Published:Updated:

ராஜேந்திர பாலாஜியை விடாமல் துரத்தும் வழக்குகள் - `மேலே இருப்பவரின்’ கவனம் கிடைக்காததால் அதிருப்தி!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அடுத்தடுத்து வழக்குகள் சூழந்திருப்பதால், கவலை அவரை ஆட்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர் அதிமுக-வினர்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிரடியாகப் பேசி, அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்திவந்தவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தற்போது ஜாமீனுக்காக நீதிமன்றங்களில் மாறி மாறி மனு செய்துகொண்டிருக்கிறார்.

ராஜேந்திர பாலாஜி.
ராஜேந்திர பாலாஜி.

அமைச்சராக இருந்தபோது திமுக உட்பட பல கட்சிகளையும், அரசியலைக் கடந்து தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்துவந்தவர் ராஜேந்திர பாலாஜி. சொந்தக் கட்சியைச் சேர்ந்த சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மனுடன் மோதல் ஏற்பட்டு கட்சிக்குள் கோஷ்டிப்பூசலையே உருவாக்கியது.

`ராஜேந்திர பாலாஜி பாஜக-வுக்குச் சென்றாலும் விட மாட்டோம்!' - அமைச்சர் நாசர் காட்டம்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்ததால் அமைதியானவர், திடீரென்று டெல்லிக்குச் சென்று பாஜக-வில் இணையப்போவதாக செய்தி வெளியானது. ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆவின்
ஆவின்

`ஆவின் நிறுவனத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் சம்பந்தமாக விசாரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருப்பதுதான் இப்போது ராஜேந்திர பாலாஜிக்குத் தலைவலியாகியிருக்கிறது.

அமாவாசை டு நாகராஜசோழன்: கே.டி.ராஜேந்திர பாலாஜி வளர்ந்த கதை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது, அவர்மீது தாக்கல் செய்யப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள்கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடபட்டது. இந்த வழக்கில் 3-வது நீதிபதியின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3-வது நீதிபதி எந்த உத்தரவும் இடக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நாசர், ராஜேந்திர பாலாஜி
நாசர், ராஜேந்திர பாலாஜி

அந்த வழக்கிலிருந்து தற்காலிகமாக மீண்டதில் நிம்மதியடைந்த ராஜேந்திர பாலாஜி மீது, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் வழக்கு ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்குக் கடந்த மாதம் 24-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்துக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு, சாத்தூரில் வரவேற்பு அளித்தபோது, கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தரப்புக்கும், ராஜேந்திர பாலாஜி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கிளைச் செயலாளர் வீரோவு ரெட்டி தாக்கப்பட்டார்.

`சொத்துக்குவிப்பு வழக்கு டு ஆவின் முறைகேடு... இறுகும் பிடி!' - பாஜக-வில் இணைகிறாரா ராஜேந்திர பாலாஜி?

அவர் கொடுத்த புகாரில் ராஜேந்திர பாலாஜி உட்பட 11 பேர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு செய்தார். ஆனால் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

இந்தச் சூழலில், தன்னைக் கைதுசெய்ய காவல்துறை முயற்சி எடுப்பது தெரிந்ததும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீனுக்கு மனு செய்தார். ``ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறோம். ஆகவே, இந்த வழக்கில் நாங்கள் கைதுசெய்யப்படுவதைத் தடுக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என ராஜேந்திர பாலாஜி தரப்பில் முறையீடு முன்வைக்கப்பட்டது.

'தூது'விட்ட ராஜேந்திர பாலாஜி முதல் ஐ.டி வளையத்தில் தி.மு.க பிரமுகர் வரை கழுகார் அப்டேட்ஸ்...

அதற்கு நீதிபதி, ``அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலோ, தலைமை நீதிபதியிடமோ முறையிடலாம்" எனத் தெரிவித்தார். வழக்கை விசாரிக்க ராஜேந்திர பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

தென்காசி மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கிரிமினல் வழக்கு ராஜேந்திர பாலாஜியை நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது என்கிறார்கள் விருதுநகர் மாவட்ட அதிமுக-வினர்.

அதேநேரம், ``திமுக அரசு, அண்ணன்மீது பல வழக்குகளைப் போட்டு பழிவாங்க நினைக்கிறது. அதற்கு அதிமுக-வினர் சிலரும் துணை போகிறார்கள். அதிலிருந்து சட்டப்படி மீண்டு வருவார்' என்கிறார்கள் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள்.

இது சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்தை அறிய அவர் அலைபேசியைத் தொடர்புகொண்டோம். ஆனால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

'எல்லாம் மேல இருப்பவன் பார்த்துக்குவான்' என்று ராஜேந்திர பாலாஜி சூசகமாகப் பேசியது, முன்பு அதிமுக-வில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், இவ்வளவு பிரச்னைகளைச் சந்தித்துவரும் அவருக்கு, மேலிருப்பவரும் சரி, உடனிருப்பவர்களும் சரி, காப்பாற்ற வராததால் அதிருப்தியில் இருக்கிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு