Published:Updated:

ஓபிஎஸ் ஊரில் கெத்து காட்டத் தயாராகும் ஆர்.பி.உதயகுமார்; மதுரையிலிருந்தும் ஆட்களை இறக்க ஏற்பாடு!

ஆர்.பி.உதயகுமார்

தேனியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதனால் அதிக அளவில் கூட்டம் சேர்க்க முனைப்பு காட்டி வருகிறார் ஆர்.பி.உதயகுமார்.

ஓபிஎஸ் ஊரில் கெத்து காட்டத் தயாராகும் ஆர்.பி.உதயகுமார்; மதுரையிலிருந்தும் ஆட்களை இறக்க ஏற்பாடு!

தேனியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதனால் அதிக அளவில் கூட்டம் சேர்க்க முனைப்பு காட்டி வருகிறார் ஆர்.பி.உதயகுமார்.

Published:Updated:
ஆர்.பி.உதயகுமார்

பெரும் போராட்டத்துக்குப் பிறகு அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-ஸிடமிருந்த பொருளாளர் பதவி முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும், எதிர்கட்சித் தலைவர் பொறுப்பு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆர்.பி.உதயகுமார் - ஓ.பி.எஸ்
ஆர்.பி.உதயகுமார் - ஓ.பி.எஸ்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அ.தி.மு.க திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் இல்லாத தேனி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட 5 பகுதிகள் தவிர பிற பகுதிகளில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எடப்பாடி பழனிசாமி கட்சித் தலைமைக்கு வந்த பிறகு முதலாவதாக நடக்கும் ஆர்ப்பாட்டம் என்பதால் அனைத்துப் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் பிரமாண்டமாக நடந்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறாராம். குறிப்பாக புதிதாக பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கும் முக்கிய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்துக்கு பொறுப்பேற்று சிறப்பாக நடத்திக் காட்ட வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சூழலில், ஓபிஎஸ்-ஸின் சொந்த ஊரான தேனியில் மாவட்டச் செயலாளர் சையதுகானும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் தேனியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஓபிஎஸ்-சையதுகான்
ஓபிஎஸ்-சையதுகான்

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் 3 முறை தமிழ்நாடு முதல்வராகவும், ஒரு முறை துணை முதல்வராகவும் இருந்தவர். மேலும் வருவாய், நிதி, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். அ.தி.மு.க மூத்த தலைவரான ஓபிஎஸ் உடன் ஆரம்பகாலம் முதல் ஆர்.பி.உதயகுமார் நெருக்கமாக இருந்துவந்தார். அடிக்கடி பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கும், கைலாசப்பட்டியில் உள்ள பண்ணைவீட்டிற்கும் சென்று சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்த அவர் தன்னை தீவிர ஓபிஎஸ் ஆதரவாளர் எனக் காட்டிக்கொண்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சகிகலாவை ஆதரித்து... பிறகு ஓபிஎஸ் பக்கம் வந்து கடைசியாக தற்போது இபிஎஸ்-ன் தென்தமிழ்நாட்டு தளபதியாக உருவெடுத்திருக்கிறார். சிலமாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ் பண்ணைவீட்டில் வைத்து சசிகலா, தினகரன் இணைப்பு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அங்கு முதல் ஆளாகவந்து பேச்சுவார்த்தை நடத்தியவர் ஆர்.பி.உதயகுமார். அப்போது இபிஎஸ் அனுப்பிய தூதுவராகத்தான் ஆர்.பி வந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். கட்சியை அழிப்பதே ஆர்.பி.உதயகுமார்தான் என ஓபிஎஸ் சகோதரர் ஒ.ராஜா செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ஆர்.பி.உதயகுமார் - எடப்பாடி பழனிசாமி
ஆர்.பி.உதயகுமார் - எடப்பாடி பழனிசாமி

தற்போது ஓபிஎஸ் வகித்துவந்த எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றிருக்கும் ஆர்.பி.உதயகுமார், ஓபிஎஸ்-ன் சொந்த மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறார். பிறபகுதிகளைவிட தேனி மாவட்டத்தில்தான் பிரமாண்டத்தைக் காட்ட வேண்டும் என எடப்பாடி கூறியிருக்கிறாராம். இதனால் மதுரை புறநகரைவிட தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான வேலைகளில் ஆர்.பி மும்முரம் காட்டிவருகிறார்.

இது குறித்து தேனி மாவட்ட அ.தி.மு.க-வினரிடம் விசாரித்தோம். ``தேனி மாவட்டச் செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்.பி-யும், அமைப்புச் செயலாளருமான ஜக்கையன், தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், முருக்கோடை ராமர் உள்ளிட்டோர் போட்டியில் உள்ளனர். இதில் ஏற்கெனவே ஜக்கையன் அமைப்புச் செயலாளராக இருப்பதால் மற்ற இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுவதற்கு முன்பாகவே தேனியில் ஓபிஎஸ்-க்கு எதிராக குரல் எழுப்பியவர் என்ற பெருமையைக் கொண்ட கிருஷ்ணகுமார் மாவட்டச் செயலாளர் போட்டியில் முன்னிலை வகிக்கிறார்.

தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார்
தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார்

சனிக்கிழமை காலை தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் ஆர்.பி.உதயகுமாரைச் சந்திக்க திருமங்கலம் சென்றோம். அங்கு அவரின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் 15 ஆயிரம் பேரை திரட்ட வேண்டும் என ஆர்.பி கூறினார். ஜக்கையன் தொண்டர்களை அழைத்துவர வாகன வாடகை 6 லட்ச ரூபாய் செலவைத் தான் ஏற்பதாகக் கூறினார். கூடலூரிலிருந்து 50 வேன்களில் வரத் தயார் என கூடலூர் நகரச் செயலாளர் உறுதியளித்தார். தேனி நகரில் கிருஷ்ணகுமார் 2 ஆயிரம் பேரும், மைக் செட், பேனர் உள்ளிட்ட செலவு 7 லட்ச ரூபாயை ஏற்கவுள்ளார். பெரியகுளத்தில் அன்னப்பிரகாஸ் 2 ஆயிரம் பேரைத் திரட்டவுள்ளார். ஆண்டிப்பட்டியில் லோகிராஜன் 5 ஆயிரம் பேரை அழைத்துவர உள்ளதாகக் கூறியிருக்கிறார். தேனி ஒன்றியத்திலிருந்து நாராயணசாமி 500 பேருக்கு வாகனச் செலவு, பி.சி.பட்டி பேரூராட்சி தலைவர் 500 பேருக்கான வாகனச் செலவு, எல்லப்பட்டி முருகன் 500 பேருக்கு வாகனச் செலவை ஏற்றுக்கொண்டுவிட்டனர். இது மட்டுமல்லாது மதுரையிலிருந்து 200 பேருந்துகளில் தொண்டர்களுடன் வருவதற்கு ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஜக்கையன் - எடப்பாடி பழனிசாமி
ஜக்கையன் - எடப்பாடி பழனிசாமி

ஓபிஎஸ் வீட்டிலிருந்து இபிஎஸ் ஆதரவாளர்களிடம் பேசி கன்வின்ஸ் செய்கிறார்கள். இதனால் வீரபாண்டி பேரூர் கழக செயலாளர் உள்ளிட்ட சிலர் ஆர்.பி-யை சந்திக்க வந்துவிட்டு திரும்பச் செல்லும் நிலை இருக்கிறது. தேனி நகரில்கூட வார்டு வாரியாக சென்று கூட்டத்திற்கு ஆள்களை வரவிட செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். குறிப்பாக ஓபிஎஸ் சொந்த தொகுதியான போடியில்தான் கூட்டத்துக்கு ஆள்சேர விடாமல் செய்ய ஏற்பாடு நடக்கிறது. இவ்வாறான செயல்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவது இல்லை. ஆர்ப்பாட்டம் மாஸாக நடத்தப்படும்" என்கின்றனர் இபிஎஸ் ஆதரவாளர்கள்.