Election bannerElection banner
Published:Updated:

தேனி: சசிகலா போஸ்டர்மீது ரவீந்திரநாத் போஸ்டர்! - நள்ளிரவில் அ.தி.மு.க - அ.ம.மு.க வாக்குவாதம்

போஸ்டர் ஒட்டும் அ.தி.மு.க-வினர்
போஸ்டர் ஒட்டும் அ.தி.மு.க-வினர்

ஏற்கெனவே ஒட்டப்பட்டிருந்த சசிகலா போஸ்டர்கள்மீது, ரவீந்திரநாத் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டியதால், நள்ளிரவில் அ.ம.மு.க., அ.தி.மு.க-வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டுவதும், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. ஆனால், தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் போஸ்டர் ஒட்டுவதில் அ.தி.மு.க - அ.ம.மு.க இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டு, காவல்துறையின் தலையீட்டால் மோதல் தவிர்க்கப்பட்டிருக்கும் சம்பவம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

போஸ்டர் ஒட்டும் அ.தி.மு.க-வினர்
போஸ்டர் ஒட்டும் அ.தி.மு.க-வினர்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்னர், ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞரணித் தலைவர் பண்ணை சின்னராஜா, சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டினார். இதனால் சின்னராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதையடுத்து, தேனி நகர்ப் பகுதியில், பெரியகுளம் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை அவைத்தலைவர் வைகை சாந்தகுமார், தொடர்ந்து ஆண்டிபட்டியில் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் சிலர் என அடுத்தடுத்து சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டினர். சின்னராஜாபோலவே, போஸ்டர் ஒட்டிய அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றே கூறப்படுகிறது.

`குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்க; அப்புறம் சவால் விடலாம்!’ - ஓ.பி.எஸ் மகனுக்கு தங்கம் பதில்
போஸ்டர் ஒட்டும் அ.தி.மு.க’வினர்
போஸ்டர் ஒட்டும் அ.தி.மு.க’வினர்

இன்று, தேனி எம்.பி ரவீந்திரநாத் பிறந்தநாள் என்பதால், நேற்று நள்ளிரவு, ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞர் பாசறை நிர்வாகிகள் சார்பில், ரவீந்திரநாத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் போஸ்டர்களை ஆண்டிபட்டி நகர்ப் பகுதியில் ஒட்டினர். இந்தநிலையில், ஆண்டிபட்டி நகரின் முக்கியப் பகுதியில் ஏற்கெனவே சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால், சசிகலா போஸ்டர்களுக்கு மேலே ரவீந்திரநாத் போஸ்டர்களை ஒட்டினர்.

ரவீந்திரநாத்  பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்
ரவீந்திரநாத் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்

இதை அறிந்த அ.ம.மு.க-வினர், போஸ்டர்கள் ஒட்டிக்கொண்டிருந்த அ.தி.மு.க-வினரைத் தடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். ஆளும்கட்சிக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய அ.ம.மு.க-வினர், இறுதியாக அங்கிருந்து புறப்பட்டனர். சசிகலா போஸ்டர்கள் மீதே ரவீந்திரநாத் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்தச் சம்பவத்தால் நள்ளிரவில் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி : `ராஜமாதாவே வருக...’ - சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர்கள்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு