Published:Updated:

``வென்றால் மகிழ்ச்சி... தோற்றால் இரட்டை மகிழ்ச்சி!" - ரஜினியின் `சீக்ரெட்' அறிக்கை

ரஜினி
ரஜினி

ரஜினி தரப்பில் மக்களுக்காக விரிவான அறிக்கை ஒன்று தயாராகியிருக்கிறது. இதை அவருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஏழெட்டு பேரிடம் மட்டுமே ரஜினி பகிர்ந்துகொண்டுள்ளார்.

'கொரோனா பேரிடர் காலத்தில் இதை வெளியிட்டு, பரபரப்பாக்க வேண்டாம்; கொரோனா தாக்கம் குறையட்டும்' என்று அறிக்கையை பொக்கிஷமாகப் பாதுகாக்கிறது ரஜினி தரப்பு. அறிக்கையின் சாரம்சம் இதுதான்...

"எனக்கு இதற்கு மேல் அரசியலுக்கு வந்துதான் சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. போதும் போதும் என்றளவுக்கு பணத்தையும் புகழையும் என் ரசிகர்களும் தமிழ் மக்களும் கொடுத்திருக்கிறார்கள்.

என் குடும்பத்துக்கு பேரக்குழந்தைகள் வரை செட்டில் செய்துவிட்டேன். எனக்கென்று இனி எதுவும் தேவையில்லை. நான் பெற்ற நல்லனவற்றை எல்லாம் மக்களுக்கே திருப்பியளிக்கத் தீர்மானித்துள்ளேன்.

'கட்சி செலவுக்கு என்ன செய்வார் ரஜினி?' என்று பலரும் கேட்கிறார்கள். பெரிய பெரிய தொழிலதிபர்கள் எல்லாம் எனக்கு விமானமும் ஹெலிகாப்டரும் தரத் தயாராக இருக்கிறார்கள். நிதியையும் தருவோம் என்கிறார்கள். எதுவும் எனக்குத் தேவையில்லை. கட்சிக்கும் பிரசாரத்துக்கும் எனது சொந்தக் காசையே செலவு செய்வேன். என் வேட்பாளர்களும் அப்படிதான் செய்வார்கள். இதுதான் என் நிலைப்பாடு.

என்னை நீங்கள் நம்பி ஓட்டு போடுங்கள். இல்லை, என்னைவிட நல்லவர் என்று யாரையேனும் நீங்கள் நினைத்தால் அது உங்கள் முடிவு. நான் வெற்றிபெற்றால் மகிழ்ச்சி. தோற்றால் இரட்டை மகிழ்ச்சி.

ரஜினி
ரஜினி

நான் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டுதான் களமிறங்குகிறேன். நீங்கள் என்னைத் தேர்வு செய்யாதபோது, 'மக்களுக்கு எதுவும் செய்யவில்லை' என்கிற குறை நீங்கிவிடும்" என்றபடி மிகவும் உணர்வுபூர்வமாக நீள்கிறது அந்த அறிக்கை.

வரும் தேர்தலில் மொத்த ஓட்டுகளையும் கவர இந்த அறிக்கை ஒன்றே போதும் என்று உற்சாகத்தில் திளைக்கிறார்கள் ரஜினியின் ஆதரவாளர்கள்!

- "நான் அரசியலுக்கு வருவது உறுதி. போருக்குத் தயாராகுங்கள்!" - சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 2017 டிசம்பர் 31-ம் தேதி இப்படி அறைகூவல் விடுத்தார் ரஜினி.

மூன்றாண்டுகள் நெருங்கப்போகின்றன. அவர் எதிர்பார்த்த போரும் நெருங்கிவிட்டது. போரிடத் தயாரா ரஜினி? ரஜினிக்கு நெருங்கமானவர்களிடம் பேசினோம். "பெயர் வெளியிட வேண்டாம்" என்றபடி பேசினார்கள் அவர்கள். அவற்றை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3knxYfy > திருப்பம் தருமா திருவண்ணாமலை? - ரஜினியின் நவம்பர் புரட்சி! https://bit.ly/3knxYfy

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு