Published:Updated:

`தமிழக பா.ஜ.க-வுக்குக் காமாலைக் கண்கள்!' - பெரியார் குறித்த பதிவால் கொதித்த ராமதாஸ்

ராமதாஸ்
ராமதாஸ்

பெரியாரின் நினைவு தினமான இன்று தமிழக பா.ஜ.க தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டு பின்னர் நீக்கியுள்ளது. இதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் நினைவு தினமான இன்று, தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தமிழகத்தில் உள்ள அவரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

திருவருட்பாவின் ஆறாம் திருமுறை... பெரியார் ஏன் வெளியிட்டார்?!

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெரியார் தொடர்பாக மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டிருந்தது. இதற்குப் பல தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழவே அந்தப் பதிவை தற்போது நீக்கிவிட்டது.

இதற்கு தி.மு.க, தொடங்கி பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. பெரியார் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்து பா.ஜ.க-வினர் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது இது முதல்முறையல்ல.

ராமதாஸ்
ராமதாஸ்

இந்த நிலையில், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியான பா.ம.க-வின் நிறுவனர் ராமதாஸும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ``தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியும் அதன் ஐ.டி பிரிவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்து அருவருக்கத்தக்கது. இது அவர்களின் காமாலைக் கண்களைக் காட்டுகிறது. இந்தச் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது'' என விமர்சித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு