ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSVKarthik
‘பன்னீரா’ இருக்கிற நம்மை ‘வெந்நீரா’க்காம விடமாட்டாங்க போலிருக்கே!
Sheriff
ஸ்டாலினைப் பார்க்கலாமா... அம்மா சமாதிக்குப் போகலாமா... சின்னம்மாவைப் பார்க்கலாமா... மோடியைப் பார்த்துட்டு வரலாமா... இல்ல பெரியகுளத்துக்கே திரும்பிப் போயிடலாமா... ஒரே குழப்பமா இருக்கே..!
Sivapriya Sivapriya
நாம பேசின ஆடியோவ என்னிக்கு ரிலீஸ் பண்ணப்போறாங்கன்னு தெரியலியே... ‘அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிலருந்து...’னு டைப் பண்ணி, அதுல என்கிட்டயே கையெழுத்து கேப்பாங்களே!?
Balu
எது நடந்ததோ, அது நன்றாக நடக்கவில்லை. எது நடக்கவிருக்கிறதோ, அதுவும் நன்றாக நடக்கப்போவதில்லை!
Rajasingh Jeyakumar
கட்சியிலருந்து ஒரு மாஸ்க்கூட தர மாட்டேங்கிறாங்க. ஆனா, தனிமைப்படுத்துறதுல மட்டும் ரொம்ப குறியா இருக்காங்க!
@macchu_offcl
பிரியாணி சமைச்சும், கடைசியில குஸ்கா மட்டுமே மிஞ்சும் மொமன்ட்!
@Vkarthik_puthur
‘வடை’ சுடுற ஜி-க்கே ‘மிக்ஸர்’ கொடுத்தவன் நான். அப்பேற்பட்ட எனக்கே ‘அல்வா’ கொடுக்குறாங்களே?!
@LAKSHMANAN_KL
உசுப்பேத்தறவன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்தறவன்கிட்ட கம்முன்னும் இருந்தா... கடைசிவரைக்கும் ‘துணை’யாத்தான் இருக்கணும்போல!
@RavindranRasu
மொத்த அ.தி.மு.க-வுமே உன்னை எதிர்த்தாலும்... மத்த கட்சிக்காரங்களெல்லாம் ‘நீ தோத்துட்ட... தோத்துட்டே’னு உன் முன்னாடி நின்னு அலறினாலும்... நீயா ஒத்துக்குறவரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது... நெவர் எவர் கிவ்அப்!
@LAKSHMANAN_KL
‘எஞ்சாயி... எஞ்சாமி!’னு பாட வேண்டிய என்னை... ‘ஏமாத்திட்டீங்களே பழனிசாமி’னு பாடவெச்சுட்டாரே!
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan