Published:Updated:

ராஜேந்திர பாலாஜி: `இத்தனை நாள்களாக எங்கு இருந்தீர்கள்?’; 15 நாள் நீதிமன்றக் காவல்' - நீதிபதி உத்தரவு

ராஜேந்திர பாலாஜி
News
ராஜேந்திர பாலாஜி

பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைதுசெய்யப்பட்ட நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆவின் உள்ளிட்ட துறைகளில் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி வரை பண மோசடி செய்த வழக்கில் 20 நாள்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரின் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீனுக்காக மனுத்தாக்கல் செய்திருந்தார் ராஜேந்திர பாலாஜி.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அந்த முன்ஜாமீன் மனு, கடந்த டிசம்பர் 17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நாளில் காரில் தப்பிச் சென்று தலைமறைவானார். இதையடுத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் தீவிரமாகத் தேடிவந்தனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் குற்றப்பிரிவு போலீஸார், `லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்கிடையில் அவர் கடல் மார்க்கமாக தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, கடலோரக் கண்காணிப்பையும் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 18 நாள்களாகத் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலத்தில் நேற்று கைதுசெய்யப்பட்டார். நள்ளிரவு 1:15 மணிக்கு விருதுநகர் குற்றப்பிரிவு அலுவகத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜவர்மன்
போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜவர்மன்

இதற்கிடையில், விருதுநகர் ஆட்சியர் அலுவலக வாசலில் சாத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள அமைச்சர் இன்பத்தமிழன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தின் அருகே திரண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அவரிடம் மதுரை சரக டி.ஐ.ஜி காமினி, விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகரன் உள்ளிட்ட போலீஸார், பண மோசடி தொடர்பாக சுமார் மூன்று மணி நேரம் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு இன்று காலை மருத்துவப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு ராஜவர்மன் தலைமையில் திரண்ட அதிமுக-வினர்
ஆட்சியர் அலுவலகம் முன்பு ராஜவர்மன் தலைமையில் திரண்ட அதிமுக-வினர்

பின்னர், அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்:2-ல் நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர், `இன்று உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதால், கைது நடவடிக்கையைக் கைவிட வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதி ராஜேந்திர பாலாஜியிடம், `இத்தனை நாள்களாக எங்கு இருந்தீர்கள்..?’ எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவரை வருகிற 15 நாள்கள் அதாவது, வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.