Published:Updated:

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் கருத்தை அறிய விரும்பிய மோடி -காங்கிரஸ் ரியாக்‌ஷன் என்ன?

மல்லிகார்ஜுன் கார்கே

"நான் ராஜ்நாத் சிங்கிடம் பாஜக-வின் முன்மொழிவு என்ன, வேட்பாளர் யார் என்று கேட்டேன்..." - மல்லிகார்ஜுன் கார்கே

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் கருத்தை அறிய விரும்பிய மோடி -காங்கிரஸ் ரியாக்‌ஷன் என்ன?

"நான் ராஜ்நாத் சிங்கிடம் பாஜக-வின் முன்மொழிவு என்ன, வேட்பாளர் யார் என்று கேட்டேன்..." - மல்லிகார்ஜுன் கார்கே

Published:Updated:
மல்லிகார்ஜுன் கார்கே

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தெலங்கான ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு (ஜூன் 15-ம் தேதி) இன்று டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸுடன் இருக்கும் கருத்து முரண்பாடுகளையும் கடந்து காங்கிரஸ் அதில் கலந்துகொண்டுள்ளது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

ஆனால், இந்த கூட்டத்தில் காங்கிரஸின் பங்களிப்பை விரும்பாத கட்சிகள் கூட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்தன. அதில், தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) மிகவும் முக்கியமானது. மேலும், நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSRCP, சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி கட்சி, அசாதுதீன் ஒவைசியின் AIMIM ஆகிய கட்சிகள் விலகியுள்ளன. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த பா.ஜ.க சார்பில் ஜே.பி நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை பா.ஜ.க நியமித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

அதைத் தொடர்ந்து, ராஜ்நாத் சிங்-கிடம் பேசியதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, "குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளின் கருத்துகளைப் பிரதமர் மோடி அறிய விரும்புவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பிரதமர் எங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறார். நான் ராஜ்நாத் சிங்கிடம் பா.ஜ.க-வின் முன்மொழிவு என்ன, வேட்பாளர் யார் என்று கேட்டேன். ஆனால் அவர் பதில் கூறவில்லை. ஒருமித்த கருத்துடன், சர்ச்சையற்ற நபரை நாங்கள் பரிந்துரைத்தால் பா.ஜ.க ஏற்றுக்கொள்ளுமா?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism