Published:Updated:

``ஜாக்டோ ஜியோ நம்பிக்கை மாநாடு, நம்பிக்கையைத் தொலைத்த மாநாடு ஆகிவிட்டது"- ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

ஆர்.பி.உதயகுமார்

காவல்துறையில் ஆளுங்கட்சியினர் தலையீடு அதிகரித்திருக்கிறது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

``ஜாக்டோ ஜியோ நம்பிக்கை மாநாடு, நம்பிக்கையைத் தொலைத்த மாநாடு ஆகிவிட்டது"- ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

காவல்துறையில் ஆளுங்கட்சியினர் தலையீடு அதிகரித்திருக்கிறது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Published:Updated:
ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் தனியார் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``தி.மு.க ஆட்சியில் தினம் தினம் விழா நடத்தி, விழா நாயகனாக முதல்வர் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருக்கிறது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அதற்கு மட்டுமே அரசு அதிகமாக கவனம் செலுத்துகிறது. அதனால், மக்களுக்கு சேவை செய்வதில் குறைபாடு உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்டு மக்களுக்காக என்ன திட்டங்கள் கொண்டு வந்தார் என்று கேட்டால் பூஜ்ஜியம்தான் பதிலாகக் கிடைக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாங்கள் கொண்டுவந்த பல திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து அவர்கள் கொண்டுவந்ததாக நடைமுறைப்படுத்திவருகிறார்கள். மக்களின் குறை நிறைகளை கனிவோடு கேட்கக்கூடியவர்தான் சிறந்த தலைவராக இருக்க முடியும். நான் சொல்வதுதான் சட்டம் என நடந்துகொள்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழகத்தின் சிறந்த முதலமைச்சர் என்று அவர் கூறுகிறார். ஆனால் இன்றைக்கு தலைநகர் கொலைநகராக மாறியுள்ளது.

ஆர்.பி. உதயகுமார்
ஆர்.பி. உதயகுமார்

தமிழகத்தில் கடந்த மாதம் 31 நாள்களில் 131 கொலைகள் நடந்துள்ளன. செப்டம்பர் மாதத்தில் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 23 கொலைகள் நடந்துள்ளது என குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.

இதைத்தான் எடப்பாடியார் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடத்ததாகக் குற்றம்சாட்டினார். ஆனால் அதற்கு காவல்துறை சார்பில் அளித்த பதில் அறிக்கையில், கொலைகள் நடப்பதை மறைக்கவில்லை, ஆனால் எண்ணிக்கை வேறுபாடு உள்ளது என்று பதிலளித்தனர்.

போலீஸ் மீது துளி அளவும் அச்சம் இல்லாமல் ரெளடிகள், குண்டர்கள் உள்ளனர். ஆனால் பிரச்னைக்குரிய விஷயங்களைச் சரிசெய்யாமல் காவல்துறை தோல்வியடைந்திருக்கிறது.

அம்மா ஆட்சிக்காலத்திலும், எடப்பாடியார் ஆட்சிக்காலத்திலும் ஸ்காட்லாந்து போலீஸுக்கு நிகராக தமிழக காவல்துறை இருந்தது. ஆனால் இன்று தலைகீழாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் கஞ்சா விற்பனை தலைவிரித்து ஆடுகிறது. பள்ளி மாணவர்களுக்கே போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது,

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

ஆன்லைன் ரம்மி மூலம் தற்கொலை செய்து கொள்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பட்டப்பகலில் பெண்கள் சாலையில் நடமாட முடியவில்லை. குற்றங்களைத் தடுப்பதில் காவல்துறை தோல்வியடைந்துவிட்டதா என்ற கவலை மக்களிடம் எழுந்துள்ளது.

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநாடு படுதோல்வி அடைந்திருப்பதாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். அரசுப் பணியாளர் நடத்தை விதிப்படி ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவது மிகப்பெரிய குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.

முதல்வரை மேடையில் வைத்துக்கொண்டு ஆளுங்கட்சியைப் புகழ்ந்து பேசியும் அதனால் எதையும் சாதிக்க முடியாமல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனக்குமுறலில் உள்ளனர்.  மாநாட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் வெளியாகாததால் முதல்வர் பேசும்போதே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தைவிட்டு அரசு ஊழியர்கள் வெளியேறினர்.

ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு, நம்பிக்கையைத் தொலைத்த மாநாடாக அமைந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு பட்டை நாமத்தை போட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாகக் கூறிய முதல்வர், மாநாட்டில் அது குறித்துப் பேசவில்லை. பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதாகக் கூறிவிட்டு தற்போது ஏமாற்றிவிட்டார். `எனது ராஜ்யத்தில் உங்களுக்கு பூஜ்யம் மட்டுமே பரிசு’ என ஜாக்டோ ஜியோ மாநாட்டில் சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் முதல்வர்" என்று தெரிவித்தார்.