Published:Updated:

போட்டோ தாக்கு

கமல்
பிரீமியம் ஸ்டோரி
கமல்

அப்ப ‘லைட்ஹவுஸ்’ சின்னத்தல்ல வாங்கியிருக்கணும்!

போட்டோ தாக்கு

அப்ப ‘லைட்ஹவுஸ்’ சின்னத்தல்ல வாங்கியிருக்கணும்!

Published:Updated:
கமல்
பிரீமியம் ஸ்டோரி
கமல்

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

FACEBOOK

Kavi Chennappan

கமல்ஹாசன்: டார்ச்லைட் வெளிச்சம் ‘பவர்’ ஆகத்தான் இருக்கு. ஆனா, தேர்தல் ரிசல்ட்தான் ‘புவர்’ ஆகிடுச்சு.

Mani Pmp

கமல்: தலைக்கு மேல டார்ச் அடிச்சாருன்னு பார்த்தா... அது எனக்குக் காட்டின பல்புனு இப்பதான் தெரிஞ்சுது.

Ambai Deva

கமல்: நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா கட்சி ஆரம்பிக்கிறது தப்பு இல்லை!

மகேந்திரன்: நாலு பேர்கூட இல்லாம கட்சி ஆரம்பிச்சது தப்பு தலைவரே!

Ibrahim Fariyath

இந்த வெளிச்சத்தில்தான் தாமரை மலர்ந்தது...

Ram Aathi Narayenan

கமல்: நாளைய முதல்வர் நான்தான்!

மகேந்திரன் மைண்ட் வாய்ஸ்: இவருகிட்டேயிருந்து எஸ்கேப் ஆகுறதுல ‘முதல்வர்’ நான்தான்!

TWITTER

@LAKSHMANAN_KL

கமல்: இப்போது கட்சியிலிருந்து எலிமினேட் ஆகிறவர்கள், பின்னாளில் வைல்ட் கார்டு ரவுண்டு மூலம் மீண்டும் உள்ளே வர வாய்ப்புண்டு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

@Kirachand4

கமல்: பத்தலை.. டார்ச்லைட் வெளிச்சம் பத்தலை...

மகேந்திரன் (மைண்ட் வாய்ஸ்): அப்ப ‘லைட்ஹவுஸ்’ சின்னத்தல்ல வாங்கியிருக்கணும்!

@pbukrish

கமல்: அந்த டார்ச்லைட்டைக் கொஞ்சம் கொடுங்க தம்பி.

மகேந்திரன்: ஏண்ணே?

கமல்: லைட் அடிச்சு கட்சியில மிச்சம் எத்தனை பேரு இருக்காங்கன்னு பார்க்கத்தான்.

@JaNeHANUSHKA

கமல்: நண்பர் மகேந்திரன் ‘கட்சியில் ஜனநாயகம் இல்லை’ என்று கூறவில்லை. ‘ஜனநாயகம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என்றுதான் கூறுகிறார்!

@absivam

``அவரு விளக்கைப் பிடிக்கிறார். மக்களாகிய நீங்க கைதட்டறீங்க. இதுக்கு மேல கொரோனா எப்படிங்க இருக்கும்?!”

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.