Published:Updated:

போட்டோ தாக்கு

தினகரன் - சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
தினகரன் - சசிகலா

நீங்க நினைக்கிற மாதிரி இவங்க ஒண்ணும் நம்ம கட்சித் தொண்டர்கள் இல்லை. உங்களோட ஆடியோ லாஞ்சுக்காகக் காத்திருக்கிற ரசிகர்கள் சின்னம்மா

போட்டோ தாக்கு

நீங்க நினைக்கிற மாதிரி இவங்க ஒண்ணும் நம்ம கட்சித் தொண்டர்கள் இல்லை. உங்களோட ஆடியோ லாஞ்சுக்காகக் காத்திருக்கிற ரசிகர்கள் சின்னம்மா

Published:Updated:
தினகரன் - சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
தினகரன் - சசிகலா

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

TWITTER

@maha40176220:

தினகரன்: வீட்டுல குழந்தை சாப்பிட மாட்டேன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுதாம்... நீங்கதான் போன்ல பேசிச் சாப்பிடவெக்கணும்னு கேட்டு வந்திருக்கார் ஒருத்தர்!

@Vkarthik_puthur

“நீங்க நினைக்கிற மாதிரி இவங்க ஒண்ணும் நம்ம கட்சித் தொண்டர்கள் இல்லை. உங்களோட ஆடியோ லாஞ்சுக்காகக் காத்திருக்கிற ரசிகர்கள் சின்னம்மா!”

@Vkarthik_puthur

சசிகலா: இனியும் என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது!

தினகரன்: பேசாம கிளம்பி ‘ஷாப்பிங்’ பண்ண போயிடுங்கம்மா!

@LAKSHMANAN_KL

“இப்படியே ஆடியோவுல மட்டும் பேசிக்கிட்டே இருந்தீங்கன்னா... ‘ஆயிரம் ஆடியோ ரிலீஸ் செய்த அபூர்வ சின்னம்மா’ங்கிற பட்டம் வேணா கிடைக்கும்... அ.தி.மு.க கிடைக்காது..!”

@LAKSHMANAN_KL

சசிகலா: இந்த இக்கட்டான நேரத்தில் ஓ.பி.எஸ் நமக்குத் துணையா இருப்பார்னு நெனச்சேன்...

தினகரன்: ரொம்ப நாளாவே அவர் ‘துணை’யா மட்டும்தான் இருக்காரு சித்தி!

@parveenyunus

தினகரன்: நம்ம கட்சியில சேர்றதுக்காக வரும் கூட்டத்தைப் பாருங்க...

சசிகலா: நான் விசாரிச்சேன் தினகரன்... அவங்கல்லாம் உங்ககிட்ட டோக்கனைக் கொடுத்துட்டுப் பணம் வாங்கிட்டுப் போக வந்தவங்களாம்!

@LAKSHMANAN_KL

தினகரன்: சும்மா இருக்கிறதுக்கு பதிலா, அ.ம.மு.க பொதுச்செயலாளரா ஆகலாம்ல சித்தி?!

சசிகலா: அதுக்கு சும்மாவே இருக்கலாம்..!

@pbukrish

தினகரன்: அடுத்து மோடிக்கு போன் போட்டு, ஆடியோ ரிலீஸ் பண்ணி... அவரைக் கட்சியைவிட்டு நீக்கவெப்போமா சித்தி?!

@San8416

டி.டி.வி: நீங்க வெளியில வந்ததுக்குப் பிறகே இப்படி நடந்துக்குறாங்களே... நாலு வருஷம் இவங்க பிரஷரை எப்படிச் சமாளிச்சுருப்பேன்னு யோசிச்சுப் பாருங்க!

சசி: ஓ... அதனாலதான் குக்கர் சின்னம் வாங்கிட்டியாப்பா!

@balasubramni1

டி.டி.வி: அதோ... அந்த ஆளைப் பாருங்களேன், ‘ஆடியோ ரிலீஸ் பண்ணிட்டீங்க... அடுத்து டீசர் எப்போ ரிலீஸ் பண்ணுவீங்க?’னு கேட்கறான்!

FACEBOOK

அதிரை புகாரி

சசிகலா: அந்த நிருபர் என்ன கேக்கறாரு?

தினகரன்: அப்போலோ ஆஸ்பத்திரியில உண்மையிலேயே ஒரு இட்லி என்ன விலைன்னு கேக்கறாரு!

Kavi Chennappan

“சொன்னா புரிஞ்சுக்கங்க சித்தி... வடகொரியா அதிபரோடல்லாம் போன் பேச முடியாது..!”

Uzhavan Navaneetha Krishnan

தினகரன்: நீங்க வரும்போது ‘சிங்கப் பெண்ணே...’ பாட்டுதான் போடச் சொன்னேன். இதோ இந்தத் தொண்டர்தான் ‘டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா...’ பாட்டைப் போட்டவர்!

Rajasingh Jeyakumar

தினகரன்: கட்சிக்கு ‘ஐடி விங்’ மாதிரி ‘ஆடியோ விங்’ ஒண்ணு தொடங்கியிருக்கோம். உங்க ஆடியோ தொடர்பான விஷயங்களை இனி அவங்கதான் பார்க்கப்போறாங்க!

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism