`என்னை எந்த மிரட்டலும் பணியவைக்க முடியாது’ , `இந்திய அரசியலமைப்பை மாற்றணும்’ - ரஜினிகாந்த்

கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார்.
தேர்தல் அரசியலுக்கு ரஜினி வருகிறாரா என்பது தொடர்பாக பல்வேறு கட்டுரைகளை விகடன் 80-களிலிருந்து தந்திருக்கிறது. அண்மையில்கூட 1987-களில் வெளியான ஜூனியர் விகடனின் அட்டைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.

ஜூனியர் விகடனுக்கு ரஜினி அளித்த பேட்டி அது.
அதில் எனக்கு, “என்னை எந்த பிரஷரும் மிரட்டலும் பணியவைக்க முடியாது. நான் யார் பின்னாலும் போகவும் மாட்டேன்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பேட்டியை விரிவாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.https://cinema.vikatan.com/tamil-cinema/rajinikanth-has-spoken-about-his-political-entry-in-1987-vikatan-vintage-interview
அரசியலமைப்பை மாற்றணும்!
அதுபோல மற்றொரு பேட்டியில், ``இப்போ அரசியல் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கு. இதுக்கு மருந்து மாத்திரையெல்லாம் பத்தாது. அறுவை சிகிச்சைதான் ஒரே வழி" என கூறியிருக்கிறார்.

அந்தக் பேட்டியை விரிவாகப் படிக்க: https://www.vikatan.com/tamil-cinema/vikatan-pokkisham-rajinikanth-exclusive-interview
``பெரியாரின் கொள்கைகளில் எனக்கு பிடித்தது...’’
`பெரியாரை ரஜினிகாந்த் விமர்சித்துவிட்டார்' என அண்மையில் ஒரு சர்ச்சை உண்டானது அல்லவா... பெரியாரை ரஜினி பாராட்டிய நிகழ்வுகளும், பெரியாருக்காக மன்னிப்புக் கேட்ட சம்பவமும் வரலாற்றில் உண்டு. அந்த ஃப்ளாஷ்பேக் என்ன?

``பெரியார் ஒரு விருந்து மாதிரி. அந்த விருந்தில் பலவிதமான பண்டங்கள் இருக்கும். அவரிடம் கடவுள் எதிர்ப்பு கொள்கை மட்டுமா இருக்கிறது...” என ஒரு நிகழ்வில் ரஜினி பேசியிருக்கிறார்.
விரிவாகப் படிக்க: https://www.vikatan.com/news/politics/rajinikanths-affection-on-periyar-a-flashback
`அரசியலுக்கு வர மாட்டார்’ - ஆரூடம் சொன்ன ஆஸ்திரேலிய ஜோதிடர்
ஆன்மிக ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என ஆஸ்திரேலியா ஜோதிடர் ஒருவர் 2011-ம் ஆண்டு ஆரூடம் சொன்னார்.

அது குறித்து விரிவாகப் படிக்க இன்கே க்ளிக் செய்யுங்கள்
https://www.vikatan.com/oddities/miscellaneous/11536--2
உங்களை மகிழவைப்பதுதான் என்னுடைய லட்சியம்
2011-ம் ஆண்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு ஆடியோ மூலம் செய்தி வெளியிட்டுவிட்டு, மேல் சிகிச்சைக்கு சிங்கப்பூர் சென்றார்.
பின்னர் ரசிகர்களுக்கு தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்ர்.

அந்தக் கடிதத்தை விரிவாகப் படிக்க: