Published:Updated:

``முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னையில் முதல்வர் மெளன விரதத்தைக் கலைப்பாரா?" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின்

``58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முதல்வர் செவி சாய்க்கவில்லையென்றால் எடப்பாடியார் கவனத்துக்குக் கொண்டு சென்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.” - ஆர்.பி.உதயகுமார்

``முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னையில் முதல்வர் மெளன விரதத்தைக் கலைப்பாரா?" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

``58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முதல்வர் செவி சாய்க்கவில்லையென்றால் எடப்பாடியார் கவனத்துக்குக் கொண்டு சென்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.” - ஆர்.பி.உதயகுமார்

Published:Updated:
முதலமைச்சர் ஸ்டாலின்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்திருந்த நிலையில், உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்கவும், ரூல் கர்வ் மூலம் முல்லைப்பெரியாறு அணையில் 142 அடியாக நீரைத் தேக்கவும் மதுரை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்.

கலெக்டரிடம் மனு அளித்த ஆர்.பி.உதயகுமார்
கலெக்டரிடம் மனு அளித்த ஆர்.பி.உதயகுமார்

பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "வைகை அணையில் தற்போது 70.44 அடி தண்ணீர் இருக்கிறது. 67 அடி வந்துவிட்டாலே 58-ம் கால்வாய்க்குத் தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், விவசாயிகள் நலனைப் புறக்கணிக்கிற, விவசாயிகள் வேதனையை கவனத்தில்கொள்ளாத அரசாக தி.மு.க அரசு உள்ளது. மதுரைக்கு வரும் முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் பிரச்னையை கவனத்தில்கொள்ளவார் என்ற நம்பிக்கையோடு இதைத் தெரிவிக்கிறோம்.

110 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 2,500 ஏக்கர் விவசாய நிலம் பலன்பெறும் வகையிலும் இந்த 58 கால்வாய் மூலம் வருகிற தண்ணீர் இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

58-ம் கால்வாயில் 11 நாள்களுக்கு 316 கனஅடி நீர் திறந்தாலே அப்பகுதியிலுள்ள 35 கண்மாய்கள் நிறைந்துவிடும். கடந்த எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் 65 லட்சத்தில் மராமத்துப் பணி செய்யப்பட்டு, மூன்று முறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தவே வந்தோம். மாவட்ட ஆட்சியர் கனிவோடு கோரிக்கையைப் பெற்று நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார். அதனால் போராட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளிவைத்து மனுவைத் தந்திருக்கிறோம்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முதல்வர் செவி சாய்க்கவில்லையென்றால் எடப்பாடியார் கவனத்துக்குக் கொண்டு சென்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக தேக்கிக்கொள்ளலாம், பேபி அணையைப் பழுது பார்த்த பிறகு 152 அடியாகத் தேக்கிக்கொள்ளலாம் என்ற வரலாற்றுத் தீர்ப்பை அம்மா ஜெயலலிதா பெற்றுத் தந்ததற்காக ஐந்து மாவட்ட விவசாயிகள் சார்பாக மாபெரும் பாராட்டுவிழா நடைபெற்றது. விவசாயிகள் விழா எடுத்து மக்களால் அழைக்கப்பட்டு வந்த அம்மா திடலை தற்போது கலைஞர் அரங்கமாக மாற்றிவிட்டார்கள்.

ரூல்கர்வ்  திட்டத்தின் மூலம் செப்டம்பர் 11 முதல் 20 வரை 142 அடியாகத் தேக்க வேண்டும், தற்போது முல்லைப்பெரியாறில் 137.95 அடியாக உள்ளது, ஆகவே 142  அடியாகத் தேக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும், பருவமழை உள்ள போதும் ரூல்கர்வ் திட்டத்தின் மூலம் தண்ணீரை தேக்க முடியவில்லை.

முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னையில் முதல்வர் விவசாயிகளுக்கு உரிய விளக்கம் அளிப்பாரா... மெளன விரதத்தைக் கலைப்பார... உரிய விளக்கம் கொடுக்க முன்வருவாரா... மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிடுவாரா..?

மு.க.ஸ்டாலின் | MK Stalin
மு.க.ஸ்டாலின் | MK Stalin

விழா நாயகனாக முதலமைச்சர் இருக்கிறார். முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா, ஐம்பெரும் காப்பிய விழா எடுக்கும் முதல்வர், அரசு இராசாசி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மாத்திரைகள் சரியாகக் கிடைப்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் தட்டுப்பாடு நிலவுவது முதல்வருக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. மதுரையில் கலைஞர் நூலகத்தைப் பத்துமுறைக்கு மேல் ஆய்வுசெய்த முதல்வர், நோய் தீர்க்கும் மருத்துவத்துக்கான மாத்திரைகள் விஷயத்தில் ஆய்வு செய்வாரா?

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் 223 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, 21 கோடியில் நான்குவழிச் சாலையுடன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. வாக்கு சேகரிக்க உதயநிதி காட்டிய செங்கலை முதல்வர் எடுத்து வந்தாவது எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவாரா?

கலெக்டரிடம் மனு அளித்த ஆர்.பி.உதயகுமார்
கலெக்டரிடம் மனு அளித்த ஆர்.பி.உதயகுமார்

தி.மு.க முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமியின் கணவர் ஜெகதீசன் ட்விட்டர் பதிவில், இந்த அரசில் ஊழல் இல்லாத துறையைக் காட்டினால் ஒரு கோடி பரிசு எனப் பதிவிட்டு இருப்பதே இந்த அரசின் செயல்பாடுக்குச் சாட்சியாக உள்ளது. அரசு விழாவைக் கட்சி விழாவைப்போல நடத்தி அரசு நிர்வாகத்தை அதற்குப் பயன்படுத்திவருகின்றனர், மாநாடு, முப்பெரும் விழா என எத்தனை விழா நடத்தினாலும் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பாரா முதல்வர்?" என்று கூறினார்.