Published:Updated:

ரஜினி 'சிறப்பான' ஆட்டம்... பி.ஜே.பி 'தரமான' வியூகம்... - 'சம்பவம்' எப்போது?

'இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கசியவிட்டு, தமிழக அரசியல் களத்தில் என்னைப் பதம் பார்க்கிறார்களா!' என்றும் நண்பர்களிடம் அவர் வருத்தப்பட்டுள்ளார்.

rajini
rajini

'ரஜினி அரசியலுக்கு வருகிறார்'- இப்படி ஆயிரத்துக்கும் அதிகமான முறைகூட எழுதியிருக்கலாம். ஆனால், அவர் அரசியலுக்கு வருவது இன்னும் 'புலி வருது' கதையாகவேத்தான் இருக்கிறது.

என்றைக்காவது அவர் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில் வீதி வீதியாய் போஸ்டர் ஒட்டியவர்களும், உயிரை பணயம் வைத்து உயரே நின்று அவரின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்களும், தொண்டராகும் முன்னே ஓய்வு வயதைத் தாண்டிவிட்டார்கள். ஆனாலும், அசராமல் அவ்வப்போது அரசியல் பேசிக்கொண்டேதான் இருக்கிறார் ரஜினி. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2kXXHBZ

வெளிமாநிலங்களில் நடந்த 'தர்பார்' படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினி, தனக்கு வேண்டிய சில நண்பர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, ''நான் சொன்னதுபோல வரும் சட்ட மன்றத் தேர்தலில் களமிறங்கப் போவது உறுதி. அனைத்து மாவட்டங்களிலும் கட்டமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. தை மாதம் பிறக்கட்டும்'' என்று சொல்லி சஸ்பென்ஸ் வைத்தாராம்.

''நான் சொன்னதுபோல வரும் சட்ட மன்றத் தேர்தலில் களமிறங்கப் போவது உறுதி.

இதுபற்றி நம்மிடம் பேசிய ரஜினிக்கு நெருக்கமான சிலர், ''பி.ஜே.பி-யின் தமிழக தலைவர் பதவிக்கு ரஜினியின் பெயரைக் கசியவிட்டதே டெல்லி பி.ஜே.பி மேலிடம்தான் என்று ரஜினி நினைக்கிறார். ஏற்கெனவே அவர்மீது 'பி.ஜே.பி ஆதரவாளர்' என்ற முத்திரை அழுத்தமாக விழுந்துள்ளது. இந்நிலையில், 'இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கசியவிட்டு, தமிழக அரசியல் களத்தில் என்னைப் பதம் பார்க்கிறார்களா!' என்றும் நண்பர்களிடம் அவர் வருத்தப்பட்டுள்ளார்.

ரஜினி
ரஜினி

'தர்பார்' படப்பிடிப்பு முடிந்த கையோடு, மன்ற நிர்வாகிகள் சிலரையும் ரஜினி சந்தித்து, "எந்தக் குழப்பமும் வேண்டாம், கட்சி ஆரம்பிப்பது உறுதி. பி.ஜே.பி தரப்புடன் நாம் கூட்டணி வைப்பதா வேண்டாமா என்பதை பிறகு முடிவு செய்துகொள்ளலாம். அ.தி.மு.க 'வீக்'காக இருக்கிறது. இதுதான் சரியான நேரம்'' என்று உற்சாகமாகப் பேசியிருக்கிறார். பி.ஜே.பி தரப்பிலோ, அரசியல் கட்சி அறிவிப்பை ரஜினி வெளியிட்டதுமே அவரை தங்கள் வலைக்குள் கொண்டுவந்து அவர் தலைமையில் ஓர் அணியை தமிழக தேர்தல் களத்தில் உருவாக்கவேண்டும் எனத் திட்டமிடுகிறது.

- ரஜினியின் அடுத்தகட்ட திட்டம், அதையொட்டிய பி.ஜே.பி-யின் பிளான், ரஜினி ரசிகர்களின் நிலையை விரிவாகச் சொல்லும் ஜூனியர் விகடன் இதழின் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > 1008-வது முறையாக... அரசியலுக்கு வருகிறார் ரஜினி! https://www.vikatan.com/news/general-news/rajinikanth-is-entering-the-politics-again-as-usual

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/