Published:Updated:

``அதிமுக-வுக்கு வரலாற்றுச் சிறப்பை எடப்பாடி பெற்றுத் தந்திருக்கிறார்!" - ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

ஆலோசனைக் கூட்டம்
News
ஆலோசனைக் கூட்டம்

``ஜி20 மாநாட்டுக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று, கழகத்துக்கும், ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கும் வரலாற்றுச் சிறப்பை எடப்பாடியார் பெற்றுத் தந்திருக்கிறார்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

``அதிமுக-வுக்கு வரலாற்றுச் சிறப்பை எடப்பாடி பெற்றுத் தந்திருக்கிறார்!" - ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

``ஜி20 மாநாட்டுக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று, கழகத்துக்கும், ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கும் வரலாற்றுச் சிறப்பை எடப்பாடியார் பெற்றுத் தந்திருக்கிறார்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

Published:Updated:
ஆலோசனைக் கூட்டம்
News
ஆலோசனைக் கூட்டம்

தமிழக அரசை எதிர்த்து அ.தி.மு.க நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டத்தைச் சிறப்பாக நடத்துவது சம்பந்தமாக மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் நடந்தது.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

அந்தக் கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், "அடுத்த ஆண்டுக்கான ஜி20 மாநாட்டை நடத்தும் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய கெளரவம்.

இந்த மாநாட்டுக்கான அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், பாரத பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அந்த அடிப்படையில் நம் கழகத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் அவர் பங்கேற்று நமது இயக்கத்துக்கு மாபெரும் வரலாற்றுப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

இதன் மூலம் இந்த இயக்கத்துக்கும், கழகத்தின் ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கும், மிகப்பெரிய கௌரவத்தை எடப்பாடியார் பெற்றுத் தந்திருக்கிறார்.

எடப்பாடியாரின் வெற்றி மேலும் தொடர புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் அருளாசியும், தொண்டர்கள் ஆதரவும், மக்கள் பேராதரவும் அவரின் கரத்தை மேலும் பலப்படுத்தும். கழகத்துக்கு மாபெரும் வலிமையை உருவாக்கித் தந்திருப்பவருக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி ஆணைக்கிணங்க, தி.மு.க அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு,  விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும், இதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் வரும் 9-ம் தேதி மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திலுள்ள அனைத்துப் பேரூராட்சிப் பகுதிகளிலும், 13-ம் தேதி அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும், 14-ம் தேதி அனைத்து ஒன்றியப் பகுதிகளும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்களை பெரும் திரளாகப் பங்கேற்கச் செய்திட வேண்டும்.

ஜி-20 - இந்தியா - கூட்டம்
ஜி-20 - இந்தியா - கூட்டம்

கழக அம்மா பேரவை சார்பில் பிப்ரவரி 23-ம் தேதி 51 ஏழை, எளிய மணமக்களுக்கு நடத்தப்படும் திருமணத்தை எடப்பாடியார் நடத்திவைக்கிறார். அதற்கான முகூர்த்தக்கால் அமைக்கும் பணி வருகிற 11-ம் தேதி டி.குன்னத்தூர் அம்மா கோயிலில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகளும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள்.

தற்போது வங்கக்கடலில், புதிதாகக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி 7- ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆகவே, தமிழக அரசு இதை கவனத்தில்கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்" என்று பேசினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காகச் சாப்பாடு சமைத்த இடத்தில் ஆர்.பி.உதயகுமார் குடும்பத்தினருடன் சேர்ந்து சமையல் வேலை செய்து கட்சியினரை ஆச்சர்யப்படுத்தினார்.