Published:Updated:

போட்டோ தாக்கு

நான் இருப்பேன்... அதுவரைக்கும் கட்சி இருக்குமான்னு தெரியலையே!

பிரீமியம் ஸ்டோரி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@RajaAnvar

பிரேமலதா: கடவுளே... பிற்காலத்துல `தலைவி’ மாதிரி என்னைப் பற்றிய படமும் வரணும்!

@LAKSHMANAN_KL

“அந்த ‘சாமி’தான் எங்களை நம்பவெச்சு ஏமாத்திட்டாரு... நீயும் என்னை ஏமாத்திடாதே சாமி..!”

@manickamk

சுதீஷ்: என்னக்கா, இத்தனை சீட்டு எழுதி கட்டியிருக்கோம்?

பிரேமலதா: ஒவ்வொரு கட்சியுடனும் நாம பேசின கூட்டணிப் பேச்சுவார்த்தையோட குறிப்புகள் தம்பி இதெல்லாம்!

@balasubramni1

பிரேமலதா: கவலைப்படாதே தம்பி... அடுத்த தேர்தல் வேட்பாளர் பட்டியல்ல நீ இருப்ப!

சுதீஷ் (மைண்ட் வாய்ஸ்): நான் இருப்பேன்... அதுவரைக்கும் கட்சி இருக்குமான்னு தெரியலையே!

FACEBOOK

VKarthik

“ `இந்தத் தேர்தல்ல எங்களை ஜெயிக்க வை சாமி’ன்னு கஷ்டமான வேண்டுதலவெச்சு உன்னைய கஷ்டப்படுத்த மாட்டேன் சாமி... என்னுடைய வேண்டுதலெல்லாம் அ.தி.மு.க எப்படியாவது ‘டெபாசிட்’ இழக்கணும். அது போதும் சாமி எனக்கு!”

Ambai Deva

“ஜெயலலிதாவிடமிருந்த பக்குவம் எடப்பாடிக்கும் வரணும்னு வேண்டிக்கிறேன்...”

“அப்படியே, நம்ம பையனுக்கும் பேச்சில் பக்குவம் வரணும்னு வேண்டிக்கக்கா!”

Ram Aathi Narayenan

“குக்கர் விசில் அடிக்கலேன்னாலும் பரவாயில்லை... முரசை எப்படியாவது கொட்டவெச்சுடு சாமி!”

Rajasingh Jeyakumar

பிரேமலதா: `நான்தான் முதல்வர்’னு ஏற்கெனவே கட்டின துண்டுச்சீட்டை எடுத்துடணும்னு தினகரன் சொல்றாரு... அதை எப்படி தேடிக் கண்டுபிடிப்பேன் கடவுளே!

Enos Ibrahim

“இது மாதிரி நிறைய சீட்டுகளெல்லாம் நாங்க கேக்கலை... 41 சீட்தான் கேட்டோம். கழட்டிவிட்டு, புலம்பவிட்டுட்டாங்களே சாமி!”

Laks Veni

“மக்கள் நலனுக்காக நாங்க அமைச்சுருக்கிற இந்தக் கூட்டணி, ‘மக்கள் நலக்கூட்டணி’யா ஆகிடாம நீதான் காப்பாத்தணும் மகமாயி!”

Kavi Chennappan

பிரேமலதா: நமக்கு முன்னாடி இங்க ஸ்டாலின் வந்துட்டுப் போயிருப்பாருன்னு நினைக்குறேன்!

சுதீஷ்: எப்படி சொல்றீங்க அக்கா?

பிரேமலதா: அதான் துண்டுச்சீட்டு நிறைய இருக்கே!”

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு