Published:Updated:

தி.மு.க-வை நேரடி போட்டியாகக் கருதும் ரஜினி... கிஷோர் டீமின் 'உஷார்' சர்வே!

கூட்டணி பற்றிப் பேசவில்லை. ஆனால், 'மாற்றுக்கட்சியிலிருந்து வருபவர்களை அரவணைக்க வேண்டும்' என்று சொன்னாராம். மேலும், 'பா.ஜ.க முத்திரை நம்மீது விழுந்துவிடக் கூடாது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''ரஜினி மக்கள் மன்றத்தின் 32 மாவட்டச் செயலாளர்கள், மார்ச் 5-ம் தேதி காலை 10 மணிக்கெல்லாம் ராகவேந்திரா மண்டபத்தில் ஆஜராகிவிட்டனர். சிறிது நேரத்தில் வெள்ளை குர்தா, பைஜாமா சகிதமாக ரஜினியும் ஆஜரானார்.''

''இதெல்லாம்தான் தெரியுமே!''

''முழுமையாகக் கேளும். காலை 10:30 மணிக்கு நல்ல நேரம் தொடங்கியவுடன் கூட்டமும் தொடங்கியது. முதலில் அவர் மாவட்டச் செயலாளர்களைப் பேசச் சொல்லியிருக்கிறார்.''

"கூட்டணி பற்றி எதுவும் பேசினாரா?"

"கூட்டணி பற்றிப் பேசவில்லை. ஆனால், 'மாற்றுக்கட்சியிலிருந்து வருபவர்களை அரவணைக்க வேண்டும்' என்று சொன்னாராம். மேலும், 'பா.ஜ.க முத்திரை நம்மீது விழுந்துவிடக் கூடாது. அதேசமயம், தேவைப்பட்டால் நாம் அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்றாராம். 'ஒருவேளை சசிகலா வெளியே வந்தால், அ.தி.மு.க-வில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் நமக்கும் தி.மு.க-வுக்கும்தான் தேர்தல் களத்தில் நேரடியாகப் போட்டி இருக்கும்' என்றும் சொன்னாராம்...

தி.மு.க-வை நேரடி போட்டியாகக் கருதும் ரஜினி... கிஷோர் டீமின் 'உஷார்' சர்வே!

தமிழ்நாட்டில் உள்ள மொத்த பூத்களின் எண்ணிக்கை சுமார் 68,000. நமக்கு இதுவரை சேர்த்திருக்கும் பூத் கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தைத் தாண்டவில்லை. இது போதாது. தி.மு.க, அ.தி.மு.க ஆகிய பெரிய கட்சிகளை எதிர்த்து நாம் களமிறங்க வேண்டுமென்றால், நமக்கு எப்படிப்பட்ட அசுரபலம் இருக்க வேண்டும்! ஆனால், தலைவருக்கு இருக்கும் வேகத்தில் பாதிகூட நம்மில் பலரிடம் இல்லையே!' என்று சிலர் பொங்கியிருக்கிறார்கள்.''

''இதைத்தான் ரஜினி, 'எனக்கு ஒரு விஷயத்துல ஏமாற்றம்' என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டாரோ?"

- ஜூனியர் விகடன் கழுகார் தந்த உள்விவகாரத் தகவல்களை முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: ரஜினி... சிவாஜியா, எம்.ஜி.ஆரா? க்ளிக் செய்க... https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-mar-11-2020

கிஷோர் டீமின் ப்ளான்..!

அடுத்த ஆண்டோ... இந்த ஆண்டோ எப்போது வந்தாலும், இரண்டு முறை நழுவவிட்ட ஆட்சியை மீண்டும் பிடிக்கும் வியூகத்தோடு தேர்தல் களத்தில் தி.மு.க இறங்கப்போகிறது. பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம், இதற்காக புதுமையான பல தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டார் தெய்வ வழிபாட்டை முன்னெடுத்து, 'இந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க' எனக் கட்டமைக்கப் படும் பிம்பத்தை உடைக்கும் முயற்சி தொடங்கியுள்ளது.

தி.மு.க-வை நேரடி போட்டியாகக் கருதும் ரஜினி... கிஷோர் டீமின் 'உஷார்' சர்வே!

அடுத்தகட்டமாக, கட்சியின் அமைப்புரீதியான தேர்தலை விரைவாக நடத்தி, மாநிலம், மாவட்டம், ஒன்றியம், நகரம், ஊராட்சி என அனைத்து மட்டங்களிலும் உள்ள நிர்வாகிகளைவைத்து பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்த முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. மார்ச் 29-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே நடைபெறவுள்ள இந்த மாநாடுதான், ஸ்டாலினின் தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தி.மு.க-வில் செயல்படும் ஐ.டி விங்கும் கிஷோர் மேற்பார்வையில் செயல்படும் வகையில் விரைவில் மாற்றப்படும் எனத் தெரிகிறது. 'ரஜினி கட்சி ஆரம்பித்தால், அது தி.மு.க-வுக்கு எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்... ரஜினியால் தி.மு.க வாக்குவங்கி பாதிக்குமா?' உள்ளிட்ட விவரங்களையும் இப்போது சர்வே செய்ய ஆரம்பித்துள்ளது ஐபேக் நிறுவனம். ரஜினியின் அரசியல் என்ட்ரியைவைத்து சில வியூகங்களை வகுக்கவும் இந்த நிறுவனம் தயாராகியிருக்கிறது.

- முழுமையான சிறப்புக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > ஹாட்ரிக் அடிப்பாரா கிஷோர்? ஜெகன்... கெஜ்ரிவால்... ஸ்டாலின்? க்ளிக் செய்க... https://www.vikatan.com/government-and-politics/politics/prashant-kishor-strategy-will-success-to-stalin

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு