்தத் தவறும் செய்யாதவர், புரட்சித்தலைவி அம்மா எங்களுக்கு எடப்பாடியாரை மறைமுகமாக அடையாளம் காட்டினார்கள்.

தீர்ப்பை மட்டும் வைத்துக்கொண்டு கட்சியை வளர்க்க முடியாது. நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு மூலம் இறுதியான தீர்ப்பைப் பெறலாம். நீதிமன்றம் கட்சிகளை நடத்த முடியாது. கட்சி விவகாரங்களில் தலையிடாது என்பது நாடறிந்த உண்மை.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

ஓ.பி.எஸ்., எடப்பாடியாரை அழைக்கிறார். அவருக்கு அழைக்க எந்தத் தகுதியும் இல்லை, அழைத்தது தவறு. `அனைவரும் ஒன்று சேர வேண்டும்’ என்று கூறுகிறார். தி.மு.க-வுக்கு ஓ.பி.எஸ் ஆதரவு தெரிவிக்கிறார். நாங்கள் தி.மு.க-வை எதிர்க்கிறோம், நாங்கள் எப்படி ஒன்று சேர முடியும்?

கூட்டுத் தலைமை என்று ஓ.பி.எஸ் கூறுகிறார்... நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை தேர்ந்தெடுக்கப் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டன. யாரும் கூட்டுத் தலைமையை விரும்பவில்லை, இரட்டைத் தலைமையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் யாரும் இல்லை.

சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைக்கும் ஒ.பி.எஸ்-ஸின் எண்ணம் தோல்வியடையும். தி.மு.க தற்போது 15 சதவிகிதம் தாழ்வை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் எடப்பாடியாருக்குத் தேர்தல் காலங்களில் தன்னிச்சையாக வெற்றிபெற வாய்ப்புள்ளது.

எப்போதெல்லாம் தீர்ப்பு தனக்குச் சாதகமாக வருகிறதோ, அப்போதெல்லாம் தென் மாவட்டங்களுக்கு ஓ.பி.எஸ் வருகிறார், இதன் மூலம் தென் மாவட்டப் பகுதிகளை உரிமைகொண்டாட முயல்கிறார். தென் மாவட்டம் என்பது சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது. ஓ.பி.எஸ்-ஸுக்குத் தனிச் செல்வாக்கு என்பது கிடையாது.

ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பா

இலங்கைக்கு 50 லட்ச ரூபாய் நிதி வழங்குகிறார். அதை தமிழ்நாடு அரசு மூலம் வழங்குகிறார். கட்சி சார்பாக கொடுக்கவில்லை, கட்சியிடமும் அவர் அனுமதி பெறவில்லை. ஜானகி அம்மாள், புரட்சித்தலைவியிடம் கட்சியை விட்டுக்கொடுத்தார்கள். ஆனால் ஓ.பி.எஸ் அப்படி இல்லை. பசுத்தோல் போர்த்திய புலி. நாங்கள் ஓ.பி.எஸ்-ஸுடன் ஒன்று சேர வழியே இல்லை.

தென் மாவட்ட மக்களும், கழகத்தினரும் எடப்பாடியார்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். காரணம், தென்பகுதிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மக்கள் கேட்காமலேயே வழங்கியவர், அதனால்தான் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டுக்குச் சொந்தக்காரராக எடப்பாடியார் இருக்கிறார். நிச்சயம் வெற்றிபெற்று இந்த இயக்கத்தின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடியார் வருவார். எங்களின் தலைமையாகத் திகழும் எடப்பாடியாரின் கட்டளையை ஏற்று, தொடர்ந்து கழகப்பணியில் நாங்கள் செயல்படுவோம்" என்றார்.