Published:Updated:

ரஜினி அரசியல்:`களப்பணி செய்தவனுக்கே வலி தெரியும்!' - மன உளைச்சலில் தஞ்சை நிர்வாகி

ரஜினி
News
ரஜினி

`சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் பேசியதைவைத்து ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்பதை உணர்ந்தேன்.’

ரஜினி, தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்தக் கூட்டத்தின் மூலம் அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்பதை உணர்ந்ததாகக் கூறும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகி ஒருவர், `ரஜினி கட்சி தொடங்கவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன்’ என ட்விட்டரில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்கள் மன்ற நிர்வாகி சத்தியமூர்த்தி
மக்கள் மன்ற நிர்வாகி சத்தியமூர்த்தி

நடிகர் ரஜினிகாந்த கடந்த 2017-ம் ஆண்டு தனது ரசிகர்களான மக்கள் மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். இதனால் உற்சாகமடைந்த அவருடைய ரசிகர்கள், தமிழகம் முழுவதும் மக்கள் மன்றத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளைச் செய்துவந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதைத் தொடர்ந்து போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தனது அரசியல் பிரவேசம் பற்றிக் கூறிய ரஜினி, `மக்களிடம் எழுச்சி வர வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும்’ என நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார். இதையடுத்து, ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் மட்டுமன்றி, தமிழக அரசியலிலும் பெரிய எதிர்பார்ப்பு இருந்துவந்தது.

ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினி
ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினி

இந்தநிலையில் ரஜினி, தனக்குச் சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது ரஜினி, தனது உடல்நிலை குறித்துப் பேசியதுடன், அதைக் காரணம் காட்டி அரசியல் கட்சி வேண்டாம் என்கிற தொனியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஜினியின் இந்தப் பேச்சு கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர்களை அதிருப்தியடையச் செய்தது என்கிறார்கள். ரஜினி கூட்டத்தில் பேசியது மற்ற நிர்வாகிகளுக்கும் பரவத் தொடங்கியது. ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, `அரசியல் கட்சி தொடங்குவது குறித்து என்னுடைய முடிவை விரைவில் தெரிவிப்பேன்’ என ரஜினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 நிர்வாகியின் பதிவு
நிர்வாகியின் பதிவு

இந்தநிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மக்கள் மன்ற நகரச் செயலாளரான சத்தியமூர்த்தி என்பவர், `மக்கள் தலைவர் அரசியலுக்கு வர மாட்டார் என்ற சூழ்நிலை நிலவுகிறது. நாளை தெரியும். அவர் அரசியலுக்கு வரவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்ளவிருக்கிறே`ன் - என்றும் மக்கள் தலைவர் வழியில்’ என்று தன் கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து சில மணி நேரத்திலேயே, அனைவரும் மன்னிக்கவும். மன உளைச்சலால் இந்தப் பதிவைப் போட்டுவிட்டேன். தஞ்சை மாவட்டச் செயலாளர் என்னிடத்தில் பேசி, `தலைவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார்’ என்று நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். களப்பணி செய்தவருக்குத்தான் அந்த வலி தெரியும்’ எனவும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு தஞ்சாவூர் மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து சத்தியமூர்த்தியிடம் பேசினோம். ``நான் எம்.எஸ் ஐ.டி படித்திருக்கிறேன். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தேன். ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்ததைத் தொடர்ந்து அந்த வேலையை உதறிவிட்டு, கடந்த மூன்று வருடங்களாக மக்கள் மன்றதின் மூலம் தீவிரமாகப் பணியாற்றிவருகிறேன்.

கஜா புயலின்போது எனது தோப்பிலிருந்த தென்னை மரங்கள் அனைத்தும் விழுந்த நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 50 நாள்கள் நான் நிவாரணப் பணியைச் செய்தேன். இதேபோல் மாவட்ட இளைஞரணிச் செயலாளரான சிவசந்திரனின் மனைவி உயிரிழந்து ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. அந்த சோகத்தை மறந்து 7 மற்றும் 4 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையிலும், சிவசந்திரன் மக்கள் பணியில் ஈடுபட்டுவருகிறார்.

ட்விட்டர் பதிவு
ட்விட்டர் பதிவு

களப்பணியாற்றினவனுக்குத்தான் அந்த வலி தெரியும். என்னைப்போல் படித்த பட்டதாரிகள் ஏராளமானவர்கள் மக்கள் மன்றத்தில் பொறுப்பில் இருந்துகொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். காமராஜர் ஆட்சியை மக்கள் தலைவர் ரஜினியால் மட்டுமே கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்தவன் நான்.

ஆனால், நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் பேசியதைவைத்து ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்பதை உணர்ந்தேன். இதனால் எனக்குக் கடும் மன உளைச்சல் ஏற்பட்டதையடுத்து, அந்தப் பதிவைப் போட்டேன். என்னிடம் பேசிய மாவட்டச் செயலாளர் ரஜினி கணேசன், `தலைவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். நம்பிக்கையோட இருங்க’ எனக் கூறினார். இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்’’ எனத் தெரிவித்தார்.