Published:Updated:

திமுக-வில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்!

ரஜினியுடன் ஏ.வி.கே.ராஜா
ரஜினியுடன் ஏ.வி.கே.ராஜா

ரஜினி மக்கள் மன்றத்தில் மத்திய சென்னை மாவட்டச் செயலலராக இருந்த ஏ.வி.கே.ராஜா இன்று தி.மு.க-வில் இணைகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார் என்கிற நம்பிக்கையில் ஏராளமானோர் அவரது மக்கள் மன்றத்தில் இணைந்தனர். நீண்டநாள் ரசிகர்களும், சில வெளி நபர்களும் மாவட்டச் செயலாளர்களாகி, தொடர்ந்து மக்கள் தொண்டாற்றி வந்தனர். ஆனால், அரசியல் முடிவிலிருந்து பின் வாங்கினார் ரஜினி. இந்நிலையில், சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பையே கலைத்து மேலும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இதனால், அதில் மாவட்டச் செயலாளராக இருந்தவர்களெல்லாம் வேறு பாதை தேடி பயணமானார்கள். மத்திய சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த தொழிலதிபர் ஏ.வி.கே.ராஜா, மேலும் சில மாவட்ட செயலாளர்கள், மக்கள் மன்றத்தின் மகளிரணியைச் சேர்ந்த 7 நிர்வாகிகள் என மொத்தம் 14 நிர்வாகிகள் திமுக வில் இணைந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு