Published:Updated:

போட்டோ தாக்கு

உதயநிதி - பிரசாந்த் கிஷோர்
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி - பிரசாந்த் கிஷோர்

கொங்கு பெல்ட்டுல உங்க வியூகம் செல்லுபடியாகலியே, அதுக்குண்டான பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டுப் போங்க.

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@BaluElango2

உதயநிதி: 200 சீட் எதிர்பார்த்தேன்!

பி.கே: நான் இன்னும் 200 சி எதிர்பார்த்தேன்!

@saravankavi

உதயநிதி: தேர்தல்ல எங்கள ஜெயிக்க வைக்க உங்களுக்கு ஒரு ‘எய்ம்’ இருந்த மாதிரி, எனக்கு ஒரு ‘எய்ம்ஸ்’ இருந்துச்சி!

@parveenyunus

பி.கே: அப்ப நான் கிளம்பட்டுமா..?

உதய்: அதான் நடக்காது... கொங்கு பெல்ட்டுல உங்க வியூகம் செல்லுபடியாகலியே, அதுக்குண்டான பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டுப் போங்க.

@sarathitup4

உதயநிதி: நம்ம ரெட் ஜெயண்ட் கம்பெனிக்கும் ஏதாவது ஐடியா கொடுக்கலாமே!

பிரசாந்த் கிஷோர்: கொடுக்கலாம்... ஆனா, எனக்கு கொடுக்கற சம்பளத்துல நீங்க பத்துப் படம் எடுத்திடலாம், பரவாயில்லையா?

@absivam

உதயநிதி: அஞ்சு கோடிக்கு ஒரு மினி புராஜெக்ட் பண்ண முடியுமா?

பி.கே: சொல்லுங்க... யாரை வார்டு மெம்பர் ஆக்கணும்?

FACEBOOK

வீர.கிருஷ்ணரத்னம்

உதயநிதி: இந்த நேரம் தாத்தா மட்டும் இருந்திருந்தால், ‘செங்கல்’ பிடித்து ‘செங்கோல்’ பிடித்தோம்னு உடன் பிறப்புகளுக்கு ஐந்து பக்கக் கடிதம் எழுதியிருப்பார் பிகே ஜி!

Uzhavan Navaneetha Krishnan

உதயநிதி: நன்றிக்கடனா, அடுத்த படத்துல என்னோட கேரக்டர் பெயர் பி.கே-தான்!”

பி.கே: நன்றியெல்லாம் வேண்டாம் உதய்... என் பெயரை யூஸ் பண்ணுறதுக்கு நீங்க சர்வீஸ் சார்ஜ் கொடுத்தா போதும்!

Pamaran Paramaguru

“ ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி இன்பநிதி’ எனும் நான் என்ற குரல் சட்டமன்றத்தில் கேட்கும் வரை நீங்க எங்ககூட இருந்தா போதும். மற்றபடி உங்ககிட்ட நான் வேறு எதையும் எதிர் பார்க்கல.”

Balu

உதயநிதி: உதவிக்கு நன்றி!

பி.கே: உதவிய நிதிக்கு நன்றி!

Maha Kavi Priyan

பி.கே: ம்... ஒரு செங்கல்லை வைத்தே அரசியலுக்கு அஸ்திவாரம் போட்டுக்கிட்டீங்க..!

உதயநிதி: ஒரு கல் ஒரு கில்லாடி!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan