Published:Updated:

``ஏழு முறை நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட ஓ.பி.எஸ் எப்படி தலைவராக உருவாக முடியும்?!" - ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

``சட்டமன்றத்தில் அம்மாவின் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்கும் நிலை வந்தபோது, தி.மு.க-வுடன் சேர்ந்துகொண்டு எதிராக வாக்களித்தார். இது சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது." - ஆர்.பி.உதயகுமார்

``ஏழு முறை நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட ஓ.பி.எஸ் எப்படி தலைவராக உருவாக முடியும்?!" - ஆர்.பி.உதயகுமார்

``சட்டமன்றத்தில் அம்மாவின் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்கும் நிலை வந்தபோது, தி.மு.க-வுடன் சேர்ந்துகொண்டு எதிராக வாக்களித்தார். இது சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது." - ஆர்.பி.உதயகுமார்

Published:Updated:
ஆர்.பி.உதயகுமார்

``நீதிமன்றத்திற்கு நீங்கள் எத்தனை முறை செல்வீர்கள்?'' என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமியால் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒ.பி.எஸ் - எடப்பாடி
ஒ.பி.எஸ் - எடப்பாடி

``அம்மாவின் அரசை நிலை நிறுத்துவதற்கு இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணி ஆற்ற வேண்டுமென்ற எடப்பாடியாரின் அத்தனை முயற்சிகளுக்கும் உடன்படாமல் ஒத்துழையாமை இயக்கத்தை கழகத்தில் நடத்தியவர் யார் என்று தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கழக வளர்ச்சிக்காவும், நன்மைக்காகவும் எடுத்த முயற்சிகளை செயல்படுத்த விடாமல் முட்டுக்கட்டை போட்டவர் ஓ.பி.எஸ்-தான் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் புரட்சித் தலைவி 142 அடியாக உயர்த்த சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற வழியில்... காவிரி நீர் பிரச்னையில்‌‌‌‌‌ எடப்பாடியார் தலைமையிலான அரசு வெற்றி கண்டது. கச்சத்தீவு மீட்க போராடினார். சத்தியமாகச் சொல்லுங்கள், பொதுக்குழுவை தடை செய்ய நீதிமன்றம் சென்றது யார்? பிறகு உச்ச நீதிமன்றம் சென்று தடையை நீக்கி பொதுக்குழு நடத்தலாம் என்று சொன்ன பிறகும் நீதிமன்றம் சென்று இயக்கத்தை சீர்குலைக்கிற நடவடிக்கை எடுத்தது யார்? புரட்சித் தலைவி பல்வேறு தடைகளைத் தாண்டி இந்த இயக்கத்தை நம்மிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். இயக்கத்தை நம்பி உழைத்துக் கொண்டிருக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்காலம் என்ன ஆவது?

ஆர்.பி. உதயகுமார்
ஆர்.பி. உதயகுமார்

நீதிமன்றத்திற்கு எத்தனை முறை செல்வீர்கள் உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் எத்தனை முறை செல்வீர்கள்? கிடைத்த தீர்ப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்... நீதியரசர்கள் என்ன தீர்ப்பு வழங்கினாலும் நாங்கள் யாரும் விமர்சனம் செய்யவில்லை. ஆனால், உணர்வுப்பூர்வமாக, ஒரு தலைமையை ஆதரிக்கும்போது அதை நீங்கள் தடை ஆணை மூலம் தடுப்பு சுவர் எழுப்பி விடலாம் என நினைப்பது பகல் கனவாகவேதான் முடியும். காட்டாற்று வெள்ளம்போல் தன்னெழுச்சியாக தொண்டர்கள் எழுந்து வரும்போது, நீதிமன்ற தடை ஆணை மூலம் தடுத்துவிடலாம் எனக் கனவு காணும் உங்கள் அரசியல் அனுபவத்தின்மீது சந்தேகம் எழுகிறது.

அ.தி.மு.க வலுவோடும், பொலிவோடும் அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் இருக்க எடப்பாடியாரின் தலைமைதான் காரணம் என்று ஒன்றரைக் கோடி தொண்டர்களும் மனதார ஏற்றுக்கொள்கின்றனர். உங்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து முதலமைச்சராக, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தீர்கள்.

உங்களுக்கு பின்னால்தான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், முதலமைச்சர் என பொறுப்பேற்றார் எடப்படியார். எத்தனை திட்டங்கள் கொண்டு வந்தார். 38 வருவாய் மாவட்டங்களிலும் தொலைநோக்கு திட்டங்கள், ஓராண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரைக்கு எய்ம்ஸ் கொண்டு வந்தார். குடிமராமத்து திட்டங்களை கொண்டு வந்தார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

இது ஒரு ஜனநாயக இயக்கம். தொண்டர்கள் எடப்பாடியாரை முன்மொழிந்திருக்கிறார்கள். எந்த இடத்திலும் அவர் பதவி வேண்டுமென்று கேட்கவில்லை. அனைவரையும் அரவணைத்து செல்லும் செயல்பாடு, சாதி மத வேறுபாடின்றி சமதர்ம இயக்கமாக அ.தி.மு.க-வைக் காப்பாற்ற அத்தனை நடவடிக்கையும் எடுத்தார். தன்னைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுதான் உண்மை.

ஆனால், ஓ.பி.எஸ்-ஸிடம் எத்தனை மாற்றங்கள், அம்மாவின் மரணத்திற்கு பின்பு முதலமைச்சராக பொறுப்பேற்றார், அதன் பிறகு முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு 'முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை, ஒரு குடும்பத்தின் பிடியில் இந்த இயக்கம் சென்று விடக்கூடாது, அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது' என்று தர்ம யுத்தத்தை தொடங்கினார். தனக்கு பதவி இல்லை என்ற நிலை வந்தால் தொண்டர்களையும், இயக்கத்தையும் பலி கொடுக்கத் தயாராகி விடுவார்

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

சட்டமன்றத்தில் அம்மாவின் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்கும் நிலை வந்தபோது, தி.மு.க-வுடன் சேர்ந்துகொண்டு எதிராக வாக்களித்தார். இது சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் இந்த இயக்கத்திற்கு எந்தவித பங்களிப்பையும் செய்யாதது போல சத்தியவான் போல ஊடகங்களில் பேசுகிறார்.

நீங்கள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்விதான், எடப்பாடியார் தலைமையில் இணைந்தபின் உங்களை நம்பியவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு, தேவையான பதவியை பெற்றபிறகு அரசியல் பயணத்தை தொடங்கினீர்கள். அப்போது இயக்கத்தை காப்பாற்ற தோன்றவில்லையா? பதவிக்கு ஆபத்து என்றவுடன் உங்களுக்கு ஞானோதயம் வந்துவிடுகிறது.

இப்போது எடுத்திருப்பது உறுதியான நிலைப்பாடா? இதுவரை ஏழுமுறை நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறீர்கள். எடப்பாடியார் அப்படி அல்ல, அம்மா இருக்கும்போதும் சரி... இல்லாத போதும் சரி, அம்மாவின் தலைமையில்தான் பணியாற்றி உள்ளார். கட்சியின் முன்னேற்றத்துக்கு எடுக்கப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் உங்களுக்கு என்ன மன வருத்தம்?

எடப்பாடியார் உங்களிடம் உடன்பட்டு பேச்சுவார்த்தை நடத்த பலமுறை முயற்சி எடுத்தார். ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இன்றைக்கு நீங்கள் அழைப்பு விடுப்பது யாரை ஏமாற்றுவதற்காக? நீங்கள் மட்டும் வாழ்ந்தால் போதுமா ஓ.பி.எஸ் அவர்களே? எல்லோரையும் வாழவைக்க எடப்பாடியார் எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவதில் உங்களுக்கு என்ன கஷ்டம்? எதற்காக நீதிமன்றக் படிக்கட்டில் ஏறி தொண்டர்களை சோர்வடையச் செய்கிறீர்கள்?

ஆர்.பி. உதயகுமார் - அ.தி.மு.க
ஆர்.பி. உதயகுமார் - அ.தி.மு.க

அ.தி.மு.க-வின் எதிர்காலம்தான் ஒவ்வொரு தொண்டரின் எதிர்காலமாகும். மூன்று முறை முதலமைச்சராகவும், கட்சியில் மிகப்பெரிய பொறுப்பிலும் இருந்தவர். தொலைபேசியில் ஒவ்வொருவரையும் நீங்கள் அழைத்தபோது எத்தனை பேர் நிராகரித்தார்கள், உங்கள் புதல்வர்களும் எத்தனை பேருக்கு இன்னும் அழைப்பு விடுத்து வருகிறார்கள். அதை எத்தனை பேர் புறக்கணித்திருக்கிறார்கள்? ஆள் பிடிக்கும் வேலையை இந்த நிமிடம் வரை எடப்பாடியார் செய்யவில்லை.

மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடியாரை முன்மொழிந்திருக்கின்றனர். சட்டப்போராட்டம் என்பது தொடர்ந்து நடக்கும், தற்போது இரண்டு நீதிமன்றங்களில் மூறையிட்டிருக்கிறோம். அடுத்து உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளது.

உடன்பட மாட்டேன், உழைக்க மாட்டேன், வேடிக்கை பார்ப்பேன் விமர்சனம் செய்வேன் என்று ஒத்துழையாமை தலைவராக உள்ள உங்கள்மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே தவிர கட்சியில் எந்த பிளவும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.