Election bannerElection banner
Published:Updated:

சொத்துக்குவிப்பு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: திமுகவின் பரப்புரை பிளான்; அப்செட்டில் ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

``மனுதாரரின் புகாரின்படி லஞ்ச ஒழிப்புத்துறை ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யலாம்'' என்று நீதிபதி சத்தியநாராயணாவும், ``புகாரில் முகாந்திரம் இல்லை. வழக்கு பதிவு செய்யத் தேவையில்லை'' என்று நீதிபதி ஹேமலதாவும் தீர்ப்பளித்தனர்.

சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மாறுபட்ட தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கியிருப்பதால், இந்த வழக்கின் மீது அனைவரின் கவனமும் திரும்பியிருக்கிறது. அதேநேரம், தேர்தல் நேரத்தில் இந்த வழக்கைவைத்து தி.மு.க-வினர் பரப்புரை செய்வதற்குத் திட்டமிட்டிருப்பது ராஜேந்திர பாலாஜியை அப்செட் ஆக்கியிருக்கிறது என்கிறார்கள்.

 ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த 2011-2013 காலகட்டத்தில், வருமானத்தை மீறி சொத்து சேர்த்திருப்பதை விசாரிக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுக்க, இந்தப் புகாரை விசாரிக்காமல் முடித்துவிட்டனர்.

அதைத் தொடர்ந்து கடந்த 2014- ல் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். இந்தப் புகாரில் முகாந்திரம் இருக்கிறதா என்று எஸ்.பி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி இந்தப் புகாரை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்துவிட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளிவைத்தது. இந்தநிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா அமர்வு தீர்ப்பளித்தது.

``மனுதாரரின் புகாரின்படி லஞ்ச ஒழிப்புத்துறை ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யலாம்’’ என்று நீதிபதி சத்தியநாராயணாவும், ``புகாரில் முகாந்திரம் இல்லை. வழக்கு பதிவு செய்யத் தேவையில்லை'' என்று நீதிபதி ஹேமலதாவும் தீர்ப்பளித்தனர். இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட உத்தரவால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்குச் செல்லவிருக்கிறது.

ராஜேந்திர பாலாஜி!
ராஜேந்திர பாலாஜி!

இந்தநிலையில், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகவே வரும் என்று தி.மு.க-வினர் கூறிவருகிறார்கள். தி.மு.க தலைமையால் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இருப்பதாகச் சொல்லப்படும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக, இந்த விவகாரத்தை பரப்புரை செய்யவிருக்கிறார்கள்.

ஏற்கெனவே இந்த வழக்கிலிருந்து விடுபட முக்கிய கோயில்களில் பரிகார பூஜைகள் செய்துவந்த ராஜேந்திர பாலாஜி. உட்கட்சிப் பிரச்னையால் விருதுநகர் மாவட்டத்தில் தொகுதியைத் தேர்வு செய்ய முடியாமல் குழப்பத்திலிருக்கும் நிலையில், இந்த மாறுபட்ட தீர்ப்பால் ரொம்பவும் அப்செட் ஆகியிருக்கிறார் என்கிறார்கள்.

சசிகலாவுக்காக யாக பூஜையில் கலந்துகொண்டாரா ராஜேந்திர பாலாஜி? - கும்பகோணம் பரபரப்பு
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு