Published:Updated:

`2021-ல் தமிழக மக்கள் அரசியலில் அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிகழ்த்துவார்கள்!' - ரஜினி

ரஜினி

`வரும் 2021-ல் தமிழக மக்கள் அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிகழ்த்துவார்கள்' என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

`2021-ல் தமிழக மக்கள் அரசியலில் அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிகழ்த்துவார்கள்!' - ரஜினி

`வரும் 2021-ல் தமிழக மக்கள் அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிகழ்த்துவார்கள்' என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Published:Updated:
ரஜினி

கோவாவில் நடந்த தேசிய திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. கோவா நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ரஜினி இன்று சென்னை திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், ``நான் வாங்கிய விருதுக்குத் தமிழக மக்கள்தான் காரணம். விருதை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்'' என்றார்.

கமல், ரஜினி
கமல், ரஜினி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமலுடன் கூட்டணி வைத்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ரஜினி, `கட்சி தொடங்கிய பின் உறுப்பினர்களுடன் ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவு அது. யாருடன் கூட்டணி, யார் முதல்வர் என்பது தேர்தல் நேரத்தில் அப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திராவிட மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரஜினி. ``வரும் 2021-ல் தமிழக மக்கள் அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள்” என்றார்.

கமல், ரஜினி
கமல், ரஜினி

கடந்த சில நாள்களுக்கும் முன்பு அரசியலில் ரஜினியும் கமலும் இணையும் அதிசயம் நடக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கமல், ``தமிழகத்தின் மேம்பாட்டுக்காகச் சேர்ந்து பயணிக்க வேண்டி வந்தால் நிச்சயம் பயணிப்போம். கொள்கைகள் குறித்துப் பிறகு பேசிக்கொள்ளலாம். அதற்கு இன்னும் நேரமிருக்கிறது'' என்றார். கோவா செல்வதற்கு முன்பு ரஜினியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசியவர், ``தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்'' என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism