Published:Updated:

`மரியாதையின்றிப் பேசினால் தரம் தாழ்த்தித்தான் பேசுவோம்!’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் தற்போது இரண்டு புயல்கள் கடந்து சென்றிருக்கின்றன. இரண்டிலும் உயிரிழப்பு என்பதே இல்லை என்ற நிலையை எடப்பாடி உருவாக்கியிருக்கிறார். மரியாதையாகப் பேசினால் மரியாதையாக பதில் சொல்வோம்.

தி.மு.க பற்றியும், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளைப் பற்றியும் விமர்சித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதைக் கண்டித்து தி.மு.க-வினர் விருதுநகர் மாவட்டத்தில் அவரின் உருவப்படங்களை எரித்துப் போராட்டம் நடத்தியது பதற்றத்தை உருவாக்கியிருக்கும் நிலையில், மேலும் தி.மு.க-வினரைப் பற்றிக் கடுமையாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

சாத்தூர் அருகிலுள்ள விஜயகரிசல்குளத்தில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது, ``எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது, பல்வேறு சோதனைகளைக் கடந்து, கட்சியை நடத்தியதால்தான் இன்று ஒன்ரைக் கோடி தொண்டர்கள் இரும்பு மனிதர்களாக இருக்கிறார்கள். தயாளுஅம்மாள், ராசாத்தியம்மாள் பற்றியும், மரணத்துக்குப் பறகு கலைஞரையும் இதுவரை விமர்சித்துப் பேசியது கிடையாது.

ஸ்டாலினும் ராசாவும்தான் எங்கள் தலைவர்களை ஒருமையில் பேசிவருகின்றனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. தி.மு.க ஆட்சியில் எதுவுமே செய்யாமல் எங்களைப் பற்றி க்குறை கூற அவர்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. தமிழகத்துக்கு தி.மு.க எதுவுமே செய்யவில்லை.

இந்த மாவட்டத்தில் தி.மு.க-வினர் மிரட்டலுக்கெல்லாம் அ.தி.மு.க-காரன் பயப்பட மாட்டான். தி.மு.க-வுக்கு சகுனம் சரியில்லை. நாங்களும் பின்விளைவுகள், முன்விளைவுகள் எல்லாவற்றையும் பார்த்துக் கடந்து வந்தவர்கள்தான். எங்கள் முதல்வரை யார் தவறாகப் பேசினாலும் எந்த விளைவையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். ஊழல்வாதியாகப் பிறந்தவர் மு.க.ஸ்டாலின்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

பொதுமக்களைச் சந்திப்பதற்காக ஊர் ஊராக மாவட்டம்தோறும் எங்கள் முதல்வர் எடப்பாடியார் சென்று வந்து கொண்டிருக்கிறார். முதல்வரின் தடுப்பு நடவடிக்கையால்தான் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கிறது. கொரோனா காலத்தில் மு.க.ஸ்டாலின் பல கோடி செலவழித்து தலைமுடியை வளர்த்தாரே தவி்ர வேறு எதையும் செய்யவில்லை .

மு.க.ஸ்டாலின் உட்பட தி.மு.க தலைவர்களின் சொத்துப் பட்டியலை தற்போது தயார் செய்துவருகிறோம். முதல்வர் எடப்பாடியாரைப் பார்த்து தரக்குறைவாக ஆ.ராசா பேசுகிறார். இதேபோல் நான் ஆ.ராசாவி்டம் திருப்பிக் கேட்க எவ்வளவு நேரம் ஆகும்?

எங்கள் தலைவர்களைப் பற்றிப் பேசினால் தக்க பதிலடி கொடுப்போம். மு.க.ஸ்டாலினின் திமிரை ஒடுக்குவதுதான் எங்கள் வேலை. விளம்பரப்படுத்த பிரசாநத் கிஷோருக்கு ரூ. 380 கோடியை ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். இவ்வளவு கோடி ரூபாய் யாருடையது... தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கொள்ளையடித்ததுதான்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

எடப்பாடியாரை இனிமேல் ஸ்டாலின் உட்பட தி.மு.க தலைவர்கள் அவமரியாதையாகப் பேசினால் இதைவிடக் கேவலமான பதிலடியைத்தான் கொடுப்பேன். 2-ஜியில் ஆ.ராசா ஊழல் செய்தார் என்பது நாட்டுக்கே தெரியும். காங்கிரஸ் ஆட்சியில்தான் ராசாவைக் கைதசெய்தனர். உங்கள் பக்கம் அழுக்கை வைத்துக்கொண்டு எங்களைப் பற்றிப் பேச தகுதி கிடையாது.

தி.மு.க அழுகிப்போன தக்காளி. கூட்டுவைக்கவும் உதவாது, குழம்பு வைக்கவும் உதவாது. அதேநேரம், அ.தி.மு.க ஒன்றும் கை படாத ரோஜா கிடையாது. எங்கேயாவது ஒரு தவறு நடந்தால் எங்கள் தலைவர்கள் கண்டிப்பார்கள்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் தற்போது இரண்டு புயல்கள் கடந்து சென்றிருக்கின்றன. இரண்டிலும் உயிரிழப்பு என்பதே இல்லை என்ற நிலையை எடப்பாடி உருவாக்கியிருக்கிறார். மரியாதையாகப் பேசினால் மரியாதையாக பதில் சொல்வோம். மரியாதையின்றிப் பேசினால் தரம் தாழ்த்தித்தான் பேசுவோம். ஸ்டாலின், ராசா நடமாட முடியாத அளவுக்கு மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்'' என்றார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு