Published:Updated:

கொரோனா டெஸ்ட், விழப்போன லைட்... ரஜினி பிரஸ்மீட் சுவாரஸ்யங்கள்! #Video

ரஜினி பிரஸ்மீட்

கொரோனா எதிரொலியாக காய்ச்சல் டெஸ்ட் சோதனை, ரஜினி பயன்படுத்தாத நாற்காலி, லவட்டிக்கொண்டு போன ரஜினியின் வாட்டர் பாட்டில் என ரஜினி பிரஸ் மீட்டில் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமே இல்லை.

கொரோனா டெஸ்ட், விழப்போன லைட்... ரஜினி பிரஸ்மீட் சுவாரஸ்யங்கள்! #Video

கொரோனா எதிரொலியாக காய்ச்சல் டெஸ்ட் சோதனை, ரஜினி பயன்படுத்தாத நாற்காலி, லவட்டிக்கொண்டு போன ரஜினியின் வாட்டர் பாட்டில் என ரஜினி பிரஸ் மீட்டில் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமே இல்லை.

Published:Updated:
ரஜினி பிரஸ்மீட்

''வர்ற மகா சிவராத்திரி அன்னிக்கு, பாபாவுக்கு மிகப் பெரிய கண்டம் இருக்கு. அன்னிக்கு 9 மணியில் இருந்து 12 மணிக்குள்ள எதுவும் நடக்கலாம்'' - 'பாபா' படத்தில் இப்படியொரு வசனம் வரும்.

'பாபா' படத்தில்
'பாபா' படத்தில்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த டயலாக் வரும் காட்சியில், நடிகை சுஜாதா காலண்டர் தேதியைக் கிழிப்பார். அது, 'மார்ச் 12' தேதியைக் காட்டும். அதே மார்ச் 12-ம் தேதிதான் ரஜினியின் பிரஸ்மீட்.

பிரஸ் மீட் ஹால்
பிரஸ் மீட் ஹால்

''ரஜினி பிரஸ்ஸைப் பார்க்கிறார்'' என்கிற தகவல் முந்தைய நாள் மாலையில்தான் ஊடகத்தினருக்குக் கிடைத்தது. அந்த நிமிடத்தில் இருந்தே பல்ஸ் எகிற ஆரம்பித்துவிட்டது. ஏர்போர்ட்டில்... வீட்டில்... விழாக்களில் எனப் பத்திரிகையாளர்களை ரஜினி தொடர்ந்து சந்தித்துவருகிறார். ஆனால், அதிகாரபூர்வமாக ஓர் இடத்தில் அமர்ந்து ரஜினி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால், இந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஏக எதிர்பார்ப்பைக் கூட்டியிருந்தது.

பிரஸ் மீட்
பிரஸ் மீட்

2004 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், பா.ம.க-வுக்கு எதிராகச் சீறி, அ.தி.மு.க- பி.ஜே.பி கூட்டணிக்கு ஆறு தொகுதிகளில் ஆதரவு என்கிற அறிவிப்பை பிரஸ் மீட் நடத்தித்தான் சொன்னார் ரஜினி. அந்த பிரஸ் மீட், ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது. அன்றைக்கு இருந்த மீடியாக்கள் அனைத்தும் அந்த பிரஸ் மீட்டில் திரண்டன. இப்போது, அதைவிட பல மடங்கு அதிகம். அதனால்தானோ என்னவோ, பத்திரிகையாளர் சந்திப்பை லீலா பேலஸ் என்ற ஸ்டார் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

போடியத்துக்கு மலர் ஏற்பாடு
போடியத்துக்கு மலர் ஏற்பாடு

ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பிரஸ் மீட் நடத்தினால் அங்கே ரசிகர்கள் திரள்வார்கள். அவர்களைச் சமாளிக்க வேண்டும் என நினைத்தோ என்னவோ ஸ்டார் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்கள். கடற்கரையை ஒட்டியிருக்கும் ஒதுக்குப்புறமான ஹோட்டல், லீலா பேலஸ். ரஜினியின் பிரஸ் மீட் அங்குதான் நடக்கிறது எனத் தெரிந்து ரசிகர்கள் கொஞ்சம் பேர் திரண்டிருந்தார்கள்.

ஹோட்டலுக்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்
ஹோட்டலுக்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்

அந்த ஹோட்டலுக்குச் செல்லும் வழியெங்கும் ரஜினி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஊடகத்தின் அடையாள அட்டையைக் காட்டிய பிறகுதான் டூ வீலரையே உள்ளே விட்டார்கள். பிரமாண்டமான போர்ட்டிகோவில், வழக்கமான ஸ்டார் ஹோட்டல் செக்கிங். கேமரா, பைகள் ஆகியவை ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, கொரோனா செக்கிங் வேறு. மிஷினை நெற்றியில் திலகமிட்டு, 'ஓகே' எனச் சொல்லி அனுப்பி வைத்தார்கள். போர்ட்டிகோவில் இருந்து உள்ளே நுழைந்து கீழிறங்கிச் செல்லும் படிக்கட்டு வழியாகப் போனால், அங்கே பிரமாண்டமான ஹால் இருக்கிறது. அங்கேதான் பிரஸ் மீட்.

கொரோனா செக்கிங்
கொரோனா செக்கிங்

போர்ட்டிகோவில் இருந்து நுழையும் பெரிய வாசலின் உச்சியில் நட்சத்திர வடிவமைப்பில், அலங்கார வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், புறாக்கள் தஞ்சம் அடைந்திருந்தன. இந்த வாசல் வழியாகத்தான் பிரஸ் மீட் நடக்கும் இடத்துக்குச் செல்ல முடியும்.

தஞ்சம் அடைந்த புறா...
தஞ்சம் அடைந்த புறா...

ரஜினி வரும்போது புறாக்கள் எச்சம் போட்டுவிடக்கூடாது என்பதற்காக, அவற்றை விரட்ட முயற்சிகள் நடந்தன. ''வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே...'' என்பது போல அந்தப் புறாக்கள் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தன.

உச்சியில் புறா
உச்சியில் புறா

பிரஸ் மீட் ஹால் முன்பு, ஊடகத்தினரின் வருகையைப் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். அதன்பிறகு, 'பிரஸ்மீட்' என எழுதப்பட்ட அட்டை ஒன்றை லஞ்ச்சுக்காகக் கொடுத்தார்கள். பிரஸ் மீட் ஹாலுக்குள் நுழையும் கதவருகே, உடலை இறுக்கமாக ஒட்டிக்கொண்டிருக்கும் கறுப்பு உடை அணிந்த பவுன்ஸர்கள் நின்றுகொண்டிருந்தனர். அடையாள அட்டையைக் காட்டிய பிறகே, பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதித்தார்கள்.

ஹாலுக்கு வெளியே பவுன்ஸர்கள்...
ஹாலுக்கு வெளியே பவுன்ஸர்கள்...

உள்ளே நுழைந்தால், மிகப் பிரமாண்டமாக இருந்தது ஹால். அதில், ரஜினி பேசுவதற்காக சிறிய மேடை போட்டிருந்தார்கள். மேடையில் ஏற படிக்கட்டுகள். அந்த மேடையில் ஏறுகிற ரஜினி படிக்கட்டுகள் தெரியாமல் தடுமாறி விழுந்துவிடக் கூடாது என்பதற்காக 'yellow black reflective tape' நாலாபுறமும் ஒட்டியிருந்தார்கள்.

yellow black reflective tape
yellow black reflective tape

அந்த மேடையில் ரஜினி அமர்ந்து பேசுவதற்காக குஷன் நாற்காலி ஒன்றும் தயாராகக் கீழே வைக்கப்பட்டிருந்தது. அந்த நாற்காலியில் ரஜினி சாய்ந்து கொள்வதற்காக பில்லோவும் வைக்கப்பட்டிருந்தது. அதோடு, டீபாயும் ரெடியாக இருந்தது. ஆனால், கடைசி வரை அதை ரஜினி பயன்படுத்தவே இல்லை.

பயன்படுத்தாத குஷன் நாற்காலி
பயன்படுத்தாத குஷன் நாற்காலி
பயன்படுத்தப்படாத டீபாய்
பயன்படுத்தப்படாத டீபாய்

மேடையில் மைக் போடியம் மட்டும் இருந்தது. அதையும் ரஜினி வருவதற்கு முன்பு பூக்களால் அலங்கரித்திருந்தார்கள். மிகப் பெரிய வீடியோ திரை ஒன்றும் மேடைக்குப் பக்கவாட்டில் வைக்கப்பட்டிருந்தது. அது எதற்கு? என்கிற கேள்விக்கு பிரஸ் மீட்டில் விடை கிடைத்தது. 2017 டிசம்பர் 31-ம் தேதி, தான் பேசியதை மீண்டும் ஒளிபரப்பவே அந்தத் திரை தயாராக வைத்திருந்தார்கள்.

அந்தத் திரை
அந்தத் திரை

10.30 மணிக்கு பிரஸ் மீட். 10 மணிக்கே இருக்கையில் வந்து அமர்ந்துவிடுங்கள் என அறிவுறுத்தியிருந்தார்கள். அரங்கம் நிரம்பியிருந்தது. சொன்னபடி சரியாக 10.30 மணிக்கு உள்ளே நுழைந்தார் ரஜினி. மேடையேறியதுமே ''தண்ணீர் வேண்டும்'' என்றார். வாட்டர் பாட்டில் ஒன்றை ரஜினியிடம் நீட்டினார்கள். அந்த பாட்டிலில் கம்பெனியின் பெயர் நீக்கப்பட்டிருந்தது. அதை யாராவது படம் எடுத்து, அந்த கம்பெனிக்கு விளம்பரமாக போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, முன் ஜாக்கிரதையாக இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். அடுத்து கர்ச்சீஃப் கேட்டார். முகத்தை ஒத்தி எடுத்துக்கொண்ட பிறகு, மைக் பிடித்து உரையாற்றினார். பத்திரிகையாளர் சந்திப்புக்கான உடல் மொழியில் ரஜினியின் பேட்டி இல்லை. நிகழ்ச்சியில், விழாவில் பேசுவது போல பேசிக்கொண்டே போனார்.

ரஜினி பிரஸ்மீட்
ரஜினி பிரஸ்மீட்

''இன்னொரு பக்கம் ஆட்சியைக் கையில் வச்சுக்கிட்டு, அந்த குபேரனின் கஜானாவைக் கையில் வச்சுகிட்டு அவங்க காத்துக்கிட்டிருக்காங்க'' என்று ரஜினி சொன்ன போது சிரிப்பலை எழுந்தது. ''2017 டிசம்பர் 31-ம் தேதி அன்னைக்கே நான் சொல்லியிருக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு ''அதைக் கொஞ்சம் போடுங்க'' என வீடியோவை போடச் சொன்னார் ரஜினி. போடுவதற்குத் தாமதம் ஆனபோது, ''என்னாச்சு'' என்று கொஞ்சம் சத்தமாகக் கேட்டார்.

ரஜினி
ரஜினி

''அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அப்படி எழுச்சி வந்தால், இரண்டு திராவிடக் கட்சிகளின் அசுர பலம், பண பலம், ஆள் பலம் எதுவுமே நிற்காது. அந்த அலை... அந்த மூவ்மென்ட் உண்டாகணும். அது வரும் என நம்புகிறேன். 2021-ல் அந்த அதிசயம் அற்புதம் நடக்க வேண்டும். இந்த யோசனைகள் மக்களிடம் எழுச்சிபெற்றால், அப்போது வருவேன்'' என்று சொல்லி முடித்தபோது போடியத்தை ஆவேசமாகத் தட்டினார்.

ரஜினி
ரஜினி

ரஜினியின் பிரஸ் மீட் தொடங்கியதுமே, அரங்கத்துக்குள்ளே நுழைய ஒரு கூட்டம் முண்டியடித்தது. ''உள்ளே அனுமதியுங்கள்'' என்று சத்தம் போட்டபடியே இருந்தார்கள். ரஜினி பேசிக் கொண்டிருந்தபோது, இந்த சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்த ரஜினி, எதுவும் சொல்லாமல் தான் சொல்லவந்த செய்தியை மட்டும் அந்த சத்தத்துக்கு இடையேயும் சொல்லி முடித்தார்.

ரஜினி
ரஜினி

''கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாது'' என்று சொல்லி பிரஸ் மீட் முடிந்து ரஜினி கிளம்பியதும், அவரை நோக்கி ஒரு கூட்டம் முண்டியடித்தது. அப்போது, பிரஸ் மீட்டுக்காக வைக்கப்பட்டிருந்த பெரிய லைட்டை எல்லோரும் முட்டித் தள்ள... அது ரஜினியை நோக்கிச் சரிந்தது. ஆனால், அதற்குள் ரஜினி கடந்துவிட்டார்.

ரஜினி போன பிறகு, அவர் பிரஸ் மீட் நடத்திய போடியத்தில் நின்று பேசுவதுபோல போட்டோக்களை எடுத்துக் கொண்டார்கள். ரஜினி குடித்துவிட்டு வைத்திருந்த வாட்டர் பாட்டிலை, ஒருவர் லவட்டிக்கொண்டார்.

ரஜினி நின்ற இடத்தில் ஒரு போஸ்
ரஜினி நின்ற இடத்தில் ஒரு போஸ்

பிரஸ் மீட் முடிந்ததும் பத்திரிகையாளர்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள். மதிய உணவுக்கான பஃபே அது. சூப், ஹைதராபாத் பிரியாணி, ரொட்டி, பன்னீர் டிக்கா பட்டர் மசாலா, மிளகு சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன், ஹாட் சாக்லேட், ரசமலாய், ஐஸ் க்ரீம் ஆகியவை வழங்கப்பட்டன. ஒரு ப்ளேட் உணவின் விலை, ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து, அதிகபட்சம் 2,500 ரூபாய். பத்திரிகை மற்றும் டி.வி சேனல்களில் இருந்து சுமார் 200 பத்திரிகையாளர்கள் பிரஸ் மீட்டில் பங்கேற்றார்கள். உணவு, அரங்க வாடகை, மற்ற செலவுகள் அனைத்தையும் சேர்த்தால், 10 லட்சம் ரூபாய் பிரஸ் மீட்டுக்கு செலவாகியிருக்கலாம்.

டைனிங் ஹால்
டைனிங் ஹால்
போஸ்டர்
போஸ்டர்

பிரஸ் மீட் முடிந்து வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகம் கிளம்பியபோது, ஹோட்டலுக்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் ரஜினி சிரித்துக்கொண்டிருந்தார். ''மக்கள் வாழ வேண்டும் என்றால், தலைவா நீங்கள் ஆள வேண்டும்'' என்ற போஸ்டர் வாசகம் கண்ணில் அறைந்தது.