Published:Updated:

`ரஜினி ரசிகர்கள் அ.தி.மு.க-வுக்குத்தான் வாக்களிப்பார்கள்!’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

``கூட்டணியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அ.தி.மு.க தலைமை, எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்” என்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

`எங்கள் ஓட்டு தலைவர் ரஜினி ஒருவருக்கே... வேறு யாருக்கும் வாக்களிக்க மாட்டோம்...’ என எழுதப்பட்ட பதாகைகளுடன், ரஜினி ரசிகர்கள், திண்டுக்கல் மாநகராட்சி மணிக்கூண்டு அருகே நேற்று, கருப்பு பேட்ஜ் அணிந்து அறவழிப் போராட்டம் நடத்தினர். `ஆன்மிக அரசியல் உங்களால்தான் கொடுக்க முடியும். மக்களுக்காக முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்’ என எழுதப்பட்ட பதாகை ஒன்றையும் ரஜினி ரசிகர்கள் கைகளில் பிடித்திருந்தனர்.

ரஜினி ரசிகர்கள் போராட்டம்
ரஜினி ரசிகர்கள் போராட்டம்

நடிகர் ரஜினி, அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அவருடைய ரசிகர்கள், தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திவரும் சூழலில், ரஜினி தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி, திண்டுக்கல் ரஜினி ரசிகர்கள் அறவழிப் போராட்டம் நடத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

திண்டுக்கல்: போலி பட்டா மூலம் நில அபகரிப்பு! - முன்ஜாமீன் பெற்ற சார்பதிவாளர்கள்

ஒருபுறம் ரஜினி ரசிகர்களின் அறவழிப் போராட்டம் என்றால், மறுபுறம் பழநி முருகன் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ரஜினி ரசிகர்கள், அ.தி.மு.க-வுக்குத்தான் வாக்களிப்பார்கள் எனப் பேசினார். பழநிமலை முருகன் கோயிலுக்கு நேற்று காலை வந்த ராஜேந்திர பாலாஜி, சாமி தரிசனத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ரஜினி ரசிகர்கள் போராட்டம்
ரஜினி ரசிகர்கள் போராட்டம்

அவர் பேசுகையில், ``நடிகர் ரஜினிகாந்த் தன் உடல்நிலையை எந்தவித ஒளிவு மறைவுமின்றி தெரிவித்து, அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டார். அவர் நீண்ட நாள்கள் நோய்நொடியின்றி இருந்து கலை உலகில் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ரஜினிகாந்த் விரும்பியது ஆன்மிக அரசியல்தான். அந்த அரசியலைத்தான் அ.தி.மு.க நடத்திவருகிறது. தி.மு.க-வில் இருப்பவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆன்மிக அரசியலை விரும்பும் ரஜினி ரசிகர்கள், அ.தி.மு.க-வுக்குத்தான் வாக்களிப்பார்கள்” என்றார்.

திண்டுக்கல்: `இயேசுநாதரைச் சுட்ட கோட்சே வாரிசு மாதிரி..!’ - சர்ச்சையான அமைச்சர் சீனிவாசன் பேச்சு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசிய அவர், ``எம்.ஜி.ஆரைச் சொந்தம் கொண்டாடுபவர்கள் அ.தி.மு.க-வினர் மட்டுமே. கூட்டணியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அ.தி.மு.க தலைமை, எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர். வருகிற தேர்தலில் தி.மு.க-வுக்கு சம்மட்டி அடி கொடுத்து மக்கள் தோல்வியடையச் செய்வார்கள்” என்று பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு